நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 30, 2014

சருகின் காவியம்!





சருகின் காவியம்!




மானம் மறந்து
மரம் ஆடை களைந்து
உறுஞ்சி எடுத்த
கடனை சருகாக திரும்ப
கொடுக்கிறது மண்ணிற்கு !

நாணமற்ற நாமோ
மதியிழந்து நிற்கிறோம்!

மரமுதிர் சருகு எரிகிறது
கருகி புகைகிறது
வளியும் கெடுகிறது நச்சு
வாய்வும் வந்து சேர்கிறது!

வாலைக்குமரியாம்
நீலவானம்
கோலம் குறைந்து
ஓலம் இடும் ஒலி என்
ஊனச்செவிகளை ஊடறுக்கிறது!

சருகு மண் புதைய
மெல்ல
உருக்குலையும்
நிலமும் அதனால்
நல்ல வளமடையும் !

நீர் பற்றிக்கொள்ளும் மண்
உன் ஊர் போற்றிக்காக்கும்!

சேதமான மண் திருத்தும்
சிறப்பான சிற்பியடா குப்பை
சில காலம் அது எடுத்து
செதுக்குமடா மண்ணை !

புதைந்தவை மண்ணில் மறைந்தாலும்
சிதைந்து கண்ணில் தெரியா
கனியமாகி நீ உண்ண இனிய கனிதரும்
கண் முன்னே அருங்காட்சி ஓடும் !

மனிதன் மேலால் வலிந்து
மண்ணுளுவான்
சிதைசருகு தரையை தானாய்
நெளிந்து தன்னால் உழுமே
மண்ணுழுவான்!

தன்னாலே தருகின்ற தரு பெருகி
தரையோடு உறவாடும்
பசுவுண்ண பசும்புல் வளரும்
புல்லுண் பசுமடியில் பாலோங்கும் !

ஆதலால் நீ
சருகினை எரிக்காதே
மருங்குகளில் எறியாதே!

குழி தோண்டிப்புதை
வளியோடும் மண்செய்
இழையோட்டம் நன்செய்
இயற்கையை நீ பேணு
இறைவனை அதில் காணு!

இன்று நீ காணும்
காட்சி மிச்சம் வை
நாளை உன்சந்ததி
காண எச்சம் வை

Umar ali mohmed ismail
2014 04 30

Monday, April 28, 2014

மருந்துக்கனி தவிர் இனி!




கிளையில் கனிந்த கனி நீ
காண்பதுண்டோ வாழை
குலையில் பழுத்து நீ இன்று
உண்பதுண்டோ?

அணிலுடன் பட்சிகள்
பட்டினி அவை காணுமுன்
இளங்காய்கள்
மரப்பெட்டியில்!

பிஞ்சுகள் ஆய்கிறார்
நஞ்செல்லாம் தெளிக்கின்றார்
பச்சைக்காயெல்லாம்
பொச்சென மாறுது நிறம்
பழம்போல தோணுது கணம் !

முதிர்ந்து கனிந்த கனி
இனித்து சுவைப்பது போல்
மருந்து அடித்த கனி
எந்தச் சுவையுமில்லை!

பழமல்ல நிஜத்திலது
பழநிறத்து
வெம்பலல்லோ
மணமில்லை மாங்கனியில்
குணமில்லை தீங்கனிகள்
இக்காலம் உண்மையல்லோ?

நரிகண்ட திராட்சை போல்
நான் உண்ட கனிகளெல்லாம்
நாக்கூசும் புளியேனோ
தீன் சுவையும் மறைந்ததேனோ?

பொல்லால் அடித்த பலா
கனி வருது
சொல்லால் சொல்கையில்தான்
அது சுவை தருது!

சொல்லி விற்கிறான்
சத்தியம் செய்கிறான்
சுவைப்பதன் பின்னால்
அவன் சத்தியம் பொய்க்கும்!

சோகைப் பிள்ளை போல
வெம்புக்கனி
சோபையில்ல உண்மையில்
அத நம்பு இனி!

நோயைகொடுக்குமோ
தெரியவில்லை
ஆனால் நிச்சயமாய் அது
உடலுக்கு நல்லமில்லை!

உலர் வைக்கோல் போருக்குள்ளே
முதிர் முதிரைக் கொத்துள்ளே
சுத்தி வைத்து பழுத்தது போல்
சுவையாக இருப்பதில்லை

மருந்து அடித்த கனி
என்றும் சுவையுமில்லை
விருந்தும் அதனாலே
திருப்தியில்லை!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 april 28

Saturday, April 26, 2014

மருதஞ் சோலை






மருதஞ் சோலை

நான் அப்போது
சிறுவன்
வாப்பா என்னை 
அந்த
நிழல் சோலையினூடாக
ஈருருளியில்
ஏற்றிச் செல்வர்!

உச்சிக்கு மேலே வந்து
எங்கள் தோல்களை
கருக்கிப் பொசுக்கிவிட
நெருப்பைக் கக்கி
ஒளியை உமிழ்கின்ற
ஆதவன்!

