நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, April 18, 2014

என்னைக்கவர்ந்த சில தாவரங்கள்,பூக்கள் ,காட்சிகள்

இது  ஓமான் மஸ்கட்  சர்வதேச  விமான நிலையத்தில்  எடுத்தது 16 01 2014
 இது  ஓமான் மஸ்கட்  சர்வதேச  விமான நிலையத்தில்  எடுத்தது=16 01 2014


நிந்தவூரில்  வயல் வரம்பில்  எடுத்தது









இராவண மீசை 

இராவண மீசை ,
கடல் கரைகளை ஒட்டி புதராக படர்ந்து வளரும் ஒரு புற்றாவரம்.இலைகள் நீண்ட வாழ்கள் போன்றிருக்கும் புதராக படர்ந்து வளரும். இலைகள் ஓரளவு தடித்தவை, 10-15 சென்டி மீட்டர் வரை நீளமான இலைகளின் நுனிகள் கூரானவை.
பச்சை இலைகளை விட காய்ந்த இலைகள் மிகவும் வன்மையனவை. நுனிகள் குத்துவதனால் இதன் அருகில் அதிகமாக யாரும் போக மாட்டார்கள்.கடற்கரையில் விளையாடும் சிறுவர்களைக்கூட பெற்றோர்கள் விடுவதில்லை.
இதனை வீட்டுக்கு கொண்டு சென்று எலித்தொல்லை உள்ள வீடுகளின் எலி ஓடித்திரியும் பாதை,எலி நுழையும் வழியிலே வைப்பார்கள்,.
எண்பதுகளில் வீடுகளுக்கு மரக்கடைச்சல் பொல்லுகள் நிலை ஜன்னல்களுக்கு மேலே வைக்கத் துவங்கினார்கள்,அதற்கு முன்னர் கட்டப்பட்ட செங்கல் வீடுகளில் எல்லாம் காற்று , வெளிச்சம் உட்செல்வதற்காக சீமேந்தினால் செய்யப்பட்ட பூக்கற்கள் வைத்தே கட்டப்படும்,இந்தப்பூக்கற்கள் எலிகள் ,அணில்கள் புகுவதற்கு நல்ல வசதியானவை. பூக்கற்களினுள் எலி அணில் என்பன கூடு வைத்து இனம் பெருக்கும்.எலிகள் வீட்டினுள் புகுந்து பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் .பூக்கற்களின் முகப்பில் அல்லது எலி நுழையக்கூடிய வழிகளில் இராவண மீசையை வைப்பதால் உள்ளே நுழைய முனையும் எலியின் முகத்தில் இதன் நுனிகள் குத்தும் இதனால் எலி அங்கு நுழைய மாட்டாது.முன்னெரெல்லாம் அதிகம் காணப்பட்ட இது நிந்தவூர் கடற்கரை ஓரங்களில் இப்பொழுதெல்லாம் அதிகம் காணப்படுவதில்லை, 2004 டிசம்பர் ஆழிப்பேரலையின் பின்னர் அதிகமாக அழிந்து விட்டது,இருப்பினும் மிகச்சொற்ப அளவில் தெற்குப்புறமாக உள்ள கடற்கரையில் காணப்படுகின்றது.

கண்டங்கத்தரி 

கத்தரி இனத்தாவரம்,முட்கள் நிறைந்தது பூவிலும் காயிலும் கூட  முட்கள் இருக்கும்,பூ ஊதா நிறமானது ,குட்டையாக நிலத்துடன் ஓட்டிப்படர்ந்து காணப்படும்.பல்வேறு வகையான மருத்துவ குணம் இருக்கின்றது.அருகிப்போய்விட்ட இனம்.இதன்  விதை ,வேர் என்பன  பற்சூத்தை,பல்வலிக்கு  வெவ்வேறு வழிகளில்  பயன்படுத்தப்படுகின்றன.

பூமத்தை

பூமத்தை-முன்னர் வீதி ஓரங்களில்  அதிகமாக காணப்படும்.வெண்ணிறமான இதன் பூ  பீக்கர் போன்றது.இதன் காய் நச்சுத்தன்மையானது,காயின் மேற்பக்கம் போட்டியான முள் போன்ன்ற  முனைப்புக்கள் காணப்படும்.இதனால் எறிந்தால்  எரிபட்டவருக்கு அதிக வலி எடுக்கும்,முட்கள் தோலில் பதியும்.தொழில் ஏற்படும் கட்டிகளுக்கு இதன் இலை காய் என்பவற்றை  அரைத்துக்கட்டுவார்கள்.

கள்ளிமுள்ளு  இது முன்னர் வெளிக்கு நடப்படும், இதன் முட்கள் மிகவும்  கூரியவை. 



இந்தச்செடியின்  காய்கள் மிகவும்  ஓட்டும் தன்மை  உடையவை.ஒன்றுடன் ஒன்று ஒட்டி  ஒரு பந்துபோல  உருண்டு திரண்டிருக்கும்.இது கடற்கரை ஓரங்களில்  காற்றுக்கு   உருண்டு திரியும்.இந்தச்செடி வெள்வாலோடை ஆற்றின் இரு மருங்கிலும் இன்னும் காணப்படுகின்றது.இது 2014 ஜனவரி மாதம் நான் எடுத்த புகைப்படமே.

சப்பாத்துக்கள்ளியின் காயும் பழமும்-இதில் சென்னிறப்பழமும் உண்டு.



