நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, December 31, 2014

ஆங்கில வருடத்தின் இறுதி நாள்




ஆங்கில வருடத்தின் இறுதி நாள்
.....................
நான் ஈற்றுத்தாள்
நாள்காட்டியில் நேற்றுத்தான்
எனது முதலாளி
என்னை தொட்டுப்பார்த்தான்!

என்ன வழியனுப்பவும்
வரவேற்கவும்
ஒரு பண்டிகை போல
ஒரு கொண்டாட்டம்!

பட்டாசுகள்
புத்தாடைகள்
களியாட்டங்கள்!
அப்பப்பா எவ்வளவு திட்டங்கள்

இந்த ஆண்டுக்கு நான்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்!
அடுத்த ஆண்டுக்கு
வாசல் திறந்து வழி விடுகிறேன்!

இவ்வளவுநாளும்
நான் எவ்வளவு காட்சிகள் கண்டேன்
எத்தனை பேச்சுக்கள் கேட்டேன்!

சிலருக்கு இந்த ஆண்டு
பெருங்காயம்
இன்னும் சிலருக்கு
வெங்காயம்
சிலர் செய்தார்கள்
கைங்கரியம்
பலர் சேர்த்தார்கள்
ஐசுவரியம்!

பழக்கங்களை மாற்றுவேன் என்று
தமக்குள்ளே
ஊமை ஒப்பந்தங்கள் போட்டவர்கள்
அவர்களாகவே மீறிக்கொண்டார்கள்!

பினக்குகளைத்தீர்ப்பேன்
என்றவர்கள்
புதுப்பினைக்குகளைப் பிரசவித்து
பிரச்சினைபூக்களை
புஸ்பித்தார்கள்!

வேதாளத்தை நான்
இந்த வருடத்திலும்
கண்டேன்
நாட்காட்டியின் ஒற்றகளே
முருங்கை மரங்கள்!

நான் தற்கொலை செய்யவில்லை
தூக்கிலிடப்படவுமில்லை
எனது ஆயுள் இவ்வளவுதான்
அதற்காக நான் கவலைப்படவுமில்லை!
நிலையற்றதுதானே உலகு!

இன்னும் மனிதர்கள்
என்னளவு வாழ்வைப்புரியவில்லை
என நினைக்கும் போது
எனக்குச்சிரிப்பு வருகின்றத
கூடவே கவலையும் வருகிறது !

எனக்கு முன்னாள் மடிந்துபோன
ஒவ்வொரு சகோதர்களும்
எனக்கு நேற்றுக்களைப்பற்றி
கதை கதையாய்
எவ்வளவோ
சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்!

நேற்றுக்களை வாங்கத் தவிப்பவர்களை
நான் அதிகம் கண்டிருக்கிறேன்
அவர்களால் எதுவுமே சாதிக்க முடியவில்லை
என் நானும் கூட
அவ்வாறு தோற்றவன்தான்!!

எனது அஸ்தமனத்தைப்பற்றி
எனக்கு கவலையில்லை
ஒரு புதிய பாதை
நான் இறந்த புள்ளியிலேயே
உதயமாகின்றது ,
நான் முடிக்கின்றேன்
ஒரு புதிய இதயம்
துடிக்கத்துவங்குகின்றது!

மறைவும் தோற்றமும்
மகேசனின் நீதி
இறைவனை போற்றிடு நீ
எந்நேரமும் ஓதி!

மு.இ.உமர் அலி
31st Dec 2014


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



வெண்ணிலா வெண்ணிலா, Usanar Saleem, புறமறிவு புற்கலன் and 19 others like this.
2 shares

Fasil Mohamed nice 31/12/2014.end of the year
31 December 2014 at 16:15 · Unlike · 1

Musthakeem Mohd

1 January at 08:30 · Unlike · 1

Musthakeem Mohd

1 January at 08:30 · Like

புறமறிவு புற்கலன் அருமையான வருட இறுதிக்கவிதை
1 January at 08:51 · Unlike · 1

Usanar Saleem உமரலி.......31க்கு முகவரி கொடுத்துட்டீங்களே!என் இனிய நல்வாழ்த்துக்கள்!

Tuesday, December 30, 2014

புற்று!




புற்று!
...........
வெள்ளைக்கார எறும்பின்
பண்டைக்கால ராஜ்யம்
அரசியே இங்கு அசையாமல்
கோலோச்சுகிறார்!

இங்கு அடிக்கடி
அழைக்காமல்
பாம்பு படமெடுத்து வந்து
குடிகளுக்கு
பீதியைக்கிளப்புகின்றது!