மேற்கு வயல்களினை
ஊடறுத்து களைத்து வரும்
காற்றுக்கூட
வியர்த்து விறுவிறுத்து
இந்த நிழலை வந்தடையும்
குளுமையை கடனுக்கு வாங்கி
தலையைச் சொறிந்துகொண்டு
சுற்றிச்சுற்றி நின்று கொஞ்சம்
இளைப்பாறிச்செல்லும்!

வழிப்போக்கர்
மண்வெட்டிப்போராளி
வெண்கட்டிப்போராளி
யாத்திரிகர்
இப்படி பல
ஆட்கள் வந்து
இந்த இதத்தை இரவலாக
சற்று அனுபவித்துச் செல்வார்கள்!

ஓரத்து வாய்க்கால்
ஓசையின்றி ஓட
புற்பாய் விரிந்து கிடக்கும்
அதற்கு ஒப்பாய்
எதுவுமேஇல்லை!

மருதம் பட்டை கழன்று
ஏதோ ஒரு
பலகாரம்போல
மருங்குகளில்
சிதறிக்கிடக்கும்

முதிர்ந்த கொட்டை விழுந்து
கடந்த மாரியில் எழுந்த
கன்றுகள் இன்னும்
ஈரிலைகளுடன்
ஈயென்று சிரிக்கும்!

உச்சாரக்கொப்பில்
முறிந்த பெருஞ்சுள்ளிகளால்
ஒழுங்கின்றி கட்டப்பட்ட
ஒரு பருந்துக்கூடு
அதில் அடை படுக்கும் பேடு!

மற்றக்கிளைகளிலோ
மரத்துக்கு திருஸ்டிப்பொட்டுப்போல
காற்றடித்தால் நடனமாடுகின்ற
தூக்கணாங்குருவிக்கூடு

காலம்துளைத்த பொந்துகளில்
கவலையின்றி குடும்பமாய் வாழும்
மதுரங்கிளிச்சோடி!

காற்றுக்கு ஒலியை
இரவல் கொடுக்கின்ற
முதிர்ந்த ஆனால்
உதிராத விரைவில்
சருகுகளாகப்போகின்ற
பளபளக்கும் பச்சயத்தகடுகள்!

எல்லாவற்றையும் மீறி
எனது பிஞ்சுக்கைகளால்
கட்டிப்பிடிக்க முயன்றும்
முடியாமல் போன
அந்த அடி பருத்த
இடைக்கிடை திமில்
காய்த்த
மருத மரங்கள் !

சிலிண்டர் வெடிப்பு நடந்த
மறுநாளே
மொட்டையடிக்கப்பட்டு
செம்புள்ளி கரும்புள்ளி
குத்தப்பட்டு
வெட்டி வீழ்த்தப்பட்டது
ஒரு சாகியம்
அழிந்த சரித்திரம்
காகிதத்தில் கூட
சிறு குறிப்பில்லை!

இதுதான்
என தேச வழமை
எய்தவனை விடுத்து
அம்பினை வைவார்கள்
யாரோ செய்த
குற்றத்துக்கு
எதுவுமறியாத மருதமரம்
ஏனிப்படி தண்டிக்கப்பட்டது!

இன்னும் முயல்கின்றோம்
ஒற்றைமதுரையை உருவாக்க
வித்தையாகவே தெரிகிறது
ஒரு சோலையை அல்லவா
அழித்தார்கள் சொற்ப வேளையில்?

அவர்கள்
தசாப்தங்களின் சரித்திரத்தை
வினாடிக்குள்
வீழ்த்திய கைகாரர்கள் !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 APRIL 26TH

Thursday, April 24, 2014

விழித்துக்கொண்டே உறங்குகிறோம்!




விழித்துக்கொண்டே உறங்குகிறோம்!

விடியல்களுக்காக
விழித்திருந்து
தொண்டை கிழியக்கூவிய
கொண்டைச்சேவல்கள்
பொழுது புலருமுன்னரே
கண்ணயர்ந்து போனதா?

தேடல்கள் முற்றுப்பெற்று
முத்தெடுத்து முடியுமுன்
யாவும் அடங்கி
ஒடுங்கிபோனதா?

கோசங்களை
வித்துக்களாக விதைத்து
முளைத்ததெல்லாம்
அறுவடை ஆரம்பிக்குமுன்னே
வெறும் பதறுகளாகிவிட்டதா?

விடிவெள்ளிகளைப்பார்த்து
சந்தை நாய்கள்
குரைத்து கூப்போடுகின்றன!

முடக்குதிரைகள்
பந்தயத்துக்கு அழைக்கின்றன
மூட மரங்கொத்திகள்
தாமாகவே வாழைகளில்
மாட்டிக்கொண்டு விட்டன!

முண்டாசுகளெல்லாம்
இருந்த இடத்தில் இருந்து
இறங்கி வந்து
தோள்களிலே
சால்வையாக தொற்றிக்கொண்டதா?

