நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, July 16, 2015



சில்லுப்போடுதல்
................................
அந்தக்காலத்தில் சுமைகளை ஏற்றி இறக்குவதற்கு மாட்டுவண்டிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
இப்போது இருப்பது போன்று தார்,கொங்கிரீட்,கிரவல் வீதிகள் இருக்கவில்லை.மணல்பாங்கான வீதிகளும் ,ஒழுங்கைகளுமேஅதிகமாக இருந்தன.மணல் வீதிகள் புதையக்கூடியன,வண்டிகள் இப்பாதைகளில் புதைந்த வண்ணமே பயணிக்கும்.


நெல் போன்ற பாரமான சுமைகளை ஏற்றிக்கொண்டு இரட்டைக்காளைகள் பூட்டிய வண்டிகள் பயணிக்கும்போது மாடுகள் களைத்து ,ஒன்றுடனொன்று ஒத்துழைக்காமையால் வண்டி சிலவேளை நடுவீதியிலே நகராமல் நின்று விடும்.

வேறு ஆட்களின் உதவியுடன் இரு சில்லுகளையும் இருபக்கம் நின்றுகொண்டு முன்னோக்கி நகர்த்தும்போது வண்டிக்காரர் மாடுகளின் வாலினைத்திருகியோ அல்லது கேட்டிக்கம்பின்னால் பிட்டப்பகுதியில் குத்துவதன் மூலமோ காளைகளை உசாரடையச் செய்வார்.

சுமையுடன்கூடிய வண்டியை சில்லுகளில் பிடித்து உருட்டுதல் களைப்பை தரக்கக்கூடிய ஒரு வேலை,இதன்போது "இந்தா.....................ஒடீ................ஈ..." என்று உரத்துக்கூறுவார்கள்..

இவ்வாறு நகர மறுக்கும் வண்டிகளை பலப்பிரயோகம் செய்து நகர்த்துவதை எமது முன்னோர்கள் "சில்லுப்போடுதல்" என அழைத்தார்கள். சில்லுப்போடத் தெரியாதவர்கள் சில்லுபோடும்போது அச்சாணியில் பூசியிருக்கும் கருப்புநிற " மசை " ஆடைகளிலோ அன்றி கைகளிலோ அப்பிக்கொள்ளும்.
அவ்வாறு அப்பிய மசையை இலகுவில் அகற்றமுடியாது.

யாருக்காவது சில்லுப்போட்ட அனுபவம்மிருந்தால் பகிருங்களேன்

மு.இ.உமர் அலி
2015 July 16th

0 கருத்துக்கள்:

Post a Comment