நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, March 29, 2015

குறும்பாக்கள்!

துளை விழுந்த ஓடம் படிப்படியாய் தாழும்
களை வளர்ந்த வயல் விளைச்சலில் வீழும்!
 ..................................................................................

நீதியறு நாடும்
ஓதலறு வீடும்
ஒருநாளும் வளராது!
..............................................

வாளியில்லாமல் வானம்
கடலில் தண்ணியள்ளுகிறது
பூவாளியால்
பூமிக்குத் தெளிப்பதற்கு!
...........................................................

பட்டியடிப்பிட்டியிலே
பொட்டியோட நிப்பவளே
பொட்டிக்க என்ன புள்ள
புட்டா இடியப்பமா?

..............................................................
பட்டைஎண்டா என்ன புள்ள
புட்டிய நான் தொட்டதில்ல
கட்டிக்கப்போறபுள்ள நீ
பெட்டியோட நிண்டதால
வெட்டியா கேட்டுப்புட்டன்
வேறேதும் இல்ல புள்ள!

.................................................................. 

0 கருத்துக்கள்:

Post a Comment