உத்தரியங்கள்
அவிழ்ந்து உருத்தெரியாமல்
அழிந்தே போயினவா?

கொள்கைகளை
கொழுத்தவை விழுங்கி விட்டனவா?
தெழிவு தேவை
உங்களுக்கும் எங்களுக்கும்!

மழிக்கப்பட்ட சிரங்கள்
நம்மை மட்டந்தட்டும்போது
மழுங்கிப்போய்விட்டோமா?

மறைந்து நின்று
மல்லுக்கட்டும்
இவர்கள் மறவரல்லர்
புறமுதுகு காட்டியோடும்
சிறுவர்களே!

அப்பப்போ உச்சாக பானம்
அருந்திக்கொண்டதுபோல
அடித்தொண்டை கிழிய
புலம்புவதெல்லாம்
புதிராகவே புலப்படுகின்றது.

மந்திரப்பேச்சுக்கள்
புரியுதில்லை
அந்தரப்படவும்
தேவையில்லை

புரிய வைக்க
நீங்கள் முனையாதவரை
நீங்கள் போட்டிருக்கும்
முடிச்சுக்களை
வெடிவைத்துத்தகர்க்காமல்
புஷ்பங்களால் போர்செய்யவும்
எங்களால் முடியும்!

விடிவு விடிவு என்று
இருட்டுக்குள் எத்தனை காலம்
உழன்று கொண்டிருப்பது

அடிபணிந்தது போதும்
அடித்துகேளு
பிடித்து இழு
உன் கையில்
இருக்கவேண்டிய கனி
ஊரார்கையில் இருக்கிறது
உரிமைக்காரன் நீ
உமிழ் நீர் ஒழுக
பெருமூச்சு விடுகிறாய்.

நீ பறிக்காதவரை
அவர் கொடுக்கமாட்டார்
கேளாமல் கொடுத்தகாலம்
முடிந்து விட்டதை
நீ மறந்து விட்டாயா?

இது உனது தருணம்
குரலை உயர்த்து
அவர்கள் கூச்சலிடுவது
உன்மேலுள்ள அச்சத்தினால்
முந்னேற முன்னேற
அவர்கள் பின்னோக்கி போவார்கள்
இது நிச்சயம்!


உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 April 24

Wednesday, April 23, 2014

அம்மி













அம்மி!

கிணற்றடியில்
அசையாமல்
அப்படியே கிடக்கின்றது
ஒரு கல்லு!

தூவானம் அடித்துத்
தெறித்த மண் தெறித்து
அங்கும் இங்குமாய்
வெள்ளை மணல் ஒட்டி
விதைவையாய் கோலம்!

கொத்திய பூக்களைக்
காணவில்லை
நெத்தியில் பொட்டும்
தோணவில்லை!

காலநிலை
படிப்படியாய்
கோலம் குறைக்கின்ற
ஒரு பண்டைய
பாத்திரம்!

இறைச்சியும்
சில மீன்களும்
முருங்கைகாய் முளகாணம்
தேங்காய் அரைத்து
பயற்றங்காய் பால்க்கறி
ஆக்கும் நாட்களே
இவர்கள் ஆட்டம் அரங்கேறும்
நாட்கள்!

எவ்வளவு ஆடினாலும்
அரைத்தாலும்
வியர்வை
இவர்களுக்கில்லை!

மிளகாயை கண்களிலே
இட்டு விதவிதமாய்
வித்தை காட்டுவார்கள்
சொட்டுக்கூட அழுகை வராது
எரிதலும் இராது!

சுட்டகொச்சிக்காயாயும்
கட்டித்தேங்காயும்
உப்புக்கருவாடும் சேர்த்து
காச்சகார வாய்க்கு
பசியாற அரைபாங்க

அப்பெல்லாம்
அதுக்கு எவ்வளவு
மவுசு தெரியுமா!

கன்னி பொண்ணுங்க
பச்ச மஞ்சளோடு
சந்தணமும் பன்னீரும்
பன்னீரும் கொஞ்சம் விட்டு
பவித்திரமாய் அரைபாங்க!

வெய்யிலோ
மழையோ தாக்கிடலாம்
என தனியான இடம்
சில இடங்களில்
சிம்மாசனம்போல தனியே
கட்டும் கட்டியிருக்கும் !
மூடிவைக்க
கற்பன்னால் சிறு பாய்!

இணை பிரியாத
காதலர்களாய்
இருவரும் எந்நேரமும்
உரசிக்கொண்டே இருப்பார்கள்
தேய்வு இருவருக்கும்தான்!

அவர்கள் மென்று உமிழ்வதற்கு
மிளகாயோ ,தேங்காயோ
கிடைக்கும் அப்பப்போ
மருதோன்றியும்
அம்மைக்காலத்தில்
பத்திரமும் அகப்படும்!

அகப்பட்டவர்கள் அழுது
விழுதாகும் வரை
அரைபடுவார்கள்!

