நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, June 30, 2014

கஞ்சிக் கிடாரம்!




கஞ்சிக் கிடாரம்!
..............................

இன்றைக்கு எங்கட கஞ்சி முறை
நேற்றே வாப்பா சந்தையில 
சாமானெல்லாம் சரிபார்த்து
வாங்கி விட்டார்
சகர் முடிந்ததிலிருந்து
ஒரே தடபுடல் !

சின்னம்மா பெரியம்மா மாமிமாரும்
சீக்கிரமா வந்திட்டாங்க
செருகிக்கட்டிக்கிட்டு
உருப்படியா வேலை செய்ய

பச்சரிசி தண்ணியில ஊறுது
பழத்தேங்காய் மூலையில காயுது
மிச்சரிசி கோணியில
கொண்டுபோய் வைக்கிறாங்க
கொட்டுண்டு போகாம !

ஏலங்கறுவாய் ஏக அளவில்
ஏனத்தில் எடுத்து
தூசி இல்லாம
துப்பரவு செய்த
உப்பும் பக்கத்தில் இருக்கும்

அல்லையல் துருவிலைகள்
பிள்ளைகள் தலையிலே
கொல்லையில் இருந்த கொள்ளி
கொஞ்சம் தள்ளி அடுப்படியிலே !

அருவக்கத்திகளுக்கும்
உரித்த தேங்காய்களுக்கும்
இடையில் நடந்த மோதலில்
தோற்றுவிட்ட முழுத்தேங்காய்க்கு
ஆணாகவும் பெண்ணாகவும்
இருபிள்ளை பிறக்கும் !

தேங்காய்த்தண்ணி குடிக்க
நோம்பில்லாத சிறுவர்கள்
முண்டியடித்து
இருண்டு கையிலும் வாங்கி
மொண்டு குடிக்கிறாங்க

பள்ளிக்கிடாரம் நேற்றைய
கஞ்சி வீட்டில் இருந்து
அரைச்சி அரைச்சி வருகுது
சுமந்து வரும் சிறுவர்கள்
மூச்சிரைக்கிரார்கள்!

பச்சமிளகாய் முழுமின
பச்சத்தண்ணியில விழுந்து
கடசிக்குளியல் குளிக்குது
உரித்த வெள்ளைப்பூடு
விஷயம் தெரியாமல்
பல்லுக்காட்டி ஈயென்று சிரிக்குது !

கந்தோட முறிச்சிவந்த கறிவேப்பிலை
இடுங்கப்படாமல் இருக்கிறது
வெந்தயம் இளகுமட்டும்
அரிக்கிமிலாயில் நலைந்து நடுங்குது !

பெண்களெல்லாம் போட்டிபோட்டு
பாதித்தேங்காய்களை
துருவித்தீர்க்கிறார்கள்
பூவொருபக்கம் சுரட்டையொருபக்கம்
மலையாய் குவியுது !

இடைக்கிடை நாங்க சென்று
தேங்காய் பூவள்ளி
கொடுப்புக்க அடக்குவோம் முறைத்தால்
பழித்துவிட்டு விடுக்கெண்டு மறுக்குவோம்!

கருங்கல்லு அடுப்பில
பூக்கம் பாளைகளையும்
புறவெட்டுத்துண்டுகளையும்
நெருப்பு திங்கத்துவங்கும்!

மாமாவும் வாப்பாவும்
கிடாரத்தைவைத்து
கஞ்சி காய்ச்ச துவங்க
நெருப்புப்பட்ட கோபத்தில
கிடாரம் சூடாகத்துவங்கும் !

சுரட்டைகள் அடுப்பை அணையாமல்
தற்கொலை செய்து தடுக்கும்
அகப்பை கஞ்சி அடிப்பிடிக்காமல்
தொடர்ந்து சுழன்று கலக்கும்!

மிளகாய் வெந்தயம் அரிசி
கடைப்பால் கறிவேப்பிலை
வெளித்துள்ளி தலைப்பால் என்று
முறைப்படி சாமானெல்லாம் ஒவ்வொன்றாய்
கிடாரத்துள் இறங்கி ஆழம் பார்க்கும்
ஒன்றாய் கிடந்தது வேகும் !

எல்லாம் அவங்க முடித்துவிட்டு
உப்புப்பார்க்க மட்டும் எங்களைக்
கூப்பிடுவாங்க ஏனென்றால் நாங்க
அன்றைக்கு நோன்பில்லை !

காய்ச்சின கஞ்சியில
பிரச்சின இல்லையெண்டா
மூக்க துளைச்செடுக்கும்
முடுக்கெல்லாம் மணம் பரவும் !

பள்ளிக்கி அனுப்ப முன்னால்
பக்கத்து வீட்டுக்கும்
அங்கு வந்த ஆக்களுக்கும்
அள்ளி ஊத்தி அனுப்புவாங்க !

பாத்திரம் சுமந்ததில
நாங்க சோர்ந்தே போய்டுவோம்
ஆத்திரம் வந்திடாது
ஏனென்றால் அது ஒரு கொண்டாட்டம்!

ஆக்களெல்லாம் கலைஞ்சபின்பு
கஞ்சி பள்ளிக்கு போனபின்பு
ஓடித்திரிந்தகடைசிப்பிள்ளை
அடுப்புக்குள்ள கால் வைத்து
ஆவென்று அலறிடுவான் !

அவன்செஞ்ச தவறுக்கு
உம்மாக்கு அறைவிழும்
கொஞ்சம் முன்னாடி பெருநாளாய்
இருந்தது இல்லம் இங்கு
இப்ப கேட்குது பெரும் ஓலம்!

