நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, September 29, 2014

பார்வை ஒன்று கொண்டிருக்கி !


 
 
பார்வை ஒன்று கொண்டிருக்கி !
...........................................

நல்லா இருந்த பிள்ளை
இப்ப நடுங்கி நடுங்கி கதைக்கிறான்
ஒதுங்கி மூலையில் பதுங்குகிறான்
விழி பிதுங்கி பிதுங்கி முழிக்கிறான்!

அரக்கப்பரக்க பார்க்கின்றான்
உரக்கப்பேசினா திடுக்கிடுறான்
பிள்ளை சிரிச்சி நாளாச்சி
முகத்தில முடியும் வரும் வயசு!

தண்ணி ஓதி அடிக்கணும்கா
தம்பிய தனிய வெளியால விடாதகா
பரிசாரியப் பார்க்கணுங்கா புள்ளைய
வெளிசாக்கி நாம எடுக்கணுங்கா!

பரிசாரி வாறார் தோழில் துண்டோடு
தலையிலுமொரு வெண் முண்டாசு
தம்பியப்பார்க்கிறார் தலைகீழா
உசரத்தை அளக்கிறார் கண்ணூடா !

தலையை ஆட்டுறார் தன்னாலே
நோயத் தேடுறார் கண்ணாலே
தொடையால் தாளம் போட்டு
விரலால் தட்டுறார் தரைமேலே

மடையக் கிடைய கடந்தாயா
சுடலப்பக்கம் போனாயா
கடலில தனிய நனைந்தாயா
கறுத்த நாய்கண்டு பயந்தாயா?

மசண்டைக்க மரத்தடி நின்றாயா
உச்சியநேரம் ஒசந்த மரத்தடி தரித்தாயா
அங்கெலாம் தம்பி ஒனக்கென்ன வேல
அச்சிரம் முறிஞ்சிட்டு அதுதான் காரணம் !

கேள்வியும் அவரே பதிலும் அவரே
பல்லை நறும்புறார் பலமுறை
பேயுடன் பேசுறார் நமக்கு புரியலை
இல்லை என்கிறார் மறுத்து
தலையை அசைகிறார் வெறுத்து!

கண்ணை மூடி கடுந்தவம்
பிறர் நெஞ்சுக்குள்ளோ பெரும் பயம்
திண்ணை கோடி எல்லாமே
திமித்துப்போகுது ஒருகணம்!

பட்சி பறந்து போகையில
பகலடங்கி ஒடுங்கையில
பார்வை ஒண்டு கொண்டிருக்கி
புள்ள அதில பயந்திருக்கி!

பயப்பிட ஓண்டும் தேவையில்ல
இதுல குறிப்பிட்டுச்சொல்ல எதுமில்ல
பத்தியம் காக்கணும் பத்துநாள்
இது கட்டாயம் போயிடும் தன்னால்

தண்ணி ஓதி அடிச்சிருக்கன்
வெள்ளி வரைக்கும் பொறுத்திருங்க
வெள்ளிக்கூடு வாங்கிக்கங்க
மகரிக்கு முன்னே நான் வாறன்

இடையில ஏதும் நடந்ததுண்டா
பத்திரக்கொத்தால் தலையிலடி
நித்திரையில் கத்தினால் முகத்தில் ஓங்கியடி
அதுக்குங்கேளாட்டி தூ...த்தூ ... என்று
பக்கத்தில் காறித் துப்பு!

கொடுத்த காசை
இடுப்புப்பட்டியில் செருகிக்கிட்டு
கொடுப்புக்குள்ளால் சிரிச்சிக்கிட்டு
அடுத்த வீட்டுக்கு போறார்
அவரது அன்றாடத்தொழிலைப் பார்க்க!

மு.இ.உமர் அலி
2014.Sept 30th

Saturday, September 27, 2014

மழையால் கல்லெறிவாய் இறைவா!





















மழையால் கல்லெறிவாய் இறைவா!
......................................................................

பஞ்சசீலம் கூறிக்கொண்டு
மஞ்சட்சீலை கட்டிக்கொண்டு
கொஞ்சம்கூட இரக்கமின்றி
கொன்று குவித்தவன் வருகிறான் !

கௌதமர் கூறியதை
கனவிலும் கடைப்பிடியான்
கௌரவர் படைசேர்த்து
தர்மரைத் தாக்க வர்றான்!

விஜயங்கள் செய்தால் நல்
விசயங்கள் நடக்கணும்
விசங்கொண்ட விலங்கு
விருந்தெங்கனம் வைக்கும்!