இறைச்சி தாளிக்க
இஞ்சியும் பூண்டும்
ஒன்றாக அரைபடும்!

உராய்வின் திறணைக்கூட்ட
ஆங்காங்கே உளியினால்
செய்யப்பட்ட சிராய்ப்புக்கள்!

சித்திரமாய் சிதைக்கப்பட்ட
அம்மி சித்திரமாம்
அவள் கைபட்டு
ஒரு நடனமே ஆடும்

சிலவேளை
தலைகீழாகவே
குழவி நிற்கும்!

சோடியின் ஒற்றையை
வீட்டுச் சிறுவன் தூக்கி
கிணற்றுக்குள்
போட அன்றிலிருந்தே அவள்
விதவையானாள்

பஞ்சம் நடனமாடுகின்ற
காலம்
அம்மி பொளியுறதோ......
என்று கூறி
ஒருவர் அடிக்கடி கூவித்திரிவார் இப்போதெல்லாம்
அம்மியும் இல்லை
அவர் வருவதும் இல்லை!

உமர் அலி முகம்மதிச்மாயில்
2014 April 23


Tag PhotoAdd LocationEdit
Like · · Stop Notifications · Share · Edit



Thirugnanasampanthan Lalithakopan, Meeralebbe Samsun Ali, Azhar Atham and 39 others like this.

6 shares


Valli Muthu தாய் வீட்டு சீதனமாய் என் அம்மாவுக்கு பாட்டி தந்த அம்மிக்கல்.. இன்னும் பாட்டியின் நினைவுகளை சுமந்தபடி.. எங்கள் வீட்டில் இப்பொழுது காட்சிப் பொருளாகவே இருக்கிறது..மின் அரவை வந்து அடுத்த தலைமுறையை ஆட்டிப்படைத்து விட்டது.. நன்றி பழைய நியாபகங்களை மீட்டித்தந்த உங்கள் கவிதைக்கும் உங்களுக்கும்..
April 23 at 6:40am · Like · 1


Rameeza Mohideen Yaseen அம்மி மறைந்தது
இயந்திரங்களின்
நடமாட்டங்களால்!

அம்மியில் அரைத்த
மிளகாயும்
சூட்டடுப்பில்
சமைத்த உணவும்
நா தட்டும் ருசியன்றோ!

பழமையில் நோயுமில்லை
எல்லாம் மாறியது மண்ணோடு
மண்ணாக !

அருமை !
April 23 at 7:02am · Unlike · 3


S.m. Farsan பழைமை ஒரு புதுமை
April 23 at 8:12am · Unlike · 1


Jazzeil Gmm Zuper pa.....
April 23 at 9:15am · Unlike · 1


Rathy Srimohan அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என .......அம்மியின் முக்கியத்துவம் எமது திருமணச்சடங்குகளில்..,,,புதுமைகளின் ஆதிக்கத்தால் பழமைகள் எங்கோ மறைந்து போய்விட்டன.........அருமை!!!!
April 23 at 9:18am · Unlike · 2


Mmed Amein ammi mithitthu arunthathy partha kalathil ituntha valvin rammiyam ippothu illai intha computer ulhatthil" enpathai namthu kavingar umarlali thelivu padach cholliirupasthau silkkiayamum siladayum ahum.
April 23 at 9:40am · Unlike · 1


Jaleel Mohd அம்மியின் அருமையை அழகாய் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் Uman Ali .
April 23 at 9:44am · Edited · Unlike · 1


Karolin Soffe சோடியின் ஒற்றையை
வீட்டுச் சிறுவன் தூக்கி
கிணற்றுக்குள்
போட அன்றிலிருந்தே அவள்
விதவையானாள்...........................அருமை
April 23 at 9:56am · Unlike · 2


Ibra Lebbai "Ammi" azaperiya sevagan appo iruntha mowsu ippoa illayea?Athay viduvoam.Varikalal uyer uddivider anpu umar ali vazthukal.
April 23 at 11:18am · Unlike · 1


Zainab Mariyam Nice gazzali again remember to the past life now it's very rare in the houss.new generation not known about its task your poem is great.
April 23 at 12:54pm · Unlike · 1


மா.சித்ரா தேவி அம்மியில் அரைத்து சம்பல் செய்தால்,வாவ்
April 23 at 3:23pm · Unlike · 2


Mohamed Fahim Ammeee.......ku .... evallavu.....kathaya machan. ...Great. ...thanka...mudiyala. ..
April 23 at 3:45pm · Unlike · 1


Musthakeem Mohd Good mmmm
April 23 at 3:50pm · Unlike · 1


Smc Ganeshamurthy v.nice like
April 23 at 4:06pm · Unlike · 1


Abdul Wajeeth Mohamed Thamby excellent .....
April 23 at 4:55pm · Unlike · 1


Kalaimahan Fairoos அருமையான கவிதை! அம்மா - அம்மி!!
April 23 at 5:20pm · Unlike · 1