போராளிகள்
சேவகர்கள்
இன்னும் சோம்பேறிகளும்
சாவகாசமாக
உலவுகிறார்கள்
அனைவரும் ஒன்றாய்ப்
பழகுகிறார்கள்!!

இந்த
குழாய் ஜன்னல்கள் வைத்த
கோட்டைவீட்டைக்கட்ட
எந்திரிகள் எங்கிருந்தும்
இறக்குமதியாகவில்லை
எந்தக்கல்லும் இதற்குளில்லை!!

சுரங்கமறுப்பது முதல்
சுரப்புச்சுரந்து
சுவரில் சாந்துபூசுவது வரை
எல்லோரும் சேர்ந்து
சுறுசுறுப்பாக செய்கின்றன
சிறப்பாக வாழ்கின்றன .

கல்லில்லாத வீடு
பல்லே இங்கு முதலீடு
புற்றில் புள் முளைக்காது
முளைத்தால்
உள்ளே உயிர் இருக்காது!

நிலத்தின் மேலே
காகப்பறவைகள் சுத்தம்செய்ய
நிலத்திற்கு கீழே
கறையான் காகங்கள்
யுத்தம்செய்கின்றன!

பயிர்செய்து உணவுண்ணும்
கறையான் கூட்டம்
போர்செய்து எதிரியைக் கொல்லும்
இது ராணியின் நாட்டம்!

காற்றோட்டக்கதவுகளும்
காளான் வளர்ப்புகளும்
புற்றுக்குள்ளே
ஏராளமாய் உண்டு !

நீரோடும் வாய்க்கால்கள்
தேரோடும் வீதிகள்
போராடும் வீரர்கள்
என்னும் என்னென்னவோ
அங்கு தாராளம்!

குவித்துவைத்த மண்ணல்ல
இது யாரும் தின்ன
அவித்துக்குவித்த பிட்டுமல்ல
அது ஒரு சமுகத்தின் சரித்திரத்திட்டு !

உயரமாக இருந்தாலும்
கறையான் புற்றிலே
ஒருநாளும்
ஏணி வைத்து ஏறாது !

இது பலவருடயுத்தம்
அங்கு ராணி வைத்ததே சட்டம்
மழையிலே நனைந்தாலும்
குடை பிடிக்க யாருமில்லை
குடையின்றி நனைந்தாலும்
நனைந்தவரை காணவில்லை!

எதிரிகளிடம் வென்ற
ஈசல்கள்
நிலவறைக்குள் சென்று
அஞ்சாதவாசம் பெற்ற
அசையாக்குழந்தைகள் !

வேரில்லாத மரம்
இலையில்லாத செடி
நீரூற்றாமல் வளரும்
நீ இடித்தால் தகரும்!

ஆளரவம் இல்லாத
இடங்களிலே அரசாங்கம்
பேரரவம் இருந்தாலே
அவை இடம் மாறும்!

உயிர்வாழ கட்டியது
பாழடைந்தால்
ஒழிந்தோடி வாழ்பவர்க்கு
கொண்டாட்டம்
ஒளிந்தவரை
கண்டுபிடிப்பதிலும் திண்டாட்டம்!

இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்!

எனக்கு கறையானை
இரும்புக் கூட்டிலே வளர்க்க ஆசை
அதன் கலைகளை கற்றிட பேராசை!
பாசை பழகுவேண்டும்
அதனோடு பேச முனையவேண்டும்!

மு.இ.உமர் அலி
2013Dec 29 — with Shafath Ahmed, தமிழ்ப் பித்தன், Malikka Farook and 39 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Winston Fernando, Michael Collin, Lawrence Vasuthevan and 44 others like this.

Olympic Siraj · Friends with Rajakavi Rahil
கவிதை வயலில்,
முற்றும் மூழ்கியபோது ,
புற்று மீது தனியாத பற்று
ஏற்பட்டது.
29 December 2014 at 09:33 · Unlike · 2

Fasil Mohamed nice lines
29 December 2014 at 11:04 · Unlike · 2

Govind Dhanda Umathu kavikkarngkalukku emathu mariyaathaikkuriya vanakkangkal sakotharaa!
29 December 2014 at 12:08 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரரே Govind Dhanda
29 December 2014 at 15:26 · Like · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரர் Fasil Mohamed
29 December 2014 at 15:26 · Like

Mohamed Ismail Umar Ali நன்றி Olympic Siraj
29 December 2014 at 15:27 · Like

Mohamed Ismail Umar Ali நன்றி Olympic Siraj
29 December 2014 at 15:48 · Like

Steuart Osman Theresa Mary · 18 mutual friends
இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்! nice
29 December 2014 at 20:59 · Unlike · 2

Meera Mahroof !
'இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்!'