கொழுத்த மந்தைக்கூட்டம்
பொருத்தமற்ற மேய்ப்பர்கள்
பிரிந்துகொண்டு நாங்கள் மேய்கின்ற நேரம்
காவியுடையுடன் கசாப்புக்கடைக்காரன்
தைரியமாய் களமிறங்குகின்றான்!

அவனிடம் கூரான கத்தியில்லை
கட்டுவதற்கு கயிறுமில்லை
ஆனால் நன்கு தீட்டப்பட்ட
குள்ளநரிப்புத்தியிருக்கிறது
உரத்துப்பேசுவதற்க்கு
திறந்த மேடையும்
இரத்தவெறிபிடித்த
பார்வையாளர்களும் இருக்கின்றார்கள்!

அவனால் மொத்தப்பேரையும்
இல்லாவிடினும் முக்கியமானவர்களை மட்டும்
மூளைச்சலைவை செய்ய முடியும்!

கௌதமரின் போதனைகளை
புதைத்துவிட்டு
அதர்மத்தின் போதனைகளை
மலிவடையச் செய்வான்!

வன்மம் நிரந்த கண்கள்
இன்னும் முன்னேறாத அவனது
தொன்மம் நிறைந்த எண்ணம்
ஒரு துருப்பிடித்த உள்ளத்துடன்
புதிய ரணங்களுக்கு
பதியமிட பரிவாரங்கள் சூழ
வருகிறான்!

அவன் சீழ் வடியும்
சிரங்குகளைக் நிச்சயம் கிண்டுவான்
அங்குள்ள அருவருப்பான புழுக்களை
பிடித்து தின்னுமாறு மற்றவர்களையும் பழக்குவான்
மியன்மாரில் அவன் ருசித்ததை சப்புக்கொட்டுவான் !

உயிர்கொல்லல் அதர்மம்
என மறந்து
கொல்லலே தர்மமென்று
சொல்லும் "அலுகோசு"
ஆரவாரமாய் வருகிறான்!

அவனது அங்கவஸ்திரம்
அப்பாவிகளின் குருதி கலந்தே
அடிக்கடி சலவை செய்யப்படுகின்றது
அது சாயம் போகும்போது
அவன் மீண்டும் பாவம் செய்கிறான்!

ஒற்றை நித்திரைக்குளிசைக்கு
இங்கு தடை
ஆனால்
ஆயிரம் போதை மாத்திரைகளுக்குச் சமனான
அவன் வார்த்தையும், வருகையும்
இன்னும் தடைசெய்யப்படவில்லை !

நாங்கள் ஜனநாயகத்தின்
தேசத்தின் தேசியக்கொடி
வீழ்ந்துவிடாமல் இன்னும்
தாங்கிக்கொண்டிருக்கிறோம்!

சிலவேளை
எங்கள் படையினர்
மனசாட்சியுடன் நாளை
மௌன யுத்தம் மட்டும் செய்யலாம்
பிறரிடம் கூறினால் செயலிழந்துபோகும்
மந்திரக்கட்டளை அவர்களுக்கு
சிலவேளை வந்திருக்கலாம்!

அவிழ்த்தவாறே
அவர்கள் கட்டப்பட்டிருக்கும்
சிலவேளை உத்தரவிடுபவர்
திடீர் பயணங்கள் போவார்
அல்லது அவரது தொலைபேசிகள்
தொடர்புக்கு அப்பாலான
தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்!

எங்களால் அவர்களுக்கு
கல்லெறிய முடியாது
இறைவா
நீரைக் கல்லாக மாற்றி
தொடராக தாக்கவல்லோன்
நீ மட்டும்தான்
எங்களை அவர்கள்
தாக்க நினைத்தால்
ஆலங்கட்டியால் ஏறி
அவர்கள்
ஓலமிட்டுக்கொண்டு ஓடட்டும்!

மு.இ.உமர் அலி
2014 Sept 27

Friday, September 26, 2014

பேன் பார்த்தல்



 
பேன் பார்த்தல்
...............................
பேன்பார்க்கும் மாலையிலே
பல பேச்சும் நடக்கும்
இடைக்கிடை பேன் நசுக்கும்
சத்தமும் கேட்கும்!

வேண்டாத ஒருவரை வையாமல்,
அடியேய் ,அப்படியாம் அறிவாயா
தோண்டுகின்ற பாவனையில்
அடிப்போட்டு வைப்பாள் தலைவி!

பற்றவைத்தை பொய்யிலே
உண்மையும் கருகி விடும்
பின்னர் அச்செய்தி
ஊரெல்லாம் பெருகும்
பின் அந்தாள் பெயரும் நாறும்!

சிக்குப்பிடித்த சிரசை விரல்கள்
சிக்குப்பிரிக்கையில்
நாக்குகள் நாலைந்து ஊராரை
கொத்திப்பிரிக்கும்!