Hassan Mohideen Bawa A fine recall of the child hood set up
April 23 at 7:59pm · Unlike · 1


Ahamed Abdul Kader Ahamed அம்மா என்று அழைக்கும்போது இருந்த அம்மி
மம்மி என்று அழைத்தவுடன் அம்மி...கம்மியாகிவிட்டதோ
April 23 at 8:07pm · Unlike · 1


Mohamed Ismail Umar Ali அம்மியில் உங்கள் நினைவுகளை அரைத்து குழைத்தெடுத்த அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்!
April 23 at 9:15pm · Like · 1


Meera Mahroof "இணை பிரியாத
காதலர்களாய்
இருவரும் எந்நேரமும்
உரசிக்கொண்டே இருப்பார்கள்
தேய்வு இருவருக்கும்தான்!"

அருமை. உமர்அலி.
April 23 at 9:29pm · Unlike · 3


Logesh Velu nice
April 23 at 9:50pm · Unlike · 1


Mohamed Ismail Umar Ali நன்றி சேர் Meera Mahroof
April 23 at 10:25pm · Like


Azhar Atham Superb..
April 24 at 11:30am · Unlike · 1


Thaiyeeb Vellaiyan இணை பிரியாத
காதலர்களாய்
இருவரும் எந்நேரமும்
உரசிக்கொண்டே இருப்பார்கள்
தேய்வு இருவருக்கும்தான்! Niceda Machchan
April 24 at 2:04pm · Unlike · 1


Thirugnanasampanthan Lalithakopanஎத்தனையோ அறுசுவையை மேன்றிருக்கிறேன் ...அம்மா அரைத்து சமைத்து தந்த சின்ன ரால் சொதியின் வாசம் இன்னும் மனசில் ...நன்றி அண்ணா
April 25 at 4:42am · Unlike · 1

கனியாத கனி





கிளையில் கனிந்த கனி நீ
காண்பதுண்டோ வாழை
குலையில் பழுத்து நீ இன்று
உண்பதுண்டோ?

அணிலுடன் பட்சிகள்
பட்டினி அவை காணுமுன்
இளங்காய்கள்
மரப்பெட்டியில்!

பிஞ்சுகள் ஆய்கிறார்
நஞ்செல்லாம் தெளிக்கின்றார்
பச்சைக்காயெல்லாம்
பொச்சென மாறுது நிறம்
பழம்போல தோணுது கணம் !

முதிர்ந்து கனிந்த கனி
இனித்து சுவைப்பது போல்
மருந்து அடித்த கனி
எந்தச் சுவையுமில்லை!

பழமல்ல நிஜத்திலது
பழநிறத்து
வெம்பலல்லோ
மணமில்லை மாங்கனியில்
குணமில்லை தீங்கனிகள்
இக்காலம் உண்மையல்லோ?

நரிகண்ட திராட்சை போல்
நான் உண்ட கனிகளெல்லாம்
நாக்கூசும் புளியேனோ
தீன் சுவையும் மறைந்ததேனோ?

பொல்லால் அடித்த பலா
கனி வருது
சொல்லால் சொல்கையில்தான்
அது சுவை தருது!

சொல்லி விற்கிறான்
சத்தியம் செய்கிறான்
சுவைப்பதன் பின்னால்
அவன் சத்தியம் பொய்க்கும்!

சோகைப் பிள்ளை போல
வெம்புக்கனி
சோபையில்ல உண்மையில்
அத நம்பு இனி!

நோயைகொடுக்குமோ
தெரியவில்லை
ஆனால் நிச்சயமாய் அது
உடலுக்கு நல்லமில்லை!

உலர் வைக்கோல் போருக்குள்ளே
முதிர் முதிரைக் கொத்துள்ளே
சுத்தி வைத்து பழுத்தது போல்
சுவையாக இருப்பதில்லை

மருந்து அடித்த கனி
என்றும் சுவையுமில்லை
விருந்தும் அதனாலே
திருப்தியில்லை!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 april 28

Tuesday, April 22, 2014

வெறுங்கூடு!

வெறுங்கூடு!

காதலுடுடன்
கூடு கட்டி
கன்னிப்பெடை
கைபிடித்து !

ஆசையை கருவாக்கி
பூசைகள் பலசெய்து

ஒன்றன் பின் ஒன்றாக
பல குஞ்சு
நாங்கள் வைச்சோம்!

உண்ணக்கனி கொடுத்தோம்
உள்ளச்சுனை திறந்து
அள்ளிப் பருக விட்டோம்!

பள்ளிப்பருவத்தில்
படிக்காத ஆசானாய்
துள்ளித்திரிகையிலே
துணை நிற்கும் நண்பனாக
நாங்க நின்றோம்

துவண்டு விழுகையிலே
கொழுகொம்பாய் பணிசெய்து
அரண்டு மிரள்கையிலே
தைரியப் பானம் பருக்கி
உங்களை புடம்போட்டோம் !