அறிவுக்களஞ்சியம்
உங்கள் கவிதை.
வாழ்த்துக்கள். உமர் அலி.
29 December 2014 at 21:19 · Unlike · 3

Kaleel Rahman வானளாவிய புற்றுக்கோபுரம்
அமைக்கும் வெள்ளைக்கார
எறும்பு எங்கு கட்டிடகலை
பயின்றதோ?

அது இறைவன் கொடுத்த
ஞானமன்றோ.
29 December 2014 at 21:49 · Unlike · 2

Kaleel Rahman கல்லில்லாத வீடு
பல்லே இங்கு முதலீடு...See More
29 December 2014 at 21:55 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali தாங்களது மேலான கருத்துக்களைப்பதிவிட்ட அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !Kaleel Rahman,Meera Mahroof,Steuart Osman Theresa Mary

கண்பட்டவயலும் புண்பட்ட உழவனும்!




கண்பட்டவயலும் புண்பட்ட உழவனும்!
...........................................................................
கரும்புபோல இருந்த பயிரு
குடலையாகி பெருத்திருந்த வயிறு!
நெருப்புவச்சி கருகினாப்போல்
சுருப்படிச்சி கறுத்திடுச்சே!

அலைபோட்ட வரவை யெல்லாம்
அலங்கோலமாய் கிடக்குதுகா
குலைபோட்ட நெற்பயிரு
நிலைகுலைஞ்சி படுக்குதுகா !

ஈரக்குலை கெடந்து நடுங்குதுகா
என்ட வட்டையை பாக்கிறப்ப
யாரிடம்போயி நான் சொல்லுவேன்
என்ட வெட்டாறும் கதையத்தான்!

ஈடுவைச்சி எடுத்த காசில்
குத்தகைக்கு எடுத்தபூமி
பாடு பட்டு நானுந்தான்
பக்குவமாய் விதைச்ச காணி !

மழையைத்தா ஆண்டவனே
என்று மன்றாடி கேட்ட நாம
அழவோட தாவென்று
கேட்கத்தான் மறந்தோமோ !

கண்படும் மச்சான் என்று
வயலப்பாதவங்க கனபேரு சொன்னாங்க
என் மனசு புண்படும் மாதிரி
ஒரு மாரி வரும் என்று
அவங்க ஒருத்தருமே சொல்லலியே!

மு.இ.உமர் அலி
2014 DEC 30TH

இந்தப்புகைப்படம் நேற்று 29ஆம் திகதி எடுக்கப்பட்டது. — with Kiramaththan Kaleefa, தமிழ்ப் பித்தன், Mageswari Periasamy and 26 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



மா.சித்ரா தேவி, Ramzin Mahboob, Julkarany Alil and 76 others like this.
5 shares

Farsan S Muhammad கிராமத்து சாயல் அழகு
30 December 2014 at 00:50 · Unlike · 3

Vanitha Solomon Devasigamony குலைபோட்ட நெற்பயிரு
நிலைகுலைஞ்சி படுக்குதுகா ! மழையைத்தா ஆண்டவனே
என்று மன்றாடி கேட்ட நாம
அழவோட தாவென்று
கேட்கத்தான் மறந்தோமோ !
30 December 2014 at 00:58 · Unlike · 4

Mohamed Ismail Umar Ali நன்றி Farsan S Muhammad
30 December 2014 at 00:59 · Like

Mohamed Ismail Umar Ali வரிகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் சகோதரி Vanitha Solomon Devasigamony................இன்று மழையினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேச விவசாயிகளின் கதறல் இதுதானம்மா!
30 December 2014 at 01:00 · Like · 3

Shafath Ahmed உங்கள் கவிதையின் ஆதங்கத்தில் எனக்கும் பங்குண்டு. இம்முறை பெய்த மாரியினால் எனது நெல் வயல்களும் முற்றாக சேதமடைந்துவிட்டது.
30 December 2014 at 06:32 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali யாவரையும் கருத்தில்கொண்டே இக்கவிதைஎழுதப்பட்டது Shafath Ahmed
30 December 2014 at 07:07 · Like

Musthakeem Mohd

30 December 2014 at 08:06 · Unlike · 2

Jaleel Mohd

30 December 2014 at 08:25 · Like

Amier Ali MI PERFECT
30 December 2014 at 10:50 · Edited · Unlike · 2

Azhar Atham Superb
30 December 2014 at 11:09 · Unlike · 1

Kabeer Mohamed Kabeer · 115 mutual friends
nice
30 December 2014 at 11:20 · Unlike · 1

