நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, July 28, 2014

போகுதே பொன்வசந்தம் !

போகுதே பொன்வசந்தம் !
........................................
....

கட்டிவைத்தவை மீண்டும்
கட்டவிழப்போகுது
சுட்டெரித்தவை வந்து
பற்றிப்பிடிக்கப் ஏங்குது!

கழுவிப்போட்ட மனதில்
மறுபடியும் கறைபடியப்போகுதே
நழுவிப்போகுதே நல்மாதம்
வருடமொன்றாகுமே மீண்டும் வர !

அது பாவத்தின் கடிவாளம்
மூர்க்கத்தை மூட்டைகட்டியது
கோபத்தின் படியுடைத்தது
சொர்க்கத்துக்கு வழிசமைத்தது !

தூங்காமல் தொழுதழுது பசிக்கு
ஏங்காமல் பசித்திருந்து
தான தர்மம் பலசெய்து
மாதமொன்று மகிழ்ந்திருந்தோம்

கொட்டி முடித்தவை பல கோடி
ஏழைகளின் உணவு
கட்டி அணைத்ததோ பல வருட
நன்மை கொள் இரவு !

ஒட்டறை பிடித்திருந்த உறவுகளை
தூசி தட்டி சுத்தம் செய்தோம்
இறைவன் கட்டளை இட்டவற்றை
சிரமேற்று வழி நடந்தோம்

சதகாவும்
சகாதுல் பிதுரும்
இறப்போர் மட்டுமன்றி
இருப்போர்க்கும்
ஈந்துவந்தோம் !

சுணங்கி வந்த மாதம்
சுருக்கா முடிந்திட்டது
பிணங்கி முரளாமல்
பெருநாளும் இனிதே முடிவாதே!

இந்த முறை ரமளானில்
வடைசுட்டு உண்டதை விட
"காசா"வில் காபிர்கள்
சகோதரை சுட்ட கதை
தடம் பதித்து போனதடா!

இனிய பெருநாளில்
இனிப்பான மனத்துடனே
மனம் மகிழ
இனி மகிழ்வோம்

இம்மாதம் இருந்ததுபோல்
எந்நாளும் இருந்திடவே
மனதில் திடம் பூண்வோம்
வாழ்வில் என்றும் தடம் புரளோம் !

மு.இ.உமர் அலி
2014 ஜூலை 28

Sunday, July 27, 2014

நோன்பூ

நோன்பூ
...............
வருடா வருடம்
மலரும் பூ
மாதம் முழுதும்
மணத்த பூ
உதிரப்போகுது
ஒருநாளில்!

Friday, July 25, 2014

புழுக்கமோ புழுக்கம் !

உச்சத்தில் இருந்த
நெருப்புமச்சம்
கிட்டத்தில் வந்து
ஊரைச் சுட்டுப்பொசுக்குது

திறக்க மறுக்கின்ற
இலைவாய்களை வெய்யில்
இடந்து இருக்கின்ற
ஒழுப்பம் நீரையும்
இரக்கமின்றி
உறுஞ்சி எடுக்கின்றது!

அவ்வளவு கோடை
அறுந்த கோடை
அடிக்கிணறு அச்சமுற்று
ஆடிப்போய் நிற்கிறது

ஓடித்திருந்த
அறுகு களைத்து
வாடித்தெரிகிறது
வாlளைப்போல் சுருண்டு
வளைந்தும் நெளிகிறது!

அழுதழுது அனைத்துமரங்களும்
ஓய்ந்தே விட்டன
சருகாக காய்ந்து
உதிர்ந்து கொண்டிருக்கின்றன!

புற்றரைகள் தீப் பற்றிக்கொள்ள
எப்பொழுதும் தயார்நிலையில்
இத்தரையில் இவ்வளவெனில்
அத்தரையில் எங்கனமோ?

நினைக்கையில் நடுங்குதடா
புழுக்கம் எங்கோ ஓடி ஒழிக்குதடா
மஹ்சறை நினைக்கையிலே!

