நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, October 9, 2014

புனர் நிர்மாணம் ?




புனர் நிர்மாணம் ?
..............................
ஸ்வர்ண இலைகளும்
மரகதப்புஸ்பங்களும்
வலுவான கிளைகளும்
கொண்ட கற்பக தரு
சருகுகள் கூட
உருக்கினால் உபயோகமாகும்
வேர்களும்
இலாமிச்சையாட்டம் மணக்கும் !

கருப்பு உடல்தான் என்றாலும்
குறுக்காலறுத்தால்
முறுக்குத்தெறிக்கும் நன்கு
முற்றிய கருங்காலி !

ஓட்டுக்குருவிச்சை
தொட்டுக்கொண்டதால்
பட்டு மிலாறாகி
தொட்டால் உடைகிறது
பட்சிகளுறங்க பல
மெத்தைகளாகின்றது!

முருங்கையாக உருமாறி
முற்றிய காய்களுடன் மலருமுன்
உதிர்கின்ற பூக்களுடன்
வெடித்த பட்டையிலிருந்து
ஓட்டினால் ஓட்டுப்படாத
பிசின் நிரம்பி வழிகிறது !

பொருக்குப்பிடித்து மயிர்க்கொட்டி அப்பி
அரிபட்ட இலைகளுடன்
சாரைப்பாம்பு கடித்தவன் உரியானுடன்
ஓடிவந்து பட்டையக்காரும்வரை
திமிர்த்துப்போய் காத்திருக்கிறது!

வீதியால்போகும் சொறிநாய்
இதன் அடியில்தான்
காலைக்கிளப்பிச்செல்கின்றது!

ஆனால் மரங்கொத்தி வந்து
அடிமரத்துடன் போட்டியிட்டு
தோற்றுவிட்டு
மீண்டும் வாழை மரத்தில்
தன் வீரத்தைக்காட்டுகின்றது!

கந்துகள் முறிந்து விழுந்த இடமெல்லாம்
பதியமாகி சிறு சிறு புதர்கள்
காய்கள் தெரிகின்றன
ஆனால் யாவும் புச்சி!

பச்சையம் தொகுப்பதற்குப்பதிலாக
மரம் மன இச்சையின் பிடியிலே சிக்கிட
நிச்சையம்அழிவுதான் என
வேர்கள் கதறி அழுகின்றன !

ஒற்றை மரத்தோப்பை
ஒருமித்து
அடாத்தாக பிடித்தவர்கள்
நினைக்கிறார்கள்
அழிந்தால் நமக்கென்ன
மரமும் நல்ல விலைதானே
அதன் கரியும் கூட பயன்தானே
என்ற சுயலாபச்சிந்தனையில்!

வேர்கள் தாகத்தால் தவிக்கும்போது
வானம் கொதிநீரைத்தான்
கொட்டித்தீர்க்கிறது
சுடுநீர் குடித்த பக்க வேர்கள் மட்டுமன்றி
உச்சிக்கிளையும் வெந்து வாய்விட்டு
அலறுகின்றது !

இருந்த பழங்களெல்லாம்
தட்டத்தனியாக தின்றுமுடித்த
ஒரு பேராசைக்கிளி
இன்னும் இருக்கின்றதா என்று
பழுத்த இலைகளினூடே
புகுந்து தேடுகிறது!

இலையை அரித்த புழுக்களின்
பிழுக்கை விழுந்த இடமெல்லாம்
புற்களும் முளைக்கவில்லை
தரிசாகுதல் தெரிகிறது!

ஆட்டங்காணும் அந்த அரசமரத்துக்கு
ஆற்றோரநாணல் முட்டுக்கொடுக்கிறது
பப்பாசிக்கிளை ஒன்று
ஊன்றுகோலாய் தெரிகிறது!

வேலி அழிந்த காலை
வழிப்போக்கர்கள் எல்லோரும்
நின்று இளைப்பாறி
தின்று தீர்த்து
எதுக்கும் உதவுமென்று
ஒருதுண்டு பட்டையை
உரித்தெடுத்துச்செல்கின்றார்கள்
உயிர் வாயுவை உட்கொண்டு
மரணவாயுவை
துப்பிவிட்டுச்செல்கின்றார்கள்
காப்பான் இல்லா மரம்
வறண்ட கண்களுடன் கம்பலையுமாய்
கைகளைப்பிசைந்து கொண்டு
மாரி ஒன்றுக்காக மனதில் வேள்வி செய்கிறது!

முதல் வேர்
மூலவேர் அடியூற்றுவரை ஓடியது
ஆந்த ஜீவ விழுதும் அழுகின்றது!

அடியைத்தறித்தால்
அது தழைக்க நாளாகும்
ஆனால் சாகாது
புதுக்கிளை வளர்த்தலும்
சாத்தியப்படாது !

என்ன செய்யலாம்

சித்தாந்தங்கள் மாறவேண்டும்
ஒற்றுமை ஓங்க வேண்டும்
யாரும் எதிரியில்லை
யாவரும் நண்பர்களே !