துர்நாற்றம் அவர்களுக்கு
நல்ல சுவை போலும்
சுவைத்துச்சுவைத்து
சுவாசிப்பார்கள்,கிலாகிப்பார்கள்!

யாருக்கு கல்யாணம்
யாருக்கு பெட்டிவந்த
ஊருக்குத்தேரியாம
ஓடினது யாரு
அத ஒருத்தருக்கும் தெரியாம
பிடித்து வந்தது யாரு
எங்கே ஒழிச்சுவச்ச
எப்படிப்பிரித்துவைச்ச
சாட்சி யாரு
எதிரியாரு இப்படிப் பலப்பல !

இரகசியப்போலீஸ்
இவர்களிடம் துப்புப்பிச்சை
எடுக்க வேணும்
அப்படித்தகவல்கள்!

யாருக்கு இசாக்காலம்
யாருக்கு கருக்கலைவு
முழுக்கதையும் முடிந்ததென்றால்
தெருக்கதையும் வந்துவிடும்!

வேலியோரத்தால் போனவனை
வெறிநாய் துரத்தியதும்
வேருண்டோடியவன்
குமர்ப்பென்ணில் மோதியதும்!

நேருக்கு நேர் நின்று
அடிபிடிப்பட்ட கதை வைக்கோல்
போருக்குப்பின்னால
இளஞ்ஜோடி தொட்டுக்கிட்ட கதை !

குடிகாரன் பெண்டில் பிள்ளைகளை
போதையிலே
அடித்துத் துரத்தியதும்
குடிபோதை தெளிந்து
அழுது புரண்ட கதை!

கருவாட்டுத்தட்டிக்குள்ள
தலபோட்டு கடுவன்பூனை
களவெடுத்து திண்ட கதை
கதை கதையாப் பேசுவாங்க!

குதிச்செருப்பு அறுந்த கதை
புதுச்செருப்பு வாங்கியதை
ருசிச்சுப் பேசுவாங்க சிலதை
மெல்ல நசித்தும் சொல்லுவாங்க!

இதேல்லாம் பிடிக்காத சிலர்
சபைக்கு
அடிக்கடி வரமாட்டார்
பிடிச்ச எல்லோரும்
பேன் இல்லாத தலைக்குள்ளே
பேன் பிடிச்சி விட்டு
பின்னர் அதைத்தேடிப்பிடிப்பார்கள்!

தலைபார்க்கும் சபைகள்
பல கடைகளை உயர்த்தி விட்டு
பிடிக்காத கடைகளை
தாழ்த்தியும் விட்டிருக்கின்றன!

இப்பல்லாம் தலைக்குள்ள
பேன் அவ்வளவாக ஊர்வதில்லை
ஆட்கள் பேன் பார்ப்பதுமில்லை
தலைக்குமேல்தான்
விட்டத்தில் பேன்கள் சுழல்கின்றன !

தொடர் நாடகங்கள் ரசிப்பது
பேன்பார்ப்பதை விட நல்ல சுவாராசியம்
அதனால் குனிந்து பேன்பார்த்தவர்களெல்லாம்
இன்று அண்ணாந்து தொலைக்காட்சியைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்!

ஆண்களும் அடிக்கடி
ஆங்காங்கே கடையடிகளில் கூடி
அப்பப்போ பேன்பார்ப்பார்கள்
இப்போதும் சிலர் பேய்க்கும்
பேன்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!

நன்றி

மு.இ.உமர் அலி
2014 sept 26

Wednesday, September 24, 2014

நீ வருவாயென...


 
 
 
 
நீ வருவாயென...
................................

அடிகாயம் வலிக்கலடா
என் ஆசை மச்சானே
இன்னும் உன் கடிகாயம்
இனிக்குதடா நெனக்க வச்சவனே! !

படியேறும் வேளையிலே
இடை நடுவில் தரிக்கின்றேன்
குடியேறிக் கொல்லுகின்ற
தடையில்லா உன்நினைப்பால்!

பிடிக்காத பழக்கங்கள்
எனக்காக நீ விட்டாய்
துடிக்கின்ற அதரங்கள்
தீண்டாமல் நீ சென்றாய்!

நந்தவன மரங்களெல்லாம்
உன் ஒசரம் இல்லையடா
இந்தமனம் நினைக்காமல்
உன் உசிரும் இல்லையடா!

அல்லித்தண்டு நீ என்று
சொல்லிக்கொண்டு திரிந்தவனே
துள்ளிக்கிட்டு குதிக்கிறேண்டா
நீ வரும் செய்தி கேட்டு!

மு.இ.உமர் அலி
2014 Sept 24th

Tuesday, September 23, 2014

தொலைந்தது தூக்கம்!





தொலைந்தது தூக்கம்!
.........................................

வயிறு நிறைய சாப்பாடு
மனசு சொல்லுது
நீ போய்ப்படு!

தேகம் மட்டும்
மெத்தைக்குள் புதைந்துவிட
நித்திரை இல்லாதது
பெரும் சோகம்!

பிடித்து எறிய எறிய
எலியொன்று
மண்டைக்குள்
புகுந்தோடுது
இல்லாத வளையைத் தேடுது!

ஓட்டைகள் உள்ளன
மூட்டைப்பூச்சிகள் இல்லாத
கட்டில் ஆனால்
ஏதோ ஒன்று
குத்திக்கொண்டே இருக்கிறது!

தூசுதட்டிப்போட்ட படுக்கை
நித்திரைகுப்பதிலாக
பெரும் யோசனை
உடம்பிலே ஏதோ ஊருவதை
உணர்கின்றேன்!

புரண்டு படுக்கிறேன்
உருண்டு பார்க்கிறேன்
இறுக மூடிய விழிகளின்
இருண்ட திரையினில்
நிழல்படங்கள்
ஓசையின்றி
தொடராக ஓடுகின்றன!

சீரான மூச்சு இடைக்கிடை
பெருமூச்சை பிரசவிக்க
மனசுக்குள் தாழமுக்கம்
அதனால் ஒரே புழுக்கம்!

பரபரப்பான ஒய்வு
கட்டிலில் ஒரு
கட்டாயச்சாய்வு!

குவளையில் நிரப்பிய குடிநீர்
மிரடுகளால் மாயமாகிய தூக்கத்தைப்போல
தொலைந்தே போய்விட்டது!

அறையை நான்
இருட்டில் குறுக்குமறுக்காக
அளந்துபார்க்கிறேன்
நீளமும் புரியவில்லை
அகலமும் தெரியவில்லை!

என்னுடனேயே உறங்க ஆரம்பித்த
எனது கடிகாரமும்
பக்கத்துவீட்டுச்சேவலும் விழித்து
எழுந்துவிட்டன!

இப்பொழுதான்
இரவை
யாரும் திருடிவிடாமல்
காவலிருந்த கண்கள்
சோர்ந்துபோய் செருகத்துவங்குகின்றன
சற்று அயர்ந்தேன்
அந்த சந்துக்குள்
அவலமான கனவொன்று
அலறிக்கொண்டு
விழிக்கையிலே
ஆவிபறந்து சிரிக்கிறது
மூடாத தேநீர்!

ஆனால் குசினிக்குள் இருந்து
தினமும் அதிகாலை அர்ச்சனை
இதுவும் எனக்குப் பெரும் பிரச்சினை!

எல்லோருக்கும் சுகமான இரவு
எனக்குமட்டும் பெரும்
சாபமானது!

நிச்சயமாக இது கிறக்கமில்லை
எனக்கு கிறுக்குமில்லை
உண்மையைச்சொல்லப்போனால்
எனக்கு இரவில் உறக்கமில்லை!

நித்திரையைத்தேடிய கண்கள்
குழிக்குள் ஆழப்புதைந்துவிட்டன
"சுருமா" இடாமலே
கண்களைச்சுற்றி கருவளையம்!

இளைத்து விட்டேன் என்கிறார்கள்
நான் மனத்தால் களைத்துவிட்டேன்
எனப்புரியாதவர்கள்!

மு.இ.உமர் அலி
2014 Sept 23rd — with யாழ் நிலவன், யாழ். இலக்கியக் குவியம், Anwardeen Faariz and 43 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Meera Mahroof, Pesum Kavithaikal, ஈழத்தென்றல் கவிதை and 42 others like this.
7 shares

மது மதி First class.
23 September at 05:26 · Unlike · 1

Abdul Majeeth .
Athigamanorin
Irawu
Ippaditaan
Kazligrathu...
23 September at 05:34 · Unlike · 1

Yousuf MOhamed முதுமை வந்து விட்டாலும் இதுதான். மனதில் பிரச்சினைகளின் அழுத்தம் இருந்தாலும் இதே நிலைதான். இறைவனை நினையுங்கள் எல்லாம் நலமாகும்.
23 September at 06:06 · Unlike · 2

நிந்த மணாளன் Arumai
23 September at 06:34 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் இருட்டு "
திருட்டு போகாமல்
காவல் இருந்த கண்கள்
அருமை சகோதரா
23 September at 07:35 · Unlike · 1

றாபியின் கிறுக்கல்கள். அருமை நண்பா
வார்த்தைகளெல்லாம் உன் வசமாகிவிட்டன.
23 September at 09:14 · Unlike · 2