மு.இ.உமர் அலி
2014 July 25

Sunday, July 20, 2014

ஏனெனில் நான் கவிஞன் பகுதி -2





ஏனெனில் நான் கவிஞன்
பகுதி -2

எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
கருவியும் ,கருக்குருவியும்
கதைப்பதெல்லாம்
செவியில் விழுகிறது
அப்படிக் கேட்கும்போதெல்லாம்
உள்ளமும் உருகிக் கரைந்து
கண்ணோரம் அருவியாகிறது !

மழைதேடி மனிதர்களுக்கு முன்
மரங்கள் மண்டியிட்டு
மன்றாடுவதைக்கேட்கும்போது
எனக்குள் பெரும்
திண்டாட்டம் வருகிறது !

வீதியோரத்தில்
நாதியற்றோர் நின்று
சில்லறைகளை குலுக்கும் ஒலி
எனக்கு மொழிபெயர்க்கப்பட்டே
ஒலிக்கிறது
அந்த உரை
தங்களது சரித்திரத்தை
மட்டுமன்றி
நோட்டுக்கலாக இருந்த நாம்
எப்படி இன்று இப்படி மாரறினோமென
விரித்து உரைக்கிறது !

வள்ளல்களின் கரங்களையும்
கஞ்சர்களின் மனங்களையும்
விலாவாரியாய் விபரிக்கின்றது
எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோ
என்று ஏக்கப் பெருமூச்சும்
எக்கச்சக்கமாக இருந்தது !

ஒருநாள்
இறைச்சிக்கடை தராசு
தனக்குள்ளே தாராளமாக
பொருமியது
எனக்கு இப்படிக் கேட்டது
"என்னை எனது சோடியுடன்
சமனாக நிற்க
விடுகிறார்களேயில்லை
கோபத்தில்
நான் முரண்டுபிடித்தால்
என்னுள் அவர்கள் வேகமாக
இறைச்சியை எறியும்போது
வலிதாங்க முடியாமல் முதுகு கூனி
தாழ்ந்துபோகிறேன்.
வாய்மை எங்கோ தூரத்தில்
வீழ்ந்து போகின்றது
அவன் கல்லாவோ
அநியாயக் காசால்
அதிகம் நிறைந்து விடுகிறது

தொடரும்

மு.இ.உமர் அலி
2014 JULY 20
 — with Mohamed JanofarS Shifani MohamedThaiyeeb Vellaiyan and 45 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Rameeza Mohideen Yaseen ஒரு நல்ல கவிஞன் சிறந்த படைப்பாளி.திறமையெனும் ஊற்று தெளிந்த நீரோடையாய் வற்றாமல் பெருக்கெடுக்கிறது.
    ஒவ்வொரு பொருளின் கதறலும் அற்புதமாக சொல்லப்பட்ட விதம் அழகு.
    23 hrs · Unlike · 3
  • Sheik Mohi Deen Masha allah
    23 hrs · Unlike · 1
  • Rosee Ajmayeen உங்கள் கவிதை ஆறு வற்றாது பெருக்கெடுத்து ஓட வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    23 hrs · Unlike · 1
  • Mohamed Ismail Umar Ali நன்றி Rosee Ajmayeen,Rameeza Rameeza Mohideen Yaseen,Sheik Mohi Deen,
    22 hrs · Like · 2
  • Ibra Lebbai Aniyayankal appadiye murayidukindrana.! Thodarunkal payanatthai. Allalurum athankam yinnum yetthanayo.?
    21 hrs · Like · 1
  • Krish Mani மிக மிக அருமை! பல முறை கவிதை வடிக்கும் போது " நீ நல்லாதான இருக்க! அது கெட்டுப் போச்சு! இது கெட்டுப் போச்சு! கதிரவனைப் பார்! கடலைப் பார். அவை என்ன சொல்கின்றன ?! என்றெல்லாம் ஏன் எழுதுகிறாய்! உன் பிழைப்பைப் பார் " என்று சொல்பவர்களுக்கு நல்ல பதில்!
    21 hrs · Like · 1
  • Abdul Salam Excellent. Keep it up. Looking forward to meet you soon in few days time
    21 hrs · Unlike · 1
  • Saroon Ismalebbe · 65 mutual friends
    Excellent dear
    20 hrs · Like · 1
  • Krishnan Mahadevan அருமை ! முதல் பத்தி... மிகஅருமை !! அறிவின் அருகாமையை எதிர் நோக்கும் அன்புருவங்கள்...அதுவன்றோ எதிர்காலம் !!!~
    20 hrs · Unlike · 1
  • Meeraan Ibrahim Santha il kavitha
    Mingji kidakku
    Pasikkira vaaikku
    Thinna rusikkala
    Umar ali kavitha
    Unmay irukku
    Thidu rasikka
    Nallaathaan irukku