இருட்டை வெளிச்சத்தால்
வறிதாக்கி
ஏழ்மையை கல்வியால்
விரட்டி
ஏணியில் நீங்கள் ஏறிச்செல்ல
எங்களையே
படியானோம்!

இப்போ
தள்ளாடுகிறது தேகம்
புகைகிறது பார்வை
எட்ட நின்று
எள்ளி நகையாடுகிறது
தூக்கம் !

மலம் சிக்கிக்கொண்டு
வழி மறித்து வம்பு செய்கிறது
முக்கினாலும் வழிவிடுகிதில்லை!
முகமும் விடியுதில்லை!

முக்கலும் முனகலும்
முந்தானை முடிச்சாக !

கன நாளாக ஆடிக்கொண்டிருந்த
கடவாய்ப்பல்லில்
எஞ்சிய ஒன்று
முந்தைநாள் ஒடியல்
ஒன்றுடன் போராடி
தோற்று வீழ்ந்து விட்டது!

சொல்லெலாம்
செல்லாக்காசாகி
செல்லவேண்டிய இடத்தை
போய்ச்சேராமல் வேறெங்கோ
சென்றுவிடுகின்றன!

பத்திரிகைச்செய்திகள்
புளித்துப்போய் விட்டன
புத்தி பேதலிக்கவில்லை
அழிந்துவிடவுமில்லை நினைவுகள்!

ஆனாலும்
இளைமைக்காலம்
இன்னும்
தெளிவாக உள்ள மனத்திரையில்
துல்லியமாகத் தெரிகிறது
அதனால்தான் அப்படியே
இறுகிப்போன
முகங்கள் அப்பப்போ
இளகிப்புன்னகைக்கின்றன!

ஒரு வளைந்த தடியே
எங்களை
விழுந்து விடாமல்
தாங்கிக் கொள்கின்றது
அதுவும் நாங்கள்
நடுங்கிக்கொண்டு
பிடிக்கும் வரைதான்!

வருடத்திலொருதடவை
விடுமுறைக்கு வரும்
உங்கள் குழந்தைகளுக்கு
நாங்கள் கிராமத்து
தாத்தாவும் பாட்டியும்
மட்டுமே!
எங்களிடம் அவர்கள்
நெருங்குவது
ராஜா ராணி கதைக்காகவே!

நாங்கள் அவர்களை
வாஞ்சையோடோடு தடவும்போது
எங்களது சுருங்கிய தோல்கள்
அவர்கள் பிஞ்சுக்கைகளால்
தடவப்படுவது அன்பினாலா
என்பது இன்றுவரை
புரியாத புதிராக இருக்கின்றது
ஏனெனில் அவர்களது ஸ்பரிசங்கள்
எங்களுக்கு அந்த உணர்வை
பிரதிபலிக்கவில்லை ஏனெனில்
நானும் அவளும் உணர்வுகளை
ஸ்பரிசங்களால்
ஒருவருக்கருவர் முழுதாக
மொழிபெயர்த்தவர்கள்

இப்போதெல்லாம்
எங்களுக்கு பலகாரம்
சுட முடியாது
எங்கள் நாவுக்கு
பலகாரமும் புரியாது!

அதிகாரம் செய்த நாங்கள்
இன்று ஆசீர்வாதம்
வழங்க மட்டுமே
நாங்கள் உங்களால்
இடம்பெயர்க்கப்பட்டத்தில்
ஒரே ஒரு மகிழ்ச்சி
ஆம் நீங்கள் எங்கள் சந்ததிகள்!

எத்தனை நாட்கள்
உங்களை கம்பளியால் போர்த்திவிட்டு
எங்களையே நாங்கள்
போர்வையாக்கி தூங்கியிருப்போம்?
ஆனால் கம்பளிதான் இன்று
நடுக்கங்களை துரத்துகின்ற
நாயகமாகி விட்டது!

கிளிகள் இருந்து
பறந்து சென்ற கூடு
நினைவுக்காற்றுகளால்
அசையுது

வெறுங்கூடு ஆடுது
மனமேடையில்
நினைவுகள் ஓடுது!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 APRIL 22nd

Friday, April 18, 2014

என்னைக்கவர்ந்த சில தாவரங்கள்,பூக்கள் ,காட்சிகள்

இது  ஓமான் மஸ்கட்  சர்வதேச  விமான நிலையத்தில்  எடுத்தது 16 01 2014
 இது  ஓமான் மஸ்கட்  சர்வதேச  விமான நிலையத்தில்  எடுத்தது=16 01 2014