Jaleel Mohd கவிஞ்சரே உங்களை வாழ்த்திட வார்த்தைகள் தேடுகிறேன் அருமை ..
23 September at 09:32 · Unlike · 1

Najimudeen Ahmad · 29 mutual friends
Sotkal nitthirai viddu yelunthu oduhinrana.....unnmaithaan, iravuhal nammai uranga waithaalum sila ninaivuhal nammai uranga viduwathillai...!!!
23 September at 09:44 · Unlike · 1

Amier Ali MI · Friends with Najeeb Ahamed and 168 others
REALLY SUPERB LINES
23 September at 10:21 · Unlike · 1

Abdul Hamed E Sahurudeen .
தூக்கம் இழந்த துக்கம் விடியும்வரை காவலாய்
விடிந்ததும் கண்ணயர அர்ச்சனை ஆரவாரம்,,
விளங்காத ஏதோ ஒன்றில் சிக்கித்தவித்தே
விசாரணை இல்லாத கைதியானேன்.....
ஆனாலும் இறுதிவரையில் நீ இளைத்ததின்
காரணத்தை இலைமறைகாயாய் வைத்து
எந்தன் உறக்கத்தையும் நீ பறித்துக்கொண்டாய்
23 September at 11:19 · Unlike · 1

Shanthini Balasundaram · 16 mutual friends
பிடித்து எறிய எறிய
எலியொன்று
மண்டைக்குள்...See More
24 September at 05:15 · Unlike · 1

Thahir Meerasha · 3 mutual friends
Good
24 September at 08:55 · Unlike · 1

மா.சித்ரா தேவி Nice
24 September at 16:57 · Unlike · 1

Pesum Kavithaikal இளைத்து விட்டேன் என்கிறார்கள்
நான் மனத்தால் களைத்துவிட்டேன்
எனப்புரியாதவர்கள்! மிக அருமையான வரிகள் சகோதரன் !!!வாழ்த்துக்கள்!!!
25 September at 09:59 · Unlike · 1

Monday, September 22, 2014

எங்கள் கனவுகள் எங்கே?




எங்கள் கனவுகள் எங்கே?
...............................................

செயலின் கைகள்
செயற்கையாக கட்டுப்பட்டு விட்டன
மூக்குத்தறிக்கப்பட்டு
மூக்கறையர்களாக
புழுதிக்காற்றை சுவாசிக்கின்றோம்!

நாக்கு நுனிகள்
மெல்லண்ணத்துடன்
வன்மையாக இழுத்துப்
பிணைக்கப்பட்டுள்ளன!

எங்களது மொழிகளை
அறியாத நபர்கள்
மொழிபெயர்க்கின்றார்கள் !

செவிகள் சிதைந்து
செடி நாற்றம்
சீள்வடிந்து
தோள்மேலே விழுகின்றது !

விழிகளில் ஒளி ஊடுருவமுடியாத
மர்மத்திரை
தெளிவற்ற காட்சிகளே
தென்படுகின்றன!

செம்பட்டை படிந்த கேசம்
எம்புட்டு கதைகளை
எங்களுக்குச் சொல்லுது!

மழிக்கப்படாத மீசையும் தாடியும்
கண்ணாடியைப்பார்த்து
பழித்துக்கொண்டிருக்கின்றது
தன ஓட்டைப்பல்லால்
இழித்துக்கொண்டிருக்கின்றது !

ஓ,,,,
தலைவர்களே
எங்கள் கனவுகள் எங்கே?
விற்றுவிட்டீர்களா?
புதைத்துவிட்டீர்களா?
கப்பலேற்றி கடல் கடந்து
அனுப்பிவிட்டீர்களா?

இன்னும் உயர
ஏறவேண்டும்
என நினைத்தது
நப்பாசையா
இல்லை தப்பாசையா?

ஏறிய ஏணி தடுக்கி
கீழே விழுந்து
இடுப்புடைந்து முழுச்சப்பாணி
ஆகிவிட்டோமே!

எங்களை அவர்கள்
சிறைப்பிடித்துள்ளார்ர்களா?
இல்லை நாங்களாகவே அவர்களிடம்
சரணடைந்து விட்டோமா?

சோம்பல் முறித்துக்கொண்ட மனம்
கண்களை கசக்கிக்கொண்டு
நெற்றியைச்சுருக்கி நேரே பார்க்கிறது
ஒளிப்புள்ளி
ஒற்றைப்புள்ளியாகி
அந்தகாரத்துக்குள்
ஒழித்துக்கொள்கின்றது!