அடகு வைத்தவற்றை
மீட்டுக்கொள்ளவேண்டும்
ஒத்தியும் குத்தகையும்
இனித்தேவையில்லை !

பலன்தரும் மரத்துக்கு
வளம் தேவை ,உரம் தேவை
சுத்திப்பாத்தி பிடிக்கணும்
நல்ல பாசனம் செய்யணும்
களை பிடுங்கணும்
சில கவரகற்றனும் !

ஒட்டுண்ணிகளை
எட்டவே வைக்கணும்
மாட்டுச்சாணியை
கொட்டிக் கலைக்கணும்!

மரங்கார் மாடுகளை
கிட்டத்திலெடுககாமல்
எட்டக்கணுவிலே
ஓட்டக்கட்டணும்!

படுகின்ற கந்தாகினும்
அதை உருப்படவைத்து
வெறும் பற்றைகளெல்லாம்
வெட்டியழிக்கணும்!

நாளைய சந்ததி நலமாய் இருக்கணும்
ஏழை எளியதுகள் இல்லாது போகணும்
கோழைகளல்ல நாங்கள் என்று
கோஷமாய் நின்று சொல்லியும் காட்டனும்!


மு.இ.உமர் அலி
2014 Oct 10th — with Sifan Razick, Zameer Ahamed Meerasahib, AL Thavam, Mansoor A Cader, Mohamed Nasser Cassimbawa, Subair Mohamed Sareef, Meera Mahroof, Mohamed Mansoor Mohamed Ibrahim, Meeralabbai Samsunali, Mohamed Faize, Julkarany Alil, Ashraff Puthunagaran, Kalaimahel Hidaya Risvi, Shafath Ahmed, Uvais Nasly, Mmed Amein, Yaseen M Ashar, Riza Mohamed Hassen, Kaleefa Nazit, Ashfa Ashraf Ali, Najimudeen Ahmad, Razana Manaf, Nafar Seenimohamed, Faizal Cassim, Athambawa Waakir Hussain, Sinnathamby Muthumeeran, Sahabdeen Meerasahibu, Mabrook UL, Mathy Anpan, M.Abdul Majeed, Hassan Mohideen Bawa, Mm.mohamed Kamil, Kaleel Rahman, Mohideenbawa Mohamed Kaleel, Siddeque Kariyapper, Mohamed Ashfaq Atham and Jaleel Mohd.


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Sato Mansoor, Mohamed Mufeeth, Mohamed Asmy Abdul Rahman and 71 others like this.
17 shares

Abdul Salam Excellent!!!
9 October at 07:11 · Unlike · 1

Ramees Ubai · Friends with Mathy Anpan and 19 others
Varnipental palam taan but sayal taan push....
9 October at 07:12 · Unlike · 1

Rashath Ahamed Safiullah · 38 mutual friends
Excellent
9 October at 07:14 · Like

Sameer Mohamed · Friends with Subair Mohamed Sareef
Enata caitum pasamatarhal
9 October at 07:14 · Unlike · 1

Nazeer Mohammed · Friends with Rauf Hazeer and 2 others
Hi
9 October at 07:26 · Unlike · 1

Vtm Imroo keep calm : rise up SLMC
9 October at 07:29 · Unlike · 1

Julkarany Alil action must and now! tnx umar ali.
9 October at 08:02 · Unlike · 1

Farveen Mohamed · 75 mutual friends
ஆதங்கம்.
9 October at 08:11 · Unlike · 1

Jaleel Mohd Well done
9 October at 08:52 · Unlike · 1

Meeralabbai Samsunali

9 October at 09:02 · Unlike · 5

Princecollege Riyas · 42 mutual friends
அருமை
யதார்த்தம் என்றும்
மரணிப்பதில்லை...
குருவிச்சங் கொடி
மரமென நினைத்து
மமதை கொள்கிறது..
விறகுக்காரனுக்கு உடைந்த கிழைகள்தான் உதவிக்கரம் கொடுக்கிறது..
அடியோடு வெட்டிச் சாய்க்க கோடரிக்கு முறிந்த கிளையின்
முத்திய பகுதிதானே
பயன் படுகிறது..
தோட்டக்காரனை விட
பக்கத்து வீட்டுக்காரனுக்கே
விசும்பல்
அதிகமாக இருக்கிறது ..
காட்டினையே
தின்று தீர்க்கும்
கனவில்
புழுக்கள் மட்டுமல்ல
சில் வண்டுகளும்
வானத்தில்
வட்டமிடுகின்றன..
மரமில்லையாயின்
மரணம்
வெகு தொலைவில் இல்லை.
பிராண வாயுவின் விகிதத்தை
கரியமில வாயு விஞ்சிவிடுமோ - என
உயிர்கள் தவிக்கிறது..
எது அழிந்தாலும் மரம் மட்டுமாவது மிஞ்சட்டும்
அப்போது தான்
உணவுச் சங்கிலியாவது
ஒழுங்காக இயங்கும் ...
9 October at 09:52 · Unlike · 1

Kaleel Rahman PACHAYAM THOHUPATHATKUPATHILAHA
MARAM MANA ICHAYIN PIDIYILE SIKIDA NICHAYAM ALIVUTHAN YENA VERHAL KATHARY ALUKINRANA. ARUMAI #ITHIL NANPAR UMAR ALI NEENKALUM NAANUM VERHAL ALUHIROM VERHAL YELLORUMAI ALIYAKOODATHU MARAM YENRU.

