நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, October 13, 2014

சிற்றெறும்பு!




சிற்றெறும்பு!
.......................
குனிந்து கூர்ந்து பார்த்தேன்
ஊர்ந்து ஊர்ந்து ஒரு ஓடையே தெரிந்தது.
கூட்டமாய் அணிவகுத்து விரைவது
எந்தக்கோட்டையைப் பிடிக்கவோ?

நிரைகளைப் பார்க்கையில் மாணவத்தலைவன்
நினைவுக்கு வருகிறான்!
"சுலைமான் " போல எனக்கும் அவற்றின் மொழி
தெரிந்திருந்தால் நிச்சயம் குசலம் விசாரித்திருப்பேன்!
நிறைய கற்றுக்கொண்டும் இருப்பேன்,
 ஆனால் எனக்குத்தான் அது தெரியாதே!

நாம் நினைக்கிறோம் எறும்பு அலையுதென்று
தவறு அது அலுவலாகவே திரிகிறது
அப்பியாசக்கூடத்திற்கு அது போகுதோ தெரியாது
ஆனால் கச்சிதமாய் உடம்பை வச்சிருக்கு!

அவை வட்டிக்கு கொடுப்பதில்லை
வங்கியில் கடனுமில்லை
ஆனால் முதலீடில்லாத அவற்றிடமோ
சேமிப்போ மிக அதிகம்!

கடித்துக்கொண்டு காதல் செய்யும் அவை
அடித்துக்கொள்வதில்லை
தட்டிப்பறித்து உண்பதுமில்லை
சுற்றிநின்று கடித்துத் தின்னுகின்றன !

ஆறுகால்கள் இருந்தாலும் அவை
ஆறுதலாய் இருந்ததையும்
மல்லாக்கப்படுத்து உறங்கியதையும் யாரும்
இதுவரை காணவேயில்லை!

கரும்பைச்சுவைக்கும் இரும்பை மிதிக்கையில்தான்
கடிக்கின்றது ,அதுவும் இனிப்பென்று நினைத்து
வயிறுபுடைக்க உண்ட பின்பு அது
வாந்திஎடுத்ததுண்டா
இல்லை பேதிக்குத்தான் போனதுண்டா?

எனக்கு எறும்பை எடுத்து வளர்க்க ஆசை
ஆனால் எனது சோம்பல் அதற்கு தொற்றிவிடுமோ
என்று ஒரு அச்சம். ,சிலவேளை அதன் சந்ததிகளின்
சுறுசுறுப்பு சிறுகச்சிறுக குறைந்து விடலாம்!

அவற்றுக்கு முகச்சவரம் செய்யவோ
சிகையலங்கரிக்கவோ அதிக நேரம் செல்வதாக தெரியவில்லை!

அவற்றின் மருத்துவ மனைகள் எப்படி இருக்கும்?
ஊசிபோட்டு மருந்து கட்டுபவர்கள் யாரோ?
நிச்சயமாக அந்த மருத்துவமனை
நேரத்துக்கு இயங்குமாக்கும் வரிசைகளிலும்
குழைவு இருக்காது !

மழை வருவது அவற்றுக்கு நன்கு தெரியுமாம்
எமது வானிலை அதிகாரிகளுக்கு
பிரத்தியேக வகுப்பெடுக்க ஒருமுறை
வரவழைக்க வேண்டும்!

பெயரிடப்படாத சாம்ராஜ்யங்களும்
முடிசூடா மன்னர்களும் இன்னும் இவர்களுக்குள்
இருக்கிறார்கள் ,அந்தப்புரமோ மிக விசாலம்!

சுரங்கத்தொழிலில் இவற்றுக்கு நல்ல தேர்ச்சி
இருட்டிலும் சுரங்கமறுக்கின்றன
ஆனால் தொழில்சங்கம் கிடையாது
சேமலாப நிதியும் இருக்காது!

மலிந்த பண்டங்களை இவை
வலிந்து கொண்டு சென்று
பதுக்குவது விலை கூடினால் விற்பதற்கல்ல
பஞ்சத்தில் பகிர்ந்துண்ணத்தான்!

சடலங்களையும் ,விபத்துற்றவரையும் இவை
நம்மைப்போல் கடந்து செல்வதில்லை
கவனமாக காவிச்செல்கின்றன !

எறும்பிடம் நமக்கு எத்தனையோ பாடமுண்டு
ஆனால் நம்மிடம் கற்றுக்கொள்ள
எறும்புக்கோ எதுவுமில்லை!

