நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, July 18, 2015

தட்டுக்குத்து!

தட்டுக்குத்து!
........................
உளநோயால் பீடித்து அதிவேகமான செயல்பாடுகளுடன் கட்டுக்கடங்காமல் மற்றவர்களுக்கு தீமை செய்துகொண்டு ஒருவர் நடந்துகொள்ளும்போது அவரை உளநல வைத்தியர்களாக போற்றப்பட்ட "பரிசாரிமார்களிடம் " கொண்டு சென்று "இவரை வெளிசாக்கித்தாருங்கள் " எனக்கூறி ஒப்படைப்பார்கள்.
இவாறு ஒப்படைக்கப்பட்ட நோயாளிகள் ஆஜானுபாகுவாக இருக்கும் பரிசாரிகளின் உடல் உள ரீதியான தாக்குதல்களுக்கும் பயிற்சிகளுக்கும் கட்டாயம் அடிபணியவேண்டிய நிலை ஏற்படும்,
இதையும் மீறி "ராங்கி " காட்டுபவர்களை சங்கிலிகளால் கட்டி வைத்து ஆக்கினைகள் செய்து தனிமைப்படுத்தி அவர்களை பலமிழக்கச்செய்வது வழக்கம்.
இவ்வாறு அடங்காதவர்களை கட்டிவைத்து பரிசாரம் பார்த்து அடக்குவதை தட்டுக்குத்தில் போடுவது என்று அழைப்பார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் சுட்டித்தனமும்,துஸ்டத்தனமும் கூடிய சிறுவர்களை "உன்னை தட்டுக்குத்தில் போடுவேன்" என எச்சரிப்பார்கள்.
மு.இ. உமர் அலி
2015 july 18th

0 கருத்துக்கள்:

Post a Comment