நிந்தவூரில்  வயல் வரம்பில்  எடுத்தது









இராவண மீசை 

இராவண மீசை ,
கடல் கரைகளை ஒட்டி புதராக படர்ந்து வளரும் ஒரு புற்றாவரம்.இலைகள் நீண்ட வாழ்கள் போன்றிருக்கும் புதராக படர்ந்து வளரும். இலைகள் ஓரளவு தடித்தவை, 10-15 சென்டி மீட்டர் வரை நீளமான இலைகளின் நுனிகள் கூரானவை.
பச்சை இலைகளை விட காய்ந்த இலைகள் மிகவும் வன்மையனவை. நுனிகள் குத்துவதனால் இதன் அருகில் அதிகமாக யாரும் போக மாட்டார்கள்.கடற்கரையில் விளையாடும் சிறுவர்களைக்கூட பெற்றோர்கள் விடுவதில்லை.
இதனை வீட்டுக்கு கொண்டு சென்று எலித்தொல்லை உள்ள வீடுகளின் எலி ஓடித்திரியும் பாதை,எலி நுழையும் வழியிலே வைப்பார்கள்,.
எண்பதுகளில் வீடுகளுக்கு மரக்கடைச்சல் பொல்லுகள் நிலை ஜன்னல்களுக்கு மேலே வைக்கத் துவங்கினார்கள்,அதற்கு முன்னர் கட்டப்பட்ட செங்கல் வீடுகளில் எல்லாம் காற்று , வெளிச்சம் உட்செல்வதற்காக சீமேந்தினால் செய்யப்பட்ட பூக்கற்கள் வைத்தே கட்டப்படும்,இந்தப்பூக்கற்கள் எலிகள் ,அணில்கள் புகுவதற்கு நல்ல வசதியானவை. பூக்கற்களினுள் எலி அணில் என்பன கூடு வைத்து இனம் பெருக்கும்.எலிகள் வீட்டினுள் புகுந்து பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் .பூக்கற்களின் முகப்பில் அல்லது எலி நுழையக்கூடிய வழிகளில் இராவண மீசையை வைப்பதால் உள்ளே நுழைய முனையும் எலியின் முகத்தில் இதன் நுனிகள் குத்தும் இதனால் எலி அங்கு நுழைய மாட்டாது.முன்னெரெல்லாம் அதிகம் காணப்பட்ட இது நிந்தவூர் கடற்கரை ஓரங்களில் இப்பொழுதெல்லாம் அதிகம் காணப்படுவதில்லை, 2004 டிசம்பர் ஆழிப்பேரலையின் பின்னர் அதிகமாக அழிந்து விட்டது,இருப்பினும் மிகச்சொற்ப அளவில் தெற்குப்புறமாக உள்ள கடற்கரையில் காணப்படுகின்றது.

கண்டங்கத்தரி 

கத்தரி இனத்தாவரம்,முட்கள் நிறைந்தது பூவிலும் காயிலும் கூட  முட்கள் இருக்கும்,பூ ஊதா நிறமானது ,குட்டையாக நிலத்துடன் ஓட்டிப்படர்ந்து காணப்படும்.பல்வேறு வகையான மருத்துவ குணம் இருக்கின்றது.அருகிப்போய்விட்ட இனம்.இதன்  விதை ,வேர் என்பன  பற்சூத்தை,பல்வலிக்கு  வெவ்வேறு வழிகளில்  பயன்படுத்தப்படுகின்றன.

பூமத்தை

பூமத்தை-முன்னர் வீதி ஓரங்களில்  அதிகமாக காணப்படும்.வெண்ணிறமான இதன் பூ  பீக்கர் போன்றது.இதன் காய் நச்சுத்தன்மையானது,காயின் மேற்பக்கம் போட்டியான முள் போன்ன்ற  முனைப்புக்கள் காணப்படும்.இதனால் எறிந்தால்  எரிபட்டவருக்கு அதிக வலி எடுக்கும்,முட்கள் தோலில் பதியும்.தொழில் ஏற்படும் கட்டிகளுக்கு இதன் இலை காய் என்பவற்றை  அரைத்துக்கட்டுவார்கள்.

கள்ளிமுள்ளு  இது முன்னர் வெளிக்கு நடப்படும், இதன் முட்கள் மிகவும்  கூரியவை. 



இந்தச்செடியின்  காய்கள் மிகவும்  ஓட்டும் தன்மை  உடையவை.ஒன்றுடன் ஒன்று ஒட்டி  ஒரு பந்துபோல  உருண்டு திரண்டிருக்கும்.இது கடற்கரை ஓரங்களில்  காற்றுக்கு   உருண்டு திரியும்.இந்தச்செடி வெள்வாலோடை ஆற்றின் இரு மருங்கிலும் இன்னும் காணப்படுகின்றது.இது 2014 ஜனவரி மாதம் நான் எடுத்த புகைப்படமே.

சப்பாத்துக்கள்ளியின் காயும் பழமும்-இதில் சென்னிறப்பழமும் உண்டு.



சப்பாத்துக்கள்ளி, இது  கடற்கரையை ஒட்டிய நிலங்களில்   தானாக  வளரும் ஒரு கள்ளி இனம்,இது   ஒரு காலத்தில் பூத்துக்காய்க்கும்,இதன்  காய்கள் பச்சை நிறமானவை பழங்கள் இளம் சென்நிரமானவை.பழங்களின் முனையிலும் சிறு சிறு முட்கள் காணப்படும்.இது கனிந்தவுடன்  பறவைகள் கொத்திச்சுவைக்கும். சிறுவர்களும் இந்தப்புளிப்பான சுவையுடைய  பழங்களைசுவைப்பார்கள்.தற்போது இதனை மேலை நாடுகளில்  பல்லன்காடிகளில் பக்கட்டில் அடைத்து அதிக விலைக்கு விற்கின்றார்கள்.