மு.இ.உமர் அலி
2014 oct 13th — with Meera Mahroof, தடாகம் கலை இலக்கிய வட்டம், ஸமானின் கவிதைகள் ஸமான் and 43 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



வெண்ணிலா வெண்ணிலா, றாபியின் கிறுக்கல்கள்., Moiden Syed and 98 others like this.
3 shares

Moh Jahaabarali

Yesterday at 08:23 · Unlike · 1

Najimudeen Ahmad yerumbukku nee sevilith thaayo....yeduttha yeduppil yewwalavuthaan sollip puuddai...vaddikkum, pathukkalukkum nalla muthleedu....pahirnthunnum thannmai nalla pawwiyam...."Sulaiman" ai maddum adai mozli illaamel summa solli viddaai...
Yesterday at 08:29 · Unlike · 2

Govind Dhanda எறும்பின் ஆராய்ச்சி அருமை!

எறும்பிடம் கற்றுக்கொள்ள நிறையயிருக்கு
மனிதனிடம் கற்றுக்கொள்ள என்ன் இருக்கென்று அருமையிலும் அருமை!

மனிதன் வஞ்சகத்தின் விளைநிலம் சகோதரரே.......
Yesterday at 08:37 · Unlike · 4

Jaleel Mohd அருமையாக அழகாக சொல்லியுள்ளீர்கள் எறும்பு கடித்த வலியை உணர்த்தியது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் Umar..
Yesterday at 08:47 · Unlike · 2

இ.பியின் இதய இரைச்சல்கள் சுலைமான் போல...
எமக்கும் அதன் மொழி..
தெரிந்திருந்தால்/////
அருமை நண்பரே..!
Yesterday at 08:56 · Unlike · 2

Thirugnanasampanthan Lalithakopan கடித்துக்கொண்டு காதல் செய்யும் அவை
அடித்துக்கொள்வதில்லை
தட்டிப்பறித்து உண்பதுமில்லை
சுற்றிநின்று கடித்துத் தின்னுகின்றன...கற்றுக்கொள்ள வேண்டியவை
Yesterday at 09:04 · Unlike · 6

Siraj Ahamed · Friends with Shafath Ahmed and 6 others
எறும்பிடம் நமக்கு எத்தனையோ பாடமுண்டு
ஆனால் நம்மிடம் கற்றுக்கொள்ள
எறும்புக்கோ எதுவுமில்லை!- ...Excellent ......
Yesterday at 09:39 · Unlike · 1

Samalfasi Rufi // அவை வட்டிக்கு கொடுப்பதில்லை
வங்கியில் கடனுமில்லை
ஆனால் முதலீடில்லாத அவற்றிடமோ
சேமிப்போ மிக அதிகம் //

நல்லதோர் படிநிலையான எடுத்துக்காட்டு ...,

// ...நம்மிடம் கற்றுக்கொள்ள
எறும்புக்கோ எதுவுமில்லை//

சுப்பார்ர்...

// எனக்கு எறும்பை எடுத்து வளர்க்க ஆசை //

அழகானதோர் மனோ நிலை.. வாழ்த்துக்கள் அன்பரே வாழ்வில் வளம்பெற ...
Yesterday at 09:59 · Edited · Unlike · 1

Musthafa Bashier · Friends with Mansoor A Cader
I like it
Yesterday at 09:59 · Unlike · 1

Mohamed Faiz எறும்புக்குக் கூட
எடுத்துச் சொல்ல் எம்மிடம்
எதுவுமில்லாத
இயலாமையை எடுத்துச் சொன்ன
உன் வரிகளில்
ஏராளம் வாழ்வியல் தத்துவம்
பொதிந்தது கண்டேன்
பூரித்தேன்
வாழ்த்துக்கள்
Yesterday at 10:04 · Unlike · 5

Elango Elangovan · 12 mutual friends
Aerumpidam karkavendiyathu aeralami erupathai, namkavi namkku tharalami varaintha kaviyo.
Yesterday at 10:24 · Unlike · 2

Kaleel Rahman MASAALLAH AVAI VADIKU KODUPATHILAI VANKIYIL KADANUMILLAI AANAL MUTHALEEDU ILLATHA AVATRIDAMO SEMIPO MIHA ATHIHAM.