மு.இ. உமர் அலி

2014 june 30
 — with Meeralabbai SamsunaliRijan MuhammadhPesum Kavithaikal and 45 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Mushtaq Ahmed கஞ்சி மணம் இஞ்ச வரைக்கும் கம கமக்குது....
  • Riyas Ym · 8 mutual friends
    கஞ்சி மண�க்கிறது.supper
  • Meera Mahroof !!!
    “அருவக்கத்திகளுக்கும் 
    உரித்த தேங்காய்களுக்கும் 
    இடையில் நடந்த மோதலில்
    தோற்றுவிட்ட முழுத்தேங்காய்க்கு 
    ஆணாகவும் பெண்ணாகவும் 
    இருபிள்ளை பிறக்கும் !“

    அந்தநாள் கஞ்சிபோல்
    இந்தநாள் இல்லையே.
    சேர்மானம் அதிகமாகி
    ஆர்பாட்டமாக இருந்தும்.
    உங்கள் கஞ்சிபோல்
    இல்லையே.

    உவமானம் அழகு.
    உமர் அலி.
    வாழ்த்துக்கள்.
  • Mohamed Shameer Boss appidiea kannukkulla kondu varinga ji kondu varinga.
  • Shanker Kula MOUTH WATERING
  • Mohamed Janofar அட்டகாசமான கஞ்சி. அழகான கவிதை.
  • Jaleel Mohd Arumaiyaana kanji kavithaiyaal kanji kaachividdeergal palarukku palan tharum kavithai thanks. Umar.ali.
  • Ajmal T Sahibu Bro ungal varikal kanjai nenjukkul yaapahap paduthukirathu
  • Ahamed Zacky · 16 mutual friends
    ஒரு ஃபளேஷ் Bபேக் அப்படி அச்சொட்டாய் நேரடி ஔிபரப்பாக. உமர் அலி அவர்களை ஒரு முறை கட்டித்தழுவ நினைக்குது.
  • Rameeza Mohideen Yaseen நோன்பு கஞ்சி குடித்த உணர்வு உள்ளது.ஒவ்வொரு வரியையும் ருசித்தல்லவா புனைந்துள்ளீர்கள்.கடைசியில் விட்ட அரை மட்டும் கொஞ்சம் வலிக்குது.

    எல்லாம் அவங்க முடித்துவிட்டு
    உப்புப்பார்க்க மட்டும் எங்களைக்
    கூப்பிடுவாங்க ஏனென்றால் நாங்க அன்றைக்கு நோன்பில்லை.
    பழைய நினைவுகள் பசுமையாக.
    வாழ்த்துக்கள்.
  • Shafath Ahmed எங்க ஊரு மண்வாசனை உலகமெலாம் என்னமாய் வீசுது பாருங்க..அருமை..
  • Abulmulaffar Mohamed · 8 mutual friends
    அழகான கவிதை,கிராமிய மண் வாசனையோடு
  • Heemra Raheem · 5 mutual friends
    எங்களுக்கும் மணக்குது கஞ்சி வாசம் இல்லை மண் வாசனை
  • Jaleel Mohd உங்கள் காஞ்சி கவிதையை நெஞ்சில் நிலை கொள்ள செய்துள்ளீர்கள் காலத்துக்கு ஏற்றவாறு கவி சொல்லும் திறமையில் நீங்கள் என்றுமே கஞ்சனில்லை. 
    கவிதையிலே கத்து வித்தைக்காரர் நீங்கள்,உங்கள் கவி படித்து கற்றுக்கொண்டோம் காஞ்சி காச்சும் கலை வித்தையை.
    மணக்குறது காஞ்சி ருசிக்கிறது நெஞ்சி. அருமை வாழ்த்துக்கள். Umar Ali.
  • Fowjer Ali · Friends with Syed Ibrahim
    அருமை, அருமை....
  • Amjath Al · Friends with Shafath Ahmed and 10 others
    அற்புதம்...அருமை.... வாழ்த்துக்கள். ..
  • Riya Banu · 8 mutual friends
    அருமையான கஞ்சி..
  • Mubeen Mohammed · 6 mutual friends
    kanchikku ivvalu periya kavithaya super super.
  • Nafeel Mohammed · 34 mutual friends
    Super o super excellent poem congrats bro..!
  • Sunandha Prabha Superb..pakkathila irunthu vaitharhupola ovoru variyum Azhaka solli irukinga. Nane vachathupola thonithu. Ipave sapida nenjam enguthu. Romba rusiya irunthathu.. very nice..kavinjan endral karpanai irukum ana intha reality eppadi ungalal matum mudikirathu... intha kavithai matumala ungal ovoru padaipum nijame.. arpudhame... Kadavul arumayana thiramai kuduthirukanga ungaluk. ... wat a amazing person u r... brilient job sir.. innum niraya ezhuthunga....vazhthukkal nanba...!!!
  • Logesh Velu Valthukal arumai
  • Ibra Lebbai Antha nal g(j)apagam varukindrathu anpu nanpare! Aanal yintha nadkalil yitharkana panatthogayai araviddu palliyil kanjikacchi yem kudunpa uravinarukku kodukka oru alavu veeddukku anuppivaikkerarkal. Yippadi oru mattam. Andraya nadkalil kudumpatthor koodi mahila yiruntha santharppam than yillamal poyviddathu! Urukkuduttha ungal kavithai arumai.
  • Superr Staar · 166 mutual friends
    well described.. 
  • Abdul Kaiyoom Suhamaha irukkirathu vaasikkumpothu vaalthukkal iyya