நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, October 10, 2014

மணற்கொள்ளை









மணற்கொள்ளை!
..................................
அழகான ஆற்று முற்றம்
அது ஒரு அதிசய சோலை
அதனோரம் சிறு சாலை !

சுற்றுமுற்றும் புள்ளினங்கள்
காலடியில் மலர்ந்த பூவினங்கள்!

மலையில் பொழிந்த மழை
அதன் மடியில் தவழ்ந்து வழியும்
வளர்ந்து விளைந்த மீன்கள்
கரையில் நீந்தித்தவழும்!

ஓங்கி உயந்த மரங்கள்
நிலத்தைத் துளைத்து படர்ந்த வேர்கள்
சிரிக்கும் மூங்கில் வேர்கள்
மண் அரிப்பை நன்கு தடுக்கும் வீரர் !

மண்புட்டி வெட்டிப்பணித்தான்
மணல் ஏற்றி ஏற்றிக் குவித்தான்
வரம்பைக்கொத்தி அரித்தான்
தன வயலின் பரப்பை வளர்த்தான்!

விலை கூடக்கூட மனிதன்
ஆசையின் பிடியிலமிழ்ந்தான்
ஓடை மண்ணை அகழ்ந்தான்
ஆற்றோர வரம்பையும் இடந்தான்

ஆறு கிடந்து அழுதது அவர்
காலைத்தொட்டு தொழுதது
தண்ணீரால் கழுவியது!

கேட்டானா மனிதன்
இல்லவே இல்லை
ஆற்றுப்படுக்கைகளை அகலமாக்கினான்
புற்களைக்கிண்டி தன் வீட்டு
முற்றத்தில் நட்டான்
அவன் வீடு அழகானது
ஆற்றின்கரை அவலமானது!

வருடாந்தம் உலாவரும் வெள்ளம்
நுரை கிளம்ப
கரை ஒதுங்கி
இம்முறை நேரகாலத்துடன் வந்தது
ஆறு அதனிடம்
மனுக்கொடுத்தது

தான் தேரோடும் வீதி
வேரோடியிருந்த மரங்களின்றி
வெறிச்சசோடிக்கிடந்ததது கண்டு
வெள்ளத்தின் உள்ளம் தவித்தது ,
தான் தரித்துநிற்க நிழலின்றி
துடித்தது
தடவிச்சென்ற புற்கள்
தடமே இல்லாமல்
இடம்பெயர்ந்த இடத்தினூடாக
சினத்துடன் பிரவாகித்து
பிரவேசித்தது

அறுவடைக்குத்தயாராகியிருந்த
அப்பாவியின் கழனியை
கலக்கியழித்துச்சென்றது
அழித்தவர்களைத்தேடியது
அகப்படவேயில்லை!

அடுத்தமுறை பார்க்கலாம் என்று
கடலுக்குச்சென்றது

மண்ணகழ்வான் மனமகிள்வாய்
மக்களுடுன்
மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!



மு.இ.உமர் அலி
2014 OCT 1O
Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



AJ Farshath, Rusan Mohamed, Ahsan Mim and 39 others like this.

Kavithaayini Nila மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!...arumaip padaippu...
10 October at 15:51 · Unlike · 1

நெடுந்தீவு அரவிந் #Super_super_manam_vethanai#adikirathu
#இனிய_மாலை
#வணக்கம்_உறவே
10 October at 15:52 · Unlike · 1

வளர்மதி சிவா மண்ணகழ்வான் மனமகிள்வாய்
மக்களுடுன்
மனம் நோவான் அப்பாவி விவசாயி
அழிந்த வயல்பார்த்து!// அருமை
10 October at 16:13 · Unlike · 2

Zanal Ali Arumai
10 October at 16:25 · Unlike · 1

Kaleel Rahman Very nice
10 October at 16:27 · Unlike · 1

Thirugnanasampanthan Lalithakopan விலை கூடக்கூட மனிதன்
ஆசையின் பிடியிலமிழ்ந்தான்
ஓடை மண்ணை அகழ்ந்தான்
ஆற்றோர வரம்பையும் இடந்தான்
10 October at 18:39 · Unlike · 3

Fasil Mohamed Arumai
10 October at 19:24 · Unlike · 1

Junaideen Athambawa யதார்த்தம்.
10 October at 19:47 · Unlike · 2

Usanar Saleem காலத்தின் கண்ணாடிதான் உங்கள் கவிதை .என் இனிய நல்வாழ்த்துக்கள் சகோதரர் உமரலி!

10 October at 20:06 · Unlike · 2

Ahsan Mim அர்த்தமிக்க அழகிய வரிகள் ...
11 October at 22:03 · Unlike · 1


Write a comment...

0 கருத்துக்கள்:

Post a Comment