Ikram Hussain Arumai.
30 December 2014 at 13:26 · Unlike · 1

Maruthanila Niyas அருமை தோழர்
30 December 2014 at 13:35 · Unlike · 1

Fasil Mohamed pavam
30 December 2014 at 14:40 · Unlike · 1

Zhakky Ahamed · Friends with Shafath Ahmed and 35 others
nice
30 December 2014 at 16:42 · Unlike · 1

புறமறிவு புற்கலன் arumai nanpa
30 December 2014 at 18:22 · Unlike · 1

Mohideenbawa Mohamed Kaleel Alas! Great loss to all. but the village lines in your poem also a great boost to many. Beautiful.
30 December 2014 at 18:37 · Unlike · 2

Majeed Niyas Arumai.
30 December 2014 at 21:44 · Unlike · 1

Ziyath Ismail · 13 mutual friends
Vattaikka pona purisan ...varathukku munnala...8vayasu pullaikku pondati ....madivudu aththivaram podutanga. ..pullaiku udu katta oru pooham....marmahanda sithanathuku oru pooham... maadu pola saahuranda manisan ....soru thanni thingathukka...?
1 January at 12:52 · Unlike · 1

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி கவலைப் படாதீர்கள். இதுதான் வாழ்க்கை . இயற்கை அதன் வேலையை செய்கின்றது. நாம்தான் . பொக்கிஷத்தைக்காக்க பெட்டகத்தை செய்ய வில்லை
1 January at 16:56 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் அற்புதம் சகோதரா
1 January at 17:19 · Unlike · 1

Kiliyanur Aziz Poet சாகுபடிக்குப் பெய்தால்தான்
மழை பயிர்கள்
சாகும்படி பெய்தால்
பிழை.!!!

Saturday, December 27, 2014

மாரியில் எங்கள் ஊர்!




மாரியில் எங்கள் ஊர்!

வானத்தை வைதவர் யார்
விடாமல்
அடம்பிடித்து அழுகிறதே?

வீட்டுக்கூரை
ஓட்டினால் ஆனாலும்
எட்டிப்பார்த்து
வீட்டுக்குள் புகுந்து
எதிரியைத்திட்டுகிறது
எல்லோர் வாசலையும்
தட்டுகிறது
ஏழைகளை வீடு விட்டு
விரட்டுகிறது!

வீதியெல்லாம்
வெள்ளத்தாலே சட்டைபோட்டு
ஊர்வலம்போகுது
ஊத்தத்தண்ணி எல்லாம்
ஓடையிலே ஒன்று சேந்து
வட்டையிலே வடிகிறது
கொஞ்சம் அதில்
வெட்டாத்தை சேர்க்கிறது
பால்கோப்பி கலந்தால் போல்
நுரைததும்ப
கீழ்ப்பக்கம் வடிந்ததெல்லாம்
நாலஞ்சி இடத்திலே
கடலுக்குள் கலக்குது!
கடலலைகள்
ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துச்
சண்டை
அதனால் கிழிந்திடும்
கரையின் கரகரத்த தொண்டை !

தூவானம் தெறிக்குது
வானம் ஆலோலம் பாடுது

தோணி எல்லாம்
நகருது மேட்டு
காணி நோக்கி
ஏணி எல்லாம் ஊருது
ஒழுகும் வீட்டுக்
கூரை நோக்கி!

மு.இ.உமர் அலி
2014 dec 27


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Mm.mohamed Kamil, Ibra-lebbe Mohamed Naleem, Thirugnanasampanthan Lalithakopan and 44 others like this.
3 shares

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி இப்படித்தான் எங்கள் உறந்தையும் இருந்தது . அடியேன் தமக்கையுடன் வயல்காட்டுக்குச் சென்று பார்ப்பேன். வளர்ந்த பயிரே தெரியாது . மழையை திட்டி சாபமிட்டு அழுத கண்ணீரோடு இல்லம் வருவோம் . இன்று ஒரு சொட்டு மழைக்கு தவம் இருக்கிறோம் . எனவே இயற்கை இயற்கையாக இருக்கட்டும் .தவறு நம்மீது.நாம் சோம்பேறிகள். வருவதை நின்பபதில்லை வந்ததை சிந்திப்பதில்லை
27 December 2014 at 08:49 · Edited · Unlike · 7

Mohammad Uwais V nice pooym
27 December 2014 at 09:49 · Unlike · 1

Usanar Saleem அனுபவம் உமரலிக்குக் கவியானது!என் இனிய நல்வாழ்த்துக்கள்!

