Saturday, December 5, 2015
Sunday, July 26, 2015
தொட்டில் சாக்கு - மாட்டுவண்டி-4
தொட்டில் சாக்கு -
மாட்டுவண்டி-4
..............................................................
மாட்டுவண்டியின் அடிப்பக்கம் இருக்கும் பலகைக்கு கீழாக சில்லு பொருத்தப்பட்டிருக்கின்ற அச்சுக்கு முன்பாக ஒரு சாக்கு அல்லது உரப்பையை நான்கு மூலையிலும் இணைத்து கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும் ,உருவத்தில் ஒரு தொட்டி போல இது இருப்பதனால் "தொட்டிச்சாக்கு" என பெயர்பெற்றிருக்கின்றது.
தொட்டிச்சாக்கினுள் வண்டியின் பாவனைக்கு தேவையான கயிறுகள் ,அரிக்கன் லாம்பு, புல் அறுப்பதற்கான அரிவாள் (தாக்கத்தி ),திருக்குக்கம்பு போன்றவற்றை வைப்பார்கள்,சிலர் சிறிய அளவிலான அடைக்கட்டை போன்றவற்றையும் வைப்பார்கள்.
வண்டிகள் ஏற்ற ,இறக்கமான இடங்களில் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்றும்போது அவை முன் பின் நகராமல் இருப்பதற்காக சில்லின் அடியில் இந்த அடைக்கட்டைகளை வைப்பார்கள்.
கயிறுகளில் மூட்டான்,தேடா,நைலோன் போன்ற வெவ்வேறு வகையான கயிறுகள் வைத்திருப்பார்கள்,ஏற்றிச்செல்லப்படும் பாரங்களுக்கு ஏற்ப கயிறுகளை தெரிவுசெய்வார்கள்
பாரங்களை ஏற்றி கயிற்றினால் கட்டிய கட்டினை இறுக்குவதற்காக சுமார் ஓரடி நீளமான உறுதியான கம்புகளால் கயிற்றினை திருகுவார்கள்,இவ்வாறு திருகுதல் "திருக்குப்போடுதல்" எனப்படும்.
காடுகளுக்கு மரம்வெட்டச்செல்வோரில் சிலர் தமது சமையல் பாத்திரங்கள்,அரிசி புளி போன்றவற்றையும் தொட்டில் சாக்கினுள்தான் வைப்பார்களாம்.
நிந்தவூர் பிரதேசத்தில் மாட்டுவண்டிகளை தயாரிப்பதில் பிரபல்யமும் நுணுக்கமும்வாய்ந்த சுலைமாலெவ்வை ஓடாவி-அல்லது நெடிய ஓடாவி வயோதிகத்தினால் சுகவீனமுற்றதன் பின்னர் இப்பிரதேசத்தில் உள்ள வண்டில்காரர்கள் திருத்த வேலைகளுக்காகவும் ,புதிய வண்டில்களை அமைப்பதற்காக்கவும் சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அந்த ஒரோர்களில் இன்னும் வண்டில்கள் தயாரிக்கக்கூடிய ஓடாவிமார் இன்னும் இருக்கின்றார்கள்.
பிரிவுகள் ||
கட்டுரை
Wednesday, July 22, 2015
மாட்டுவண்டிகள்!
மாட்டுவண்டிகள்-தொடர் 3
................................
மாட்டு வண்டி வைத்திருப்போர் மாடுகளிற்கு தீவனமாக வைக்கோல்,தவிடு போன்றவற்றையே கொடுப்பதே வழமை.வயல் அறுவடை களத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வண்டிகள் சாரி சாரியாக செல்லும்.சூடடித்த களவெட்டியை சூட்டுக்கலவேட்டி என அழைப்பார்கள்.
சூட்டுக்களவெட்டியில் சிந்திக்கிடக்கும் வைக்கோலை வண்டில் காரர்கள் " குத்தூசி "எனப்படும் ஆயுதம் மூலமாக ஒன்று திரட்டி வண்டியில் ஏற்றுவார்கள்.சிறிய வண்டியில் பெருமளவிலான வைக்கோலை ஏற்றுவது அவர்களுக்கு அனுபவ ரீதியான ஒரு கலையாகும்.
