
..........................
கால மரத்தின் காவோலை
நேற்றிரவு ஆரவாரத்துடன்
கழன்று விழுந்தது!
பாலைமரம் துளிர்த்ததுபோல்
குருத்தோலை
சிரித்துக்கொண்டே பிறந்தது!
ஓலை விழுந்த இடம்
தழும்பாக தெரிகிறது
காயம் மாற மனம் கழிம்புகள்
பூசித்தடவுகிறது!
வலிகளில்லாத வருடமாகட்டும்
நரிகளை நம்மிடம் தூரமாக்கட்டும்
குழிகளில்லாத பாதையாகட்டும்
ஓட்டையில்லாத கோட்டையாகட்டும்!
விதைகள் அனைத்தும் முளைக்கட்டும்
வயல்கள் எல்லாம் விளையட்டும்
இரவிலே மாரி அழவோடு பொழியட்டும்
கடலிலே மீன்வளம் பல்கிப்பெருகட்டும்!
விலைகள் நன்றாய் குறையட்டும்
கலைகள் பிழையின்றி மிளிரட்டும்
ஏழைகள் வாழ்வு சிறக்கட்டும்
இரப்போர் எண்ணிலே குறையட்டும்!
மக்களை மனிதன் ஒருவன் ஆழட்டும்
பூக்களை வண்டுகள் புணரட்டும்
ஆக்களை ஆட்கள் பெருக்கட்டும்
காக்கைகள் ஊரை கூட்டிப்பெருக்கட்டும் !
பாதைகள் நீண்டு வளரட்டும்
பாலங்கள் புதிதாய் தோன்றட்டும்
பேதைகள் வாழ்வு செழிக்கட்டும்
கோதைகளை காலம் காக்கட்டும்!
இனிய ஆங்கில புத்தாண்டிற்கான வாழ்த்துக்கள்!
மு.இ.உமர் அலி
2015 Jan 1st
Like · · Stop Notifications · Share
- வெண்ணிலா வெண்ணிலா, Ahan Sha, Ratha Mariyaratnam and 28 others like this.
- Fasil Mohamed உவகை நெஞ்சை
ஆளட்டும்
உணர்வுகள்
உண்மை பேசட்டும்!
ஏமாறும் இதயம்
அழியட்டும்
மனிதம் என்றும்்
நிலைக்கட்டும!
வசந்தம் எம் கதவுகளைத்
்தட்டட்டும்!
விண்ணிலே
வெண்ணிலா ஒளிரட்டும்
உம் கனவுகள்
நிஜமாகட்டும்!
வாழ்த்துக்கள்! - Vanitha Solomon Devasigamony துளிர்விடும் காலம் அழகு. விதைகள் அனைத்தும் முளைக்கட்டும்
வயல்கள் எல்லாம் விளையட்டும்
இரவிலே மாரி அழவோடு பொழியட்டும்
கடலிலே மீன்வளம் பல்கிப்பெருகட்டும்! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மு.இ.உமர் அலி ! - Mohamed Ajmal நண்பா கவிதை மழையில் திகதியினை மறந்து விட்டாய் பழக்கதோசம் என்னசெய்வது 'கலைகள் பிழையின்றி மிளிரட்டும்: பிடித்திருக்கு இதையும் சேர்த்திருக்கலாம் எம் கலாச்சார விழுமியங்கள் விரியட்டும் எனக்கு சில விடயங்க்கள் புரியலப்பா இந்த புது வருடம் கிருஸ்தவர்களுக்கு தானே இதை நாம் வரவேட்பதும் கொண்டாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்க படவில்லை அத்துடன் எமது இஸ்லாமிய புது வருடத்தை வரவேட்பதும் கொண்டாடுவதும் கூட மார்க்கத்தில் அனுமதிக்க படவில்லை ஏனெனில் எமக்கு இரு பெருநாட்கள் மட்டுமே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இந்த ஹதீஸை நினைவு படுத்துகிறேன் எவர் எம்மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் அம்மதத்தை சார்ந்தவர் ஆவர்
- Mohamed Fahim எல்லாம் கலைந்த கால மரம் சிலரின் இதயத்தில் உள்ள கருமையை கலைய மறந்தது ஏனே...? உன் வரிகளில்....!