    Nimirthu nikkavum
    Sernthu nikkavum
    Viyaapary vidamaadaan
    20 hrs · Unlike · 1
  • Mohamed Ismail Umar Ali நன்றி சேர்,இன்சா அல்லாஹ் நோன்புப் பெருநாளைக்கு சிந்திப்போம் Abdul Salam
    19 hrs · Like
  • Mohamed Ismail Umar Ali உங்கள் யதார்த்தமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி Meeraan Ibrahim,,Mahadevan,SaroonSaroon Ismalebbe,Ibra Ibra Lebbai,Krish Krish ManiShakir Mustapha,Krishnan Mahadevan
    19 hrs · Edited · Like · 1
  • Senrayan Senrayan · 12 mutual friends
    உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஜொலிக்கிறது கவிதையின் ஒவ்வொரு வார்த்தைகளும்
    நேர்த்தியான படைப்பு
    மறு பத்தியையும் விரைவில் காண ஆவல் கூடுகிறது
    19 hrs · Unlike · 1
  • Vanitha Solomon Devasigamony "ஏனெனில் நான் கவிஞன்"., அழகான காட்சியோடு 
    அருமை! ஒவ்வொரு கவிதையிலும், நீங்கள் கவிஞன் என்பதை
    நிரூபித்துக் கொண்டே தொடர்கின்றீர்கள் .வாழ்த்துக்கள்!
    ...See More
    15 hrs · Edited · Unlike · 1
  • Ganesh Gajine சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை
    16 hrs · Unlike · 1
  • மு.யாகூப் அலி பொய்மை உலகில் 
    மெய்யான உண்மைகள் ...


    வாழ்த்துக்கள் ....
    15 hrs · Unlike · 1
  • Meera Mahroof !!!
    “ஒருநாள் 
    இறைச்சிக்கடை தராசு 

    தனக்குள்ளே தாராளமாக 
    பொருமியது
    எனக்கு இப்படிக் கேட்டது 
    "என்னை எனது சோடியுடன்
    சமனாக நிற்க 
    விடுகிறார்களேயில்லை
    கோபத்தில் 
    நான் முரண்டுபிடித்தால் 
    என்னுள் அவர்கள் வேகமாக 
    இறைச்சியை எறியும்போது 
    வலிதாங்க முடியாமல் முதுகு கூனி
    தாழ்ந்துபோகிறேன்.
    வாய்மை எங்கோ தூரத்தில்
    வீழ்ந்து போகின்றது
    அவன் கல்லாவோ 
    அநியாயக் காசால் 
    அதிகம் நிறைந்து விடுகிறது“

    “நேர்மையான வியாபாரி
    சுவர்க்கத்தில் என்னோடு
    இருப்பான்“ என்று நபி(ஸல்)
    அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    அளவை றிறுவையில் மோசடி
    செய்பவன் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும்.

    பாராட்டுக்கள் உமர் அலி.
    1 hr · Unlike · 1