NANRY UNKAL KAVITHAIKUM
MARATHIN MEETHULLA UNKALIN AKARAIKUM.
9 October at 09:53 · Unlike · 1

Kalender Lebbe Muhammed Mubeen நல்லதமிழில் கதைத்தாலே கேட்காத தலைமைக்கு,
கவிதைநடையா விளங்கப்போகிரது ?
முயற்சிதானே...try....& try.....
9 October at 10:23 · Unlike · 1

Mohamed Samli Umar உங்களுக்கு 1000/ மார்க் போட்டாலும் போதாது.Thanks
9 October at 11:22 · Unlike · 1

Mohamed Ameer Excellent...அருமை....அருமை.
9 October at 14:38 · Unlike · 1

Ismail Towfeek · 5 mutual friends


9 October at 15:03 · Unlike · 1

A M Thaj Thajune 88,89ல நம்ம கப்ர்ல நாட்டுற மரம் என்றாங்க... அந்த மரமா இந்த மரம்?
9 October at 15:42 · Unlike · 2

Shafath Ahmed நாமசொன்னா..பொல்லாப்பு ஆமை சுடுவது மல்லாத்தி..
9 October at 15:58 · Unlike · 3

Farsan S Muhammad ஏசுவதற்கும் பேசுவதற்கும் நமது மரம் வாழவேண்டும் அருமை வரிகள்
9 October at 16:50 · Unlike · 1

Samalfasi Rufi பலதையும் பத்தியமாய் சொன்னீர். ..!
9 October at 17:27 · Unlike · 1

Simijon Jon · Friends with Thirugnanasampanthan Lalithakopan
Wow
9 October at 18:18 · Unlike · 1

Ashraff Abdulcareem · 39 mutual friends
அடகு வைத்தவற்றை
மீட்டுக்கொள்ளவேண்டும்
ஒத்தியும் குத்தகையும்
இனித்தேவையில்லை !
பலன்தரும் மரத்துக்கு
வளம் தேவை ,உரம் தேவை
சுத்திப்பாத்தி பிடிக்கணும்
நல்ல பாசனம் செய்யணும்
களை பிடுங்கணும்
சில கவரகற்றனும் !.......>>>>>>>இதற்கெல்லாம் பருவம் தப்பி விட்டது.கோடரிகளையும் காம்புகளையும்; உள்ளேயே உள்வாங்கி இருக்குங்கால் ,எங்கனம் துளிர்த்தோங்கும் இம்மரம்,இஙுகு ஒரு கிராமத்துப்பழமொழி:மீன் புளுக்காமல் இருக்க உப்புப்பயன் படும்.ஆனால் அந்த உப்பே புளுத்து விட்டால்.........
9 October at 20:58 · Unlike · 3

AL Thavam எல்லோரும் மிதித்த பின்பும்
எருமைகள் துவைத்த பின்பும்

எமக்காய் எழுந்து நில் மரமே
உன் வேர்களில் விடுதலை இருக்கிறது......

உன் கிளைகளில்
சுதந்திர கீதம் பாட
புதிய பறவைகள் கூடுகட்டும்.....

இங்கே
நவீன சந்ததிகள்
பச்சையிலும் நீலத்திலும் அடிபணிந்து கிடந்தாலும்

கிழக்கினதும் மேற்கினதும்
சிந்தனைகளில் சிறையுண்டு கிடந்தாலும்

உன் பறவைகளின் பாடல்
அவர்கள் ஆண்மை துளைத்து
நம் விடுதலையை எழுதும்

ஆதலால்....
ஓ...மரமே
நீ எழுந்து நில்
உன் வேர்களில் விடுதலை இருக்கிறது
9 October at 21:59 · Unlike · 4

Abdul Hameed Mohamed Ashraff Verry nice omar but we wont change the team after that only SLMC become strong Inshaallah we will see
10 October at 00:17 · Unlike · 3

Thirugnanasampanthan Lalithakopan படுகின்ற கந்தாகினும்
அதை உருப்படவைத்து
வெறும் பற்றைகளெல்லாம்
வெட்டியழிக்கணும்
10 October at 01:00 · Unlike · 3

Fasil Mohamed v nice
10 October at 13:43 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali கருத்திட்ட அனைவருக்கும்,பகிர்ந்துகொண்டவர்களுக்கும், விருப்பிட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
10 October at 15:03 · Like · 1

0 கருத்துக்கள்:

Post a Comment