மு,இ.உமர் அலி
2014 Sept 22nd — with Meeralabbai Samsunali, Rahuma Ji, Mohamed Janofar and 43 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Ashfa Ashraf Ali, Pesum Kavithaikal, கவிஞர் நாகூர் காதர் ஒலி and 62 others like this.
1 share

View 5 more comments

Mohamed Ismail Umar Ali உங்களது பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி Farsan S Muhammad,Fasil Fasil Mohamed,Simijon Simijon Jon,Shanthini Shanthini Balasundaram,Thirugnanasampanthan Thirugnanasampanthan Lalithakopan
22 September at 16:59 · Like

Meera Mahroof !
ஓ,,,,,
தலைவர்களே
எங்கள் கனவுகள் எங்கே?
விற்றுவிட்டீர்களா-?
புதைத்துவிட்டீர்களா?
கப்பலேற்றி கடல் கடந்து
அனுப்பிவிட்டீர்களா-?

அருமை. உமர் அலி.
22 September at 21:25 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சேர் Meera Mahroof
23 September at 05:48 · Like

Dushyanthi Dushy Arumai
23 September at 14:05 · Unlike · 1

Pesum Kavithaikal அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்!!!
25 September at 10:02 · Unlike · 1

Mmed Amein these so called leaders do eat their own flesh & drink ummah's blood by commercialized politics.what a pity? oh our community! when are going to wake up from this rubbish politics?
5 hrs · Unlike · 1

Saturday, September 20, 2014

சிலந்தி!

துப்பிவிட்டு
துப்பலில் தூண்டலும்,தொங்கோட்டமும்
சிலந்தி!

Tuesday, September 16, 2014

மீட்டுப்பார்த்தால்!




மீட்டுப்பார்த்தால்!
................................

அந்தகாரத்தின்
அணுங்குப்பிடியில்
நமது கிராமங்கள்
அப்போது
பச்சையும் நீலமும்
கொடிகட்டிப்பறந்தது!
சிவப்பு சிந்தனை பீறிட
சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது!

எல்லைகளுக்கு
கால்முளைத்து எம்மை
சுருக்கிக்கொண்டிருந்தன!

காலம் உண்மைகளுக்கு
மைபூசி
இருட்டுக்குள்
கருக்கிக்கொண்டிருந்தது!

குத்தகைக்குக் கொடுப்பவர்கள்
எமது கண்களைப்பிடுங்குவதற்காக
தலைகளைத்
தடவிக்கொண்டிருந்தார்கள்!

சூல்கொண்ட மேகங்கள்
முட்டுவதற்கு மலையோ
மரமோ இன்றி
அலைந்து கொண்டிருந்தது!

சிறையிலடைக்கப்பட்ட சுதந்திரம்
இரவுகளில்
கூடையில் வைத்து
கூவி விற்கப்பட்டுக்கொண்டிருந்தது!

நடமாடியவாறே
மண்டிபோடப்பழகியிருந்தோம்
நடைப்பிண வாழ்க்கை !

சுதந்திர இலங்கைக்குள்
குட்டிக்காலனித்துவம்
கோலோச்சிய காலமது !

உரத்துக் கேட்கப்பட்ட
உரிமைகளின் முதுகில்
சவுக்கடி பட்டு
தழும்புகள் எழும்பியிருந்தன!

கும்மிருட்டில்
குடமெழுகாக வந்து
உருகி எல்லா
இடமும் ஒளி தந்தது
ஒரு ஒளிப்பிரளயம் !

ஆயிரத்திலல்ல
இனி ஆயுளிலுமே
யாரும் அப்படி இருக்க முடியாது !

விம்பமே இல்லாத உருவம்
நமக்காகவே உருகி
மறைந்துபோன உயிர்!

காற்றுப்பதியம்
கச்சிதமாய் நடந்தது
இணைக்கவர் சுட்டிபோல
கிளைவிட்டுப்படர்ந்தது!

வீடுகளே முதற்களமாகின
தந்தைக்கும் மகனுக்கும் முரண்
உணவுகள் மறுக்கப்பட்ட இளவல்கள்
பள்ளித் திண்ணையில் படுத்தனர்
தாய்மார் முந்தானையால் மூடிப்
பின்பக்கமாக பிசைந்த ஊட்டிய சோற்றின் பலம் கட்சியை கட்டிக் காத்தது!

அந்த வேர்கள் நீரை
உருஞ்சிக்கொடுத்துக்கொண்டே இருந்தன
விழாமல் காக்க விழுதுகள்
விழுந்து விழுந்து எழுந்தன !

கனவுத்தீ
அனல்விட்டெரிந்தது
படிப்படியாக
அடிமைச்சாசனத்தை அடியோடெரித்து
சாம்பலாக்கியது!