வண்டி வீதியால் செல்லும்போது பின்னால் ,இடது வலது பக்கங்களில் வருவது என்ன வாகனம் என்று வண்டிக்காரகளால் அறிந்து கொள்ள முடியாது.
வண்டிகளில் ஏற்றிவந்த வைக்கோலை வளவுகளில் மேட்டுபக்கமான இடத்தில் நல்லதோர் அடித்தளத்தை போட்டு அதன்மேல் கும்பமாக குவிப்பார்கள்,உருவத்தில் இத்தகு ஒரு "நெற்சூடு "போல தெரியும்.இதனை "வைக்கோல் கந்து" என அழைப்பார்கள்.
இவ்வாறு குவிக்கப்பட்ட வைக்கோல் கந்திலிருந்து வைக்கோலை தினமும் உருவி எடுத்து மாடுகளிற்கு தீவனமாக போடுவார்கள்.வைக்கோலை ஒரே பக்கம் உருவாமல் வட்ட வடிவமாகவே உருவுவார்கள்.ஏனெனில் கந்து சரிந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகவே.
வைக்கோல் போரின் அடியில் வீட்டின் பேட்டுக் கோழிகள் சென்று முட்டையிடும்.வீட்டுச்சிருவர்கள் மலை நேரங்களில் மறைந்து விளையாடுவார்கள்,வைக்கோல்போரில் விளையாடுவது நன்றாய் இருக்கும் ஆனால் அதன் "சுணை"இலகுவில் சென்றுவிடாது.
"சில நாய்கள் வைக்கோல் கந்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்,யாரும் வைக்கோல் எடுப்பதற்கென்று கிட்டபோனால் உறுமும்,குரைக்கும்,ஆனால் அந்த நாய் ஒருநாளும் வைக்கோல் உண்பதே இல்லை"
இந்தப்பிராந்தியத்திலிருந்த வண்டில்காரர்கள் எண்பதுகளிலும் அதற்கு முற்பகுதிகளிலும் வைக்கோலை சூடடித்த வயல்களில் இருந்து ஏற்றி ஒலுவில் உள்ள வைக்கோல் சேகரிக்கும் நிலையத்தில் விற்பனை செய்வது அன்று இருந்த ஒரு நல்ல வருமானமுள்ள தொழிலாகும்.நாளடைவில் பயங்கரவாதப்பிரச்சினை தலைதூக்கியதாலும் வாழைச்சேனை காகிதத்தொழில்சாலை மூடப்பட்டதனாலும் இந்தத்தொளிலும் இல்லாமல் போய்விட்டது.
பிற்காலத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்ய துவங்கியதிலிருந்து உற்பத்தியாகும் வைக்கொல்களின் அளவும் இப்பிராந்தியத்தில் குறையத்துவங்கிகிற்று.இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் சிறு துண்டுகளாக சிதைக்கப்படுவதாலும் ,ஓரிடத்தில் குவியாமல் வயல் முழுக்க சிதரிக்கானப்படுவதாலும் வைக்கோலை ஒன்று திரட்டி ஏற்றுவது சற்று கடினமான விடயமாகும்,ஆனால் தீவனத்திற்காக கஷ்டப்பட்டு வண்டில் உரிமையாளர்கள் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றார்கள்,
இப்புகைப்படம் நேற்று நிந்தவூரில் என்னால் பிடிக்கப்பட்டது .
மு.இ.உமர் அலி
2015 july 23rd

Tuesday, July 21, 2015
காலாவதியான காவின்கள் !
காலாவதியான காவின்கள் !
....................................................
எண்ணங்களால்
விவாகரத்துச்செய்துகொண்ட
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் ஊருக்கும் பேருக்கும்
ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றன!
....................................................
எண்ணங்களால்
விவாகரத்துச்செய்துகொண்ட
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் ஊருக்கும் பேருக்கும்
ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றன!
ஒட்டறை பிடித்த
உறவுகளில்
தொடரும் பிடிவாதம்
புதிதாக வலைகளைப் பின்னி
சத்தோசத்தை சிக்கவைத்து
சிறைப்பிடிகின்றது!
