நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, January 8, 2015

வோட்டுப்போட போங்க!


வோட்டுப்போட போங்க!

............................................
கொட்டமடக்குற நேரம்
பட்டம் பறக்கிற நேரம்
திட்டம் தெறித்துப்போகும்
ஆட்டம் முடிவுறும் நேரம்!

கூட்டம் கூட்டமாய் போங்க
ஓட்டைப் போட்டுட்டு வாங்க
சாட்டையிருக்குது வோட்டில்
சேட்டை செய்தவர் முதுகில்
சட்டை கிழிந்திடக் கொடுப்போம்!

சரீஅத்தில்
கையை வைத்தான்
நாம் போடும்
சட்டையை எட்டிப் பிய்த்தான் !!

குப்பையாய் எம்மை மதித்தான்
குனியக்குனிய குட்டினான்
எதிரி நெஞ்சில குத்துவோம்
அஞ்சாமல் வாக்கினைக்
தவறாமல் குத்துவோம்

அட்டூளியக்காறரை பெட்டியைக்கட்டி
அகிலத்தின் முடுக்குக்கு அனுப்புவோம்
அழகான ஆட்சியை நாட்டினில்
ஏற்றி அமைதியாய் வாழ்வோம்
அனைவரும் கரங்களைப்பற்றி!

கூட்டம் கூட்டமாய் போங்க
ஓட்டைப் போட்டுட்டு வாங்க!
ரோட்டோரமா நமக்கென்ன வேலை
நாட்டை மாற்றுவதே நம் தேவை
வீட்டிலிருப்போரை பேசி
வோட்டுப்போட வைங்க!

வீண் பேச்சு வாதங்கள் எதற்கு
விரைந்து நீ வேலையைக் காட்டு
ஒருசில நிமிடமே தேவை
உன் பேரனின் தலை எழுத்தும் மாறும்

மு.இ.உமர் அலி
2015 jan 8th

Unlike · · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment