நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, November 15, 2014

அஜீரண நினைவுகள்



அஜீரண நினைவுகள்
......................................
கனவுகள்
காலத்தீயின் தணல்களில்
கூதல் காய்கின்றன
நினைவுகள் ஓலமிட்டு
மோதித்திரிகின்றன!


பூமியல்ல நான்
புதுக்கோளம்
எனினும் தவறாமல்
என்னையும்
சுற்றிக்கொண்டு
நாளொன்றும் உன்னையும்
அந்தரத்தில் சுற்றுகிறேன்
பம்பரமாய்ச் சுழல்கின்றேன்!

இறக்கி வக்க வைக்க
புதுசு புதுசாய் சுமைகள்
எங்கிருந்தோ வருகின்றன
மறுக்க முடியால்
பெருமூச்சுடன் சேர்த்து
அனைத்தையும் சுமக்கின்றேன்
நீ வரும்வரை !

மனசுக்குள் அஜீரணம் போலும்
அநேக நினைகள்
இன்னும் சமிபாடடையாமல்
ஏப்பமாக எப்பொழுதுமே
வருகின்றன
ஆனால் வழமைக்கு மாறாக
ஏப்பம் புளிக்காமல் இனிக்கிறது!

தனிமையில் மனம்
கசப்புகளுக்கு
சுவை மாற்றம்செய்யும் வித்தையில்
தேர்ச்சி பெற்றுவிட்டது !

உருகி உருகிக் கரைந்த உள்ளம்
உள்ளுக்குள்ளே உன்
உருவம் வரைந்து தள்ளும்
உயிர்மட்டும் அருவமின்றி
உன்னைப்பற்றிகொள்ளும் !

கூடு மட்டும் இங்கு
தனிமையில் வாடுதடா
கட்டுக்கடங்காத ஆவி அங்கு
உனைத்தேடி காற்றோடு ஓடுதடா!

மு.இ.உமர் அலி
2014 Nov 15th