ARUMAYANA UVAMAI VARIHAL MANITHA IVISAYATHIL ERUMPAI PARTHU VALAA PALAHA VENDUM
Yesterday at 10:26 · Unlike · 1

Sathya Narayanan · 10 mutual friends
மிகவும் அருமை! கவிஞரே!! வாழ்த்துக்கள்! !!
Yesterday at 10:39 · Unlike · 1

Vetha Langathilakam · 22 mutual friends
Arumai..
Yesterday at 11:01 · Unlike · 1

RikaZz Aßdullah Superb!
Yesterday at 11:23 · Unlike · 1

எம். யூ. அல்சாத் fantastic.!
Yesterday at 12:31 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் ஆஹா அற்புதம் சகோதரா ஒவ்வொரு வரிகளும் அப்படியே அடி மனதை வருடுகிறது மட்டுமன்றி கடைசி மூன்று வரிகளுமே மனதை சுருக்கென்று சுட்டது வாழ்த்துக்கள் சகோதரா
23 hrs · Unlike · 4

Malikka Farook எறும்பிடம் நமக்கு எத்தனையோ பாடமுண்டு
ஆனால் நம்மிடம் கற்றுக்கொள்ள
எறும்புக்கோ எதுவுமில்லை!//வேண்டாம் நம்மிடம் அது எதையும் கற்கவேண்டாம்.பாவம் அது பிழைத்திருக்கட்டும்.. அருமையான வரிகள் சகோ..
22 hrs · Edited · Unlike · 3

Dushyanthi Dushy அருமையான கற்பனை
சுட்டுப்போட்டாலும் வராத
அற்புதப் பாடங்களை சொல்லித்
தந்தன இந்த ஆறுகால் கூட்டம்
புரிந்துகொள்ள ஞானமில்லை
மாயம் போர்த்த மனிதனுக்கு
பார்த்துப் பாடம் கற்றோர்
பாரிலே மேதைகளானார்
பழித்து தூற்றினோர்
வாழ்விலே தோல்வி கண்டார்
சாவிலும் உடன் வரும் எறும்பினமே
என் சவத்தையும் மண்ணில்
சேர்க்கும் கடமை உனதே...!!!
22 hrs · Unlike · 3

Velavan Athavan கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எறும்புகள் இவ்வுலகில் - மனிதன் குறுடனாய் செவிடனாய் உண்டு கொழுத்து உலகையே தின்கிறான். அருமைச் சித்திரம் இது அழகு ..
22 hrs · Unlike · 1

Kalia Nthna · Friends with புலவூரான் ரிஷி and 3 others
நமக்குத்தான் எத்தனையோ வியங்கள்உள்ளதுகற்றுகொள்வதற்கு
22 hrs · Like

Mohamed Faize Superb!
22 hrs · Unlike · 1

Mohamed Faize பிரமாதம்
22 hrs · Unlike · 1

Kalia Nthna · Friends with Rathy Srimohan and 3 others
நன்றி
22 hrs · Unlike · 1

Ratha Mariyaratnam எறும்பும் மனிதனும்
ஏணி வைத்தாலும் எட்ட முடியாது
இத்தனை சிறிய உருவம்
போதிக்கும் அத்தனை பெரிய உண்மை
கட்டமைப்பு உழைப்பு சேமிப்பு
நாம் ஏற வேண்டிய ஞான உபதேசம்
அருமை சகோ ...வாழ்த்துக்கள்
21 hrs · Unlike · 1

Vanitha Solomon Devasigamony அவை வட்டிக்கு கொடுப்பதில்லை
வங்கியில் கடனுமில்லை
ஆனால் முதலீடில்லாத அவற்றிடமோ
சேமிப்போ மிக அதிகம்!
கடித்துக்கொண்டு காதல் செய்யும் அவை
அடித்துக்கொள்வதில்லை
தட்டிப்பறித்து உண்பதுமில்லை
சுற்றிநின்று கடித்துத் தின்னுகின்றன! அருமை!
21 hrs · Unlike · 1

Gowry Sivapalan சின்ன ஊர்வனவற்றை உற்றுப் பார்த்த உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். அற்புதமான திறன்கள் நிறைந்த இவற்றின் தன்மைகளை மனிதன் புரிந்து கொள்ளாது. உலகப் படைப்பு அனைத்தும் தமக்கே உரிமையானது என்று மமதை கொள்கின்றான்
21 hrs · Unlike · 1