27 December 2014 at 10:47 · Unlike · 2

Fasil Mohamed தோணி எல்லாம்
நகருது மேட்டு
காணி நோக்கி
இனி எல்லாம் ஊருது
ஒழுக்கு வீட்டுக்
கூரை நோக்கி!

வெள்ளத்தால் அடைந்தோம்
துன்பம் இடம் மாறிப்போனோம்
உறவினர் வீட்டுக்கு தஞ்சம்!

சிறுகச் சிறுக சேர்த்த
பொருள் தண்ணியிலே
தாண்டு கிடக்குது!
நெஞ்சு கிடந்து தவிக்குது!

ஓட்டு வீட்டுக்குள்ளே
ஓட்டுக்குள் ஒடுங்கிய
நத்தைபோல சுருண்டு
கிடக்குது நம் தேகம்!
27 December 2014 at 12:42 · Like · 1

மா.சித்ரா தேவி எங்க மலேசியாவிலும் குறிப்பாக கிழக்குகரை மாநிலங்கள்(kelantan,terengganu pahang)வரலாறு கானாத வகையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது,மக்கள் பெறும் துன்பத்துள்ளாகியுள்ளனர்.அரசாங்கமும் ngoவும் மக்களுக்கு மிக விரையாக உதவி நல்கியுள்ளதால்,அசம்பாவிதங்கள் குறைவாகவே நடந்துள்ளது.வெள்ளத்துயரிலிருந்து மக்கள் விரைவில் மீள தங்களின் மத நம்பிக்கைப்படி இறையனிடம் வேண்டும்மாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுள்ளது
27 December 2014 at 13:54 · Like

வெண்ணிலா வெண்ணிலா பாவம்!
மக்கள்.
எத்தனை நாட்கள் தொடருமோ
இந்த அவலம்.
அவன் நாட்டம்
அவன் விரும்பியபடி
நடக்குது!
மனசு இயல்பு வாழ்க்கைக்காக
ஏங்குது!
27 December 2014 at 14:33 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி சகோதரர்களே Fasil Mohamed ,Usanar Saleem,Mohammad Uwais,அன்புள்ள ஐயா இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி அவர்களே
27 December 2014 at 14:36 · Like · 2

Mohamed Ismail Umar Ali அக்கா தாங்கள் நாட்டில் வெள்ளத்தால் மக்களுக்காக இரவைனிடம் பிரார்த்திக்கிறேன் @ மா.சித்ரா தேவி
27 December 2014 at 14:37 · Like · 1

Mohamed Ismail Umar Ali உண்மைதான் ,வெண்ணிலா வெண்ணிலா நூலில் ஆடும் போம்மைகல்தானே நாம்,நூலின் நுனி அவனிடமல்ல்வா இருக்கிறது
27 December 2014 at 14:38 · Edited · Like · 1

Mohamed Jafir Omar Ali enna kavitha
27 December 2014 at 14:43 · Unlike · 1

Uvais Nasly Super
27 December 2014 at 15:51 · Unlike · 1

Meera Mahroof !
'பால்கோப்பி கலந்தால் போல்
நுரைததும்ப
கீழ்ப்பக்கம் வடிந்ததெல்லாம்
நாலஞ்சி இடத்திலே
கடலுக்குள் கலக்குது!
கடலலைகள்
ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துச்
சண்டை
அதனால் கிழிந்திடும்
கரையின் கரகரத்த தொண்டை !'

உவமைகள் ஒவ்வொன்றும் அருமை.
உமர் அலி.

இந்த பாடல் வரி நினைவுக்கு வந்தது.

“துவானம் இது, துவானம் இது, தூ...வானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது.”

படம்- தாழம்பு
27 December 2014 at 17:10 · Unlike · 2

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி மக்களை ஆண்டவன் ஆள்பவன் செய்ய வேண்டியதை அருளாளன் என்ன மழையையே பெய்யாமல் வரண்டு போக வைக்க வேண்டுமா. எல்லாவற்றிற்கும் பிரார்த்தனையா., கை விட்ட நிலையில் தான் பிரார்த்தனை. நீரைத் தேக்குங்கள். உலகலாவிய நீர் பஞ்சம் வரப் போகின்றது. மழை இயற்கையின் வரப் பிரசாதம்.
27 December 2014 at 17:51 · Unlike · 2

Thirugnanasampanthan Lalithakopan காலம் மாறும்