வவ்வாலோடை  ஆற்றிலே இறால் வீசுபவர்கள்  இரவில் வலை  சிறுவட்டமாக விரித்து   இந்த குழியில்தான்  இறால்களை வலையில் இருந்து  உதறி  களற்றுவார்கள், சற்று தவாளிப்பாக இருக்கும் இந்தக்குளியின் உதடு இறால்கள் ,மற்றும் வலையை  ஓரளவு கட்டுப்படுத்த உதவும். இரவு நேரங்களில்  "கணவாய் லாம்பு"  வெளிச்சத்துக்கு பயன்படுத்துவார்கள் இதனை அருகில் நிலத்தில்  ஊன்றி நடப்பட்டிருக்கும்      கப்புக் கம்பிலே   கொழுவி வைப்பார்கள்.

இது வெளவாலோடை ஆறு, இந்தா ஆற்றின்  சில  இடங்களில்  சாப்பை என்று அழைக்கப்படும் ஒருவகையான  தடிப்பமான  தட்டை வடிவ ஓலைகளைக்கொண்ட கிட்டத்தட்ட ஐந்து ஆறு அடிவரை வளரக்கூடிய  ஒருவகையான புற்கள் உள்ளன.இந்த  புற்களின்  நாருருவான வேர்கள். மிகவும் உறுதியானவை.இது ஆற்றங்கரையை மண்ணரிப்பில் இருந்து ஓரளவு பாதுகாக்கின்றது.இந்த புற்களின் நினிகளைச்செர்த்து ஒரு  சிறு பறவை இனம் கூடு கட்டி இனம் பெருக்குகின்றது.முன்னர் இந்த சாப்பை புற்களை  அரிந்தெடுத்து  வீட்டுக்கூரை வேய்வார்கள்.தற்போது இத அழுகுக்காக  அமைக்கப்படும் சிறு கொட்டகைகளை  கூரை அழகு படுத்த பயன்படுத்துகின்றார்கள்.இதன் பூவானது வலிமையான ஒரு தண்டிலே  நுனிப்பக்கம் தடித்த உருளை வடிவமான வேல்வெட்டுப்போல இருக்கும்.முற்றியது வெடித்து காற்றிலே பறக்கும் பஞ்சு போல.

ஆற்றங்கரையிலே  அலைமோதிக்கொண்டிருக்கும் ஒரு சல்வீனியா எனப்படும் ஆற்றுவாளைக் குடும்பம்

வெளிகளிலும் புதர்களிலும் படருகின்ற பெப்புடலை எனப்படும் ஒரு கோடி,கசப்பு  சுவையுடைய கனி,புடோலன்காயின்   முதுகில் உள்ள  வெண்ணிரக்கோடுகளை தனது  முதுகில் கொண்டிருக்கும்,புடோளின் மணத்தை உடையது.இது புடோல் இனமே.



குருவிச்சை-ஒரு ஓட்டுண்ணித்தாவரம்  இது வந்து சேர்ந்த எந்த மரமும் உருப்பட்டதாக தெரியவில்லை, பலன்கள் பசைத்தன்மையானவை,இதனை உண்ட  குருவி காகம்,குயிலின் அலகுகளில் இதன் வித்துக்கள் ஒட்டிக்கொள்ளும்,பறவைகள் அழகு தீட்ட மரபட்டையில்  அழகு தீட்டும்போது  இது மரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு காலம் சாதகமாக அமையும்போது முளைத்து  நீர் கனியுப்பு  போன்றவற்றை மரத்தின் பட்டைக்கூடாக   உறுஞ்சி உயிர்வாழும்,இதன் கிளைகள் இணைக்கவர் முறையிலே பிரியும்.அதிகமாக மா, மாதுளை,பூவரசு, போன்ற மரங்களில்   தொற்றிகொள்ளும். குருவிச்சை  மரங்களில் பிடித்தால் அந்த வீட்டில் தரித்திரியம் பிடிக்கும் என்று சொல்வார்கள். இதற்குக் கரணம் இல்லாமல் இல்லை,தமது  வளவில் உள்ள மரத்தில் குருவிச்சை தோற்றி இருப்பதை  அவதானிக்காத,அல்லது அதை அகற்றாத  வீட்டார் எப்படி  கஷ்டப்பட்டு   முன்னுக்கு வருவார்கள் என்பதே  அந்த  கருத்துக்கூறி நிக்கும்  பொருளாகும்



கோளிப்பூ-இதன் சுருட்கள் மூளையின் மடிப்புக்களை   பிரதி பலிக்கும் ,