சப்பாத்துக்கள்ளி, இது  கடற்கரையை ஒட்டிய நிலங்களில்   தானாக  வளரும் ஒரு கள்ளி இனம்,இது   ஒரு காலத்தில் பூத்துக்காய்க்கும்,இதன்  காய்கள் பச்சை நிறமானவை பழங்கள் இளம் சென்நிரமானவை.பழங்களின் முனையிலும் சிறு சிறு முட்கள் காணப்படும்.இது கனிந்தவுடன்  பறவைகள் கொத்திச்சுவைக்கும். சிறுவர்களும் இந்தப்புளிப்பான சுவையுடைய  பழங்களைசுவைப்பார்கள்.தற்போது இதனை மேலை நாடுகளில்  பல்லன்காடிகளில் பக்கட்டில் அடைத்து அதிக விலைக்கு விற்கின்றார்கள்.





வவ்வாலோடை  ஆற்றிலே இறால் வீசுபவர்கள்  இரவில் வலை  சிறுவட்டமாக விரித்து   இந்த குழியில்தான்  இறால்களை வலையில் இருந்து  உதறி  களற்றுவார்கள், சற்று தவாளிப்பாக இருக்கும் இந்தக்குளியின் உதடு இறால்கள் ,மற்றும் வலையை  ஓரளவு கட்டுப்படுத்த உதவும். இரவு நேரங்களில்  "கணவாய் லாம்பு"  வெளிச்சத்துக்கு பயன்படுத்துவார்கள் இதனை அருகில் நிலத்தில்  ஊன்றி நடப்பட்டிருக்கும்      கப்புக் கம்பிலே   கொழுவி வைப்பார்கள்.

இது வெளவாலோடை ஆறு, இந்தா ஆற்றின்  சில  இடங்களில்  சாப்பை என்று அழைக்கப்படும் ஒருவகையான  தடிப்பமான  தட்டை வடிவ ஓலைகளைக்கொண்ட கிட்டத்தட்ட ஐந்து ஆறு அடிவரை வளரக்கூடிய  ஒருவகையான புற்கள் உள்ளன.இந்த  புற்களின்  நாருருவான வேர்கள். மிகவும் உறுதியானவை.இது ஆற்றங்கரையை மண்ணரிப்பில் இருந்து ஓரளவு பாதுகாக்கின்றது.இந்த புற்களின் நினிகளைச்செர்த்து ஒரு  சிறு பறவை இனம் கூடு கட்டி இனம் பெருக்குகின்றது.முன்னர் இந்த சாப்பை புற்களை  அரிந்தெடுத்து  வீட்டுக்கூரை வேய்வார்கள்.தற்போது இத அழுகுக்காக  அமைக்கப்படும் சிறு கொட்டகைகளை  கூரை அழகு படுத்த பயன்படுத்துகின்றார்கள்.இதன் பூவானது வலிமையான ஒரு தண்டிலே  நுனிப்பக்கம் தடித்த உருளை வடிவமான வேல்வெட்டுப்போல இருக்கும்.முற்றியது வெடித்து காற்றிலே பறக்கும் பஞ்சு போல.

ஆற்றங்கரையிலே  அலைமோதிக்கொண்டிருக்கும் ஒரு சல்வீனியா எனப்படும் ஆற்றுவாளைக் குடும்பம்

வெளிகளிலும் புதர்களிலும் படருகின்ற பெப்புடலை எனப்படும் ஒரு கோடி,கசப்பு  சுவையுடைய கனி,புடோலன்காயின்   முதுகில் உள்ள  வெண்ணிரக்கோடுகளை தனது  முதுகில் கொண்டிருக்கும்,புடோளின் மணத்தை உடையது.இது புடோல் இனமே.



குருவிச்சை-ஒரு ஓட்டுண்ணித்தாவரம்  இது வந்து சேர்ந்த எந்த மரமும் உருப்பட்டதாக தெரியவில்லை, பலன்கள் பசைத்தன்மையானவை,இதனை உண்ட  குருவி காகம்,குயிலின் அலகுகளில் இதன் வித்துக்கள் ஒட்டிக்கொள்ளும்,பறவைகள் அழகு தீட்ட மரபட்டையில்  அழகு தீட்டும்போது  இது மரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு காலம் சாதகமாக அமையும்போது முளைத்து  நீர் கனியுப்பு  போன்றவற்றை மரத்தின் பட்டைக்கூடாக   உறுஞ்சி உயிர்வாழும்,இதன் கிளைகள் இணைக்கவர் முறையிலே பிரியும்.அதிகமாக மா, மாதுளை,பூவரசு, போன்ற மரங்களில்   தொற்றிகொள்ளும். குருவிச்சை  மரங்களில் பிடித்தால் அந்த வீட்டில் தரித்திரியம் பிடிக்கும் என்று சொல்வார்கள். இதற்குக் கரணம் இல்லாமல் இல்லை,தமது  வளவில் உள்ள மரத்தில் குருவிச்சை தோற்றி இருப்பதை  அவதானிக்காத,அல்லது அதை அகற்றாத  வீட்டார் எப்படி  கஷ்டப்பட்டு   முன்னுக்கு வருவார்கள் என்பதே  அந்த  கருத்துக்கூறி நிக்கும்  பொருளாகும்



கோளிப்பூ-இதன் சுருட்கள் மூளையின் மடிப்புக்களை   பிரதி பலிக்கும் ,





0 கருத்துக்கள்:

Post a Comment