அடடா என்னே பிரகாசம்
அந்தக்கண்களுக்குள்
ஒரு துண்டுச்சூரியன் சிறைப்பட்டிருந்தது
சுட்டெரிப்பதற்கும்
சுடர்விடுவதற்காக்வும்தானே !

அப்போதெல்லாம்
தென்றல் புயலாக வந்தது
செந்தீ குளிராக இருந்தது!

கறையான் புற்றுக்கள்
கந்தகத்தால் தகர்க்கப்பட்டன!

இலையான்கள் போல்
எல்லோரும் மொய்க்கத்துவங்கினார்கள்!

நன்றாக இனித்திருக்க வேண்டும்
புறங்கைகளையும் நக்கினார்கள்!

களைத்துப்போகவில்லை
அந்த வேகத்தைப்பார்த்து மற்றவர்கள்தான்
மலைத்துப்போனார்கள்!

சொப்பனங்கள் விற்பனைக்கு வந்ததால்
மறுதலிக்கப்பட்டவை எல்லாம்
மலிவாகக்கிடைத்தன!

சிகரங்களிற்கு மக்கள்
சிரமமின்றிப்ப யணித்தார்கள்
உயரங்களிலும் சஞ்சரித்தார்கள் !

ஒப்பங்கள் சூறையாடப்பட்டன
சிலர் கப்பமும் வாங்கத்துவங்கினர்!

முழுநாடும் கிலாகித்தது
உலமெங்கும் புகழ் வியாபித்தது !
சில புரையோடிப்போன உள்ளங்கள் மட்டும்
ஓயாமல் குழி தோண்டிக்கொண்டே இருந்தன!

ஒற்றை விருட்சம்
எத்தனை தோப்புக்களைத தந்தது

குறுநில மன்னர்களுக்கு பல
பட்டாவும் போட்டுக்கொடுத்தது !

கொலு பொம்மைகளை
கொல்லைக்கு அனுப்பியது!

இருளுக்கு வெள்ளை அடிக்கவென்று
வெளிக்கிட்ட
தலைக்கனம்பிடித்த ஒற்றைத்தீகுச்சி
பற்றி எரிவதுபோல்
உரசி உரசியே வெடித்துச்சிதறியது !

அடிக்கடி இவரைக்கனவில் கண்டதாக
சிலர் பொய் சொல்லுகின்றனர்
ஆனால் உண்மையாக கண்டவர்கள்
ஊமையாக இருக்கின்றனர்
ஏனெனில் கனவில் அவர் கூறியதை
வெளியே சொல்ல முடியாது
நிச்சயமாக அவர்களைப்பார்த்து
அவர் புன்னகையால் சபித்திருப்பார்!

முன்பு முழுச்சுவரொட்டியிலும்
இவரே இருப்பார்
இப்போதெல்லாம்
சுவரொட்டிகளில் இவரது புகைப்படம்
குறுகிப்போய்விட்டது!
வேறு சிலர் அதனை விழுங்கிப்
பருத்துவிட்டனர்!

முகம் நிறைய முடியிருந்தும்
தாடிக்கார்னென்று யாரும் அழைக்கவில்லை
மொட்டையன் என்றே
மூளையைக்குத்திக்காட்ட
செல்லமாய் அழைத்தார்கள்!

அப்பாவின் புகைப்படங்களை
மாட்டிக்கொள்ளாத வீட்டுச் சுவர்கள் மட்டுமன்றி
உள்ளச்சுவர்களும்
உருவப்படத்தை இன்னும்
சுமந்துகொண்டுதான் இருக்கிறது!

அகாலமரணமடைந்து இலங்கை முஸ்லீம்களை கரையேற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்த தலைவனுக்கு
இந்த ஏழையின் சமர்ப்பணம்!

மு,இ.உமர் அலி
16 sept 2014 — with Meera Mahroof, Thaiyeeb Vellaiyan, Mohamed Naleer and 34 others.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Vizaam Raheem, Ibra Lebbai, Mohamed Yaseen Salahudeen and 192 others like this.
56 shares

பிரகாசக்கவி கவிதைகள் Nice
16 September at 08:41 · Unlike · 1

Fasil Mohamed ஈனப்பிறவிகளுக்கு
கொடுக்கப்பட்ட
உன்னத தலைவன்,இவரை பெற்றவர் பட்ட
இன்பம் நாமும்
பெற்றோமல்லோ
16 September at 09:08 · Unlike · 3

Samalfasi Rufi சிலவிடக்களில் ததும்பி வடிகிறது தேன்
16 September at 09:09 · Unlike · 2

