நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, December 31, 2014

ஆங்கில வருடத்தின் இறுதி நாள்




ஆங்கில வருடத்தின் இறுதி நாள்
.....................
நான் ஈற்றுத்தாள்
நாள்காட்டியில் நேற்றுத்தான்
எனது முதலாளி
என்னை தொட்டுப்பார்த்தான்!

என்ன வழியனுப்பவும்
வரவேற்கவும்
ஒரு பண்டிகை போல
ஒரு கொண்டாட்டம்!

பட்டாசுகள்
புத்தாடைகள்
களியாட்டங்கள்!
அப்பப்பா எவ்வளவு திட்டங்கள்

இந்த ஆண்டுக்கு நான்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்!
அடுத்த ஆண்டுக்கு
வாசல் திறந்து வழி விடுகிறேன்!

இவ்வளவுநாளும்
நான் எவ்வளவு காட்சிகள் கண்டேன்
எத்தனை பேச்சுக்கள் கேட்டேன்!

சிலருக்கு இந்த ஆண்டு
பெருங்காயம்
இன்னும் சிலருக்கு
வெங்காயம்
சிலர் செய்தார்கள்
கைங்கரியம்
பலர் சேர்த்தார்கள்
ஐசுவரியம்!

பழக்கங்களை மாற்றுவேன் என்று
தமக்குள்ளே
ஊமை ஒப்பந்தங்கள் போட்டவர்கள்
அவர்களாகவே மீறிக்கொண்டார்கள்!

பினக்குகளைத்தீர்ப்பேன்
என்றவர்கள்
புதுப்பினைக்குகளைப் பிரசவித்து
பிரச்சினைபூக்களை
புஸ்பித்தார்கள்!

வேதாளத்தை நான்
இந்த வருடத்திலும்
கண்டேன்
நாட்காட்டியின் ஒற்றகளே
முருங்கை மரங்கள்!

நான் தற்கொலை செய்யவில்லை
தூக்கிலிடப்படவுமில்லை
எனது ஆயுள் இவ்வளவுதான்
அதற்காக நான் கவலைப்படவுமில்லை!
நிலையற்றதுதானே உலகு!

இன்னும் மனிதர்கள்
என்னளவு வாழ்வைப்புரியவில்லை
என நினைக்கும் போது
எனக்குச்சிரிப்பு வருகின்றத
கூடவே கவலையும் வருகிறது !

எனக்கு முன்னாள் மடிந்துபோன
ஒவ்வொரு சகோதர்களும்
எனக்கு நேற்றுக்களைப்பற்றி
கதை கதையாய்
எவ்வளவோ
சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்!

நேற்றுக்களை வாங்கத் தவிப்பவர்களை
நான் அதிகம் கண்டிருக்கிறேன்
அவர்களால் எதுவுமே சாதிக்க முடியவில்லை
என் நானும் கூட
அவ்வாறு தோற்றவன்தான்!!

எனது அஸ்தமனத்தைப்பற்றி
எனக்கு கவலையில்லை
ஒரு புதிய பாதை
நான் இறந்த புள்ளியிலேயே
உதயமாகின்றது ,
நான் முடிக்கின்றேன்
ஒரு புதிய இதயம்
துடிக்கத்துவங்குகின்றது!

மறைவும் தோற்றமும்
மகேசனின் நீதி
இறைவனை போற்றிடு நீ
எந்நேரமும் ஓதி!

மு.இ.உமர் அலி
31st Dec 2014


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



வெண்ணிலா வெண்ணிலா, Usanar Saleem, புறமறிவு புற்கலன் and 19 others like this.
2 shares

Fasil Mohamed nice 31/12/2014.end of the year
31 December 2014 at 16:15 · Unlike · 1

Musthakeem Mohd

1 January at 08:30 · Unlike · 1

Musthakeem Mohd

1 January at 08:30 · Like

புறமறிவு புற்கலன் அருமையான வருட இறுதிக்கவிதை
1 January at 08:51 · Unlike · 1

Usanar Saleem உமரலி.......31க்கு முகவரி கொடுத்துட்டீங்களே!என் இனிய நல்வாழ்த்துக்கள்!

0 கருத்துக்கள்:

Post a Comment