உளுத்த மரம்
பட்டை வெடித்தமரம்
தேடிவந்து
புழுக்களை பிடித்துண்பாய்
உளியின்றி
மரம் துளைத்து
உள்ளாலே
ஒழித்தபுழு
இழுத்தெடுப்பாய்!
மரத்தோடு போராடும்
கூரான அலகுக்கு
உரமுண்டு மரந்துளைக்கும்
திடமுண்டு!
மரத்துக்கு சமாந்திரமாய்
உடம்பிருக்க
சொண்டுமட்டும் செங்குத்தாய்
வீற்றிருக்கும் !
ரெவ்விரண்டு கூரான
விரல்நகங்கள்
பட்டைகளை பற்றிக்கொள்ள
பரிந்துரைக்கும் !
வலிந்துதவும்!
சீரான சந்தங்கள்
அழைத்துவரும்
ஊரான சொந்தங்கள்
உன்னருகே!
காதலை சொல்லிவிட
கனிமொழி தெரியாது
உன்தலை சொல்லுமொரு
இனிமொழி இணையுடன்
இணைவதற்கே !
கிரீடமுண்டு
கொண்டையிலே
அரசில்லை,
முப்படை விழிகளுண்டு
எதிரி
மரத்துகளும்,சிராம்புகளும்
பயமில்லை!
விவசாயி கொத்துகிறான்
மண்ணை
நீயோ கொத்துகிறாய்
மரத்தை!
வயிற்றுப் பிழைப்பினிலே
இருவரும் ஒருசாதி!
நீ துளைத்த ஓட்டைக்குள்
குடம்பம் நடத்தி
குடிபெயர்ந்து போனபின்பு
ஒரு சோடி கிழிபுகுந்து
குடும்பம் நடத்துமங்கே !
மரங்கொத்தி நீ நிற்கும்
அருங்காட்சி காண்கையிலே அது
மனங்கொத்தி போயிடுமே ,என்
மனம் தத்தி தாவிடுமே
சந்தோசக் கிளைகளிலே !
0 கருத்துக்கள்:
Post a Comment