Shafie Hathim · Friends with Mabrook UL and 16 others
இமயம் இருந்த கதிரையிலே ஒரு இலையான் இருக்கிறது!.., அது கிழக்கின் வீர மகனின் இருக்கை தன்னில் மலத்தைக் கழிக்கிறது!,.. கூட்டிக் கொடுக்கும் மாமாக் கூட்டம் இதனை ரசிக்கிறது!,.., கூனிக் குறுகி எனது இதயம் கண்ணீர் வடிக்கிறது!,...
16 September at 11:32 · Edited · Unlike · 10

Farsan S Muhammad மறக்க முடியா மாமனிதர்
16 September at 11:22 · Unlike · 1

Najimudeen Ahmad · 29 mutual friends
Manitham niraintha manithan...
16 September at 11:37 · Unlike · 1

Riyajath Mohamed · 14 mutual friends
iruntha pothu avar muthukil kuththinaarkal.ippothu ella post office kalilum avar muhaththil kuththukiraarkal.
ashraf sihabdeen kavithai
16 September at 11:43 · Unlike · 1

Saheed Sareef · 17 mutual friends
Unnatha manithar
16 September at 11:45 · Unlike · 1

Mohemed Rafeek · 10 mutual friends


16 September at 11:46 · Unlike · 2

Aboosali Mohemed Sulfikar · 26 mutual friends
உன்னத தலைவன்
16 September at 11:47 · Unlike · 1

Nibras Alm Nskaif · 9 mutual friends
Nice
16 September at 11:57 · Unlike · 1

Sameem Moosa
البقاء لله - Aameen

16 September at 12:01 · Edited · Unlike · 2

Musthafa Abul Kalam Arumai. Aththanayum Unmai. U r a Maha Kavi.
16 September at 12:04 · Unlike · 2

றாபியின் கிறுக்கல்கள். தலைவரின் நினைவாக இதைவிட அழகாக கவியெழுத முடியாது.
வாழ்த்துக்கள் தோழா.
இரண்டு முறை
வரிவரியாய் சுவைத்தேன்.
16 September at 13:10 · Edited · Unlike · 4

Jabir Mohammad · 60 mutual friends


16 September at 14:00 · Unlike · 1

Julkarany Alil //////இருளுக்கு வெள்ளை அடிக்கவென்று
வெளிக்கிட்ட
தலைக்கனம்பிடித்த ஒற்றைத்தீகுச்சி
பற்றி எரிவதுபோல்
உரசி உரசியே வெடித்துச்சிதறியது !///// வளர்க உமது கவி நயம்!
16 September at 14:04 · Unlike · 1

Mohemed Rafeek · 10 mutual friends


16 September at 14:27 · Unlike · 2

Jabir Mohammad · 60 mutual friends
இலங்கை முஸ்லிம்களி விடிவுகா தன்னையே தியாகம் சொய்த மாமணிதன் எங்கள் தலைவர் எம்.எச்.எம் ,அஷ்ரப் என்று எங்கள் மனதில் இருக்கின்றார்
16 September at 14:48 · Unlike · 1

Raazi Roxx Rey · 8 mutual friends
Emathu samuthayam ivaraipondru innm pala aalumaihalai en uruvakka maranthathu
16 September at 15:09 · Unlike · 1

Mohamed Ameer No words. Wonderful
16 September at 17:55 · Unlike · 1

Mohaimin Farhan Awesome!
16 September at 18:08 · Unlike · 1

Azhar Atham we can't imagine his dedication for all community in SL
16 September at 20:43 · Unlike · 1

Mohamed Sabry அருமையான கவிப்பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

தனித்துவம் பேசி எம்மவருக்கு முகவரி பெற்றுத்தந்த மிகப்பெரும் ஆளுமைக்கு இறைவன் மண்ணறையை பிரகாசிக்க வைத்துவிடுவானாக!
16 September at 21:09 · Unlike · 2

Sana Simtha · Friends with Shameem Mohamed and 26 others
Aameen
16 September at 22:10 · Unlike · 2

Mohamed Askar M. Muszamil Always Our good leader
17 September at 12:56 · Unlike · 1

Anver Abdul Haleem amazing
17 September at 14:15 · Unlike · 1

Ahamed Zacky · 25 mutual friends
சபாஷ்! "கும்மிருட்டில்
குடமெழுகாக வந்து
உருகி எல்லா
இடமும் ஒளி தந்தது
ஒரு ஒளிப்பிரளயம் !
ஆயிரத்திலல்ல
இனி ஆயுளிலுமே
யாரும் அப்படி இருக்க முடியாது !"
18 September at 14:53 · Unlike · 1

Vizaam Raheem our leader
20 September at 15:22 · Unlike · 1