Amier Ali MI really superb lines
20 hrs · Unlike · 1

Mohamed Ismail Umar Ali எறும்பு ஊர்ந்ததை கூர்ந்து கவனித்து கருத்திட்ட அன்புள்ளங்கள் Amier Ali MI,Gowry Gowry Sivapalan,Vanitha Vanitha Solomon Devasigamony,Ratha Ratha Mariyaratnam,Kalia Kalia Nthna,Mohamed Mohamed Faize,Moh Moh Jahaabarali,Velavan Velavan Athavan,Dushyanthi Dushyanthi Dushy,Malikka Malikka Farook,தமிழ்ப் பித்தன்,எம். யூ. அல்சாத்,RikaZz RikaZz Aßdullah,Vetha Langathilakam,Sathya Narayanan,Kaleel Kaleel Rahman,Elango Elangovan,Mohamed Mohamed Faiz,,Musthafa Musthafa Bashier,Samalfasi Samalfasi Rufi,Najimudeen Najimudeen Ahmad,Siraj Siraj Ahamed,hirugnanasampanthan Thirugnanasampanthan Lalithakopan,இ.பியின் இதய இரைச்சல்கள்,Govind Govind Dhanda,Jaleel Jaleel Mohd உட்பட விருப்பிட்டனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
19 hrs · Like · 4

புலவூரான் ரிஷி எறும்பிடம் நமக்கு எத்தனையோ பாடமுண்டு
ஆனால் நம்மிடம் கற்றுக்கொள்ள
எறும்புக்கோ எதுவுமில்லை!
19 hrs · Unlike · 1

Mohamed Rayis Ismail · 197 mutual friends
தவறிவிழும் ஒருபருக்கை சோற்றின் அருமை நமக்குத் தெரியாது
பஞ்ச காலத்துக்காய் சேமித்துவைக்க சுமந்து செல்லும் அவற்றுக்குத்தான் அது புரியும்.
18 hrs · Unlike · 1

மா.சித்ரா தேவி அவை வட்டிக்கு கொடுப்பதில்லை,வங்கியில் கடனுமில்லை அருமை சகோ
18 hrs · Unlike · 1

Mohamed Ismail Umar Ali எறும்பு ஊர்ந்ததை கூர்ந்து கவனித்து கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு புலவூரான் ரிஷி,Mohamed Mohamed Rayis Ismail,மா.சித்ரா தேவி மிக்க நன்றி
17 hrs · Like · 1

Josephine Theresa · Friends with Francis Ambrose
Wow, what an expression about the tiny ants. Of course we have to learn a lot from these tiny creatures. Thanks for the kavithai.
16 hrs · Unlike · 1

Usanar Saleem எறும்பைப்பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்! அருமையான கவிதை சகோதரா.,வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
15 hrs · Unlike · 1

Zainab Mariyam What a poem what lines awesome brother gazzali congrats ant world is very different its language only known hazrath sulaiman (pbuh ) nabi ....
15 hrs · Unlike · 1

Rajesh Kani · Friends with Valli Muthu


14 hrs · Unlike · 2

தேவி பாலா மிக அருமை அண்ணா

எறும்பு மட்டுமல்ல

எப்பொருளையும்

அதன் முழு நிலையும்
முக்தி நிலையில் நின்று

உள்ளம் கசிந்து எழுதும்
சிறந்த படைப்பாளி

தொடக்கம் முதல்
இறுதி வரை

அதன் ஒவ்வொரு வரிகளையும்

அணு அணுவாய்
உணர்ந்து ரசித்து

வாசிப்பவரின் மனதை
வசியம் செய்யும்
வித்தகர்

நீன்ட நாளுக்கு பின்
நான் ரசித்து வியந்த

உங்கள் அற்புத படைப்பு

வாழ்த்துக்கள்
14 hrs · Unlike · 2

Bhelnagar Raj · 7 mutual friends
எரும்புகள் சரியான் திருடர்கள். சேமிப்பை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்
5 hrs · Unlike · 1

Krishnan Mahadevan ARUMAI...
1 hr · Unlike · 1

Moiden Syed miga arumai
1 hr · Unlike · 1

றாபியின் கிறுக்கல்கள். வாழ்த்துக்கள் நண்பா
அருமையான வரிகள்.
44 mins · Unlike · 1

Friday, October 10, 2014

மணற்கொள்ளை









மணற்கொள்ளை!
..................................
அழகான ஆற்று முற்றம்
அது ஒரு அதிசய சோலை
அதனோரம் சிறு சாலை !

சுற்றுமுற்றும் புள்ளினங்கள்
காலடியில் மலர்ந்த பூவினங்கள்!

மலையில் பொழிந்த மழை
அதன் மடியில் தவழ்ந்து வழியும்
வளர்ந்து விளைந்த மீன்கள்
கரையில் நீந்தித்தவழும்!

ஓங்கி உயந்த மரங்கள்
நிலத்தைத் துளைத்து படர்ந்த வேர்கள்
சிரிக்கும் மூங்கில் வேர்கள்
மண் அரிப்பை நன்கு தடுக்கும் வீரர் !

மண்புட்டி வெட்டிப்பணித்தான்
மணல் ஏற்றி ஏற்றிக் குவித்தான்
வரம்பைக்கொத்தி அரித்தான்
தன வயலின் பரப்பை வளர்த்தான்!

விலை கூடக்கூட மனிதன்
ஆசையின் பிடியிலமிழ்ந்தான்
ஓடை மண்ணை அகழ்ந்தான்
ஆற்றோர வரம்பையும் இடந்தான்

ஆறு கிடந்து அழுதது அவர்
காலைத்தொட்டு தொழுதது
தண்ணீரால் கழுவியது!

கேட்டானா மனிதன்
இல்லவே இல்லை
ஆற்றுப்படுக்கைகளை அகலமாக்கினான்
புற்களைக்கிண்டி தன் வீட்டு
முற்றத்தில் நட்டான்
அவன் வீடு அழகானது
ஆற்றின்கரை அவலமானது!

வருடாந்தம் உலாவரும் வெள்ளம்
நுரை கிளம்ப
கரை ஒதுங்கி
இம்முறை நேரகாலத்துடன் வந்தது
ஆறு அதனிடம்
மனுக்கொடுத்தது

தான் தேரோடும் வீதி
வேரோடியிருந்த மரங்களின்றி
வெறிச்சசோடிக்கிடந்ததது கண்டு
வெள்ளத்தின் உள்ளம் தவித்தது ,
தான் தரித்துநிற்க நிழலின்றி
துடித்தது
தடவிச்சென்ற புற்கள்
தடமே இல்லாமல்
இடம்பெயர்ந்த இடத்தினூடாக
சினத்துடன் பிரவாகித்து
பிரவேசித்தது

அறுவடைக்குத்தயாராகியிருந்த
அப்பாவியின் கழனியை
கலக்கியழித்துச்சென்றது
அழித்தவர்களைத்தேடியது
அகப்படவேயில்லை!

அடுத்தமுறை பார்க்கலாம் என்று
கடலுக்குச்சென்றது

மண்ணகழ்வான் மனமகிள்வாய்
மக்களுடுன்
மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!



மு.இ.உமர் அலி
2014 OCT 1O
Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



AJ Farshath, Rusan Mohamed, Ahsan Mim and 39 others like this.

Kavithaayini Nila மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!...arumaip padaippu...
10 October at 15:51 · Unlike · 1

நெடுந்தீவு அரவிந் #Super_super_manam_vethanai#adikirathu
#இனிய_மாலை
#வணக்கம்_உறவே
10 October at 15:52 · Unlike · 1

வளர்மதி சிவா மண்ணகழ்வான் மனமகிள்வாய்
மக்களுடுன்
மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!// அருமை
10 October at 16:13 · Unlike · 2

Zanal Ali Arumai
10 October at 16:25 · Unlike · 1

Kaleel Rahman Very nice
10 October at 16:27 · Unlike · 1

Thirugnanasampanthan Lalithakopan விலை கூடக்கூட மனிதன்
ஆசையின் பிடியிலமிழ்ந்தான்
ஓடை மண்ணை அகழ்ந்தான்
ஆற்றோர வரம்பையும் இடந்தான்
10 October at 18:39 · Unlike · 3

Fasil Mohamed Arumai
10 October at 19:24 · Unlike · 1

Junaideen Athambawa யதார்த்தம்.
10 October at 19:47 · Unlike · 2

Usanar Saleem காலத்தின் கண்ணாடிதான் உங்கள் கவிதை .என் இனிய நல்வாழ்த்துக்கள் சகோதரர் உமரலி!

10 October at 20:06 · Unlike · 2

Ahsan Mim அர்த்தமிக்க அழகிய வரிகள் ...
11 October at 22:03 · Unlike · 1


Write a comment...