அநேகமானோர்
நேர்த்திக்கடன் இல்லாமலேயே
தீமித்து
அலகு குத்துகின்றனர்
அப்பப்போ
காவடியும் கூட ஆடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்
வார்த்தைகளுக்கு மட்டும்
தடைவிதிக்கும் வாய்
உபவாசம் இருந்து
பிறைகாணாமலேயே
பெருநாள் கொண்டாடுகின்றது!.
மு.இ.உமர் அலி
2015 JULY 21ST
உறவுகளில்
தொடரும் பிடிவாதம்
புதிதாக வலைகளைப் பின்னி
சத்தோசத்தை சிக்கவைத்து
சிறைப்பிடிகின்றது!
அநேகமானோர்
நேர்த்திக்கடன் இல்லாமலேயே
தீமித்து
அலகு குத்துகின்றனர்
அப்பப்போ
காவடியும் கூட ஆடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்
வார்த்தைகளுக்கு மட்டும்
தடைவிதிக்கும் வாய்
உபவாசம் இருந்து
பிறைகாணாமலேயே
பெருநாள் கொண்டாடுகின்றது!.
மு.இ.உமர் அலி
2015 JULY 21ST
பிரிவுகள் ||
கவிதை!
Saturday, July 18, 2015
தடுமாற்றம்
தடுமாற்றம்
.....................
பெருநாள் கொண்டாடும்
நண்பனை வாழ்த்தினேன்
பதிலுக்கவன்
உன்னை நாளை வாழ்த்துகிறேன்
இன்று வாழ்த்த முடியாமலுள்ளேன்
என்றான்.
.....................
பெருநாள் கொண்டாடும்
நண்பனை வாழ்த்தினேன்
பதிலுக்கவன்
உன்னை நாளை வாழ்த்துகிறேன்
இன்று வாழ்த்த முடியாமலுள்ளேன்
என்றான்.
பாதியிலே பிரியாத
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18
பிரிவுகள் ||
கவிதை
தட்டுக்குத்து!
தட்டுக்குத்து!
........................
உளநோயால் பீடித்து அதிவேகமான செயல்பாடுகளுடன் கட்டுக்கடங்காமல் மற்றவர்களுக்கு தீமை செய்துகொண்டு ஒருவர் நடந்துகொள்ளும்போது அவரை உளநல வைத்தியர்களாக போற்றப்பட்ட "பரிசாரிமார்களிடம் " கொண்டு சென்று "இவரை வெளிசாக்கித்தாருங்கள் " எனக்கூறி ஒப்படைப்பார்கள்.
இவாறு ஒப்படைக்கப்பட்ட நோயாளிகள் ஆஜானுபாகுவாக இருக்கும் பரிசாரிகளின் உடல் உள ரீதியான தாக்குதல்களுக்கும் பயிற்சிகளுக்கும் கட்டாயம் அடிபணியவேண்டிய நிலை ஏற்படும்,
இதையும் மீறி "ராங்கி " காட்டுபவர்களை சங்கிலிகளால் கட்டி வைத்து ஆக்கினைகள் செய்து தனிமைப்படுத்தி அவர்களை பலமிழக்கச்செய்வது வழக்கம்.
இவ்வாறு அடங்காதவர்களை கட்டிவைத்து பரிசாரம் பார்த்து அடக்குவதை தட்டுக்குத்தில் போடுவது என்று அழைப்பார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் சுட்டித்தனமும்,துஸ்டத்தனமும் கூடிய சிறுவர்களை "உன்னை தட்டுக்குத்தில் போடுவேன்" என எச்சரிப்பார்கள்.
மு.இ. உமர் அலி
2015 july 18th
மு.இ. உமர் அலி
2015 july 18th
பிரிவுகள் ||
கட்டுரை
Thursday, July 16, 2015
சில்லுப்போடுதல்
................................
அந்தக்காலத்தில் சுமைகளை ஏற்றி இறக்குவதற்கு மாட்டுவண்டிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
இப்போது இருப்பது போன்று தார்,கொங்கிரீட்,கிரவல் வீதிகள் இருக்கவில்லை.மணல்பாங்கான வீதிகளும் ,ஒழுங்கைகளுமேஅதிகமாக இருந்தன.மணல் வீதிகள் புதையக்கூடியன,வண்டிகள் இப்பாதைகளில் புதைந்த வண்ணமே பயணிக்கும்.
நெல் போன்ற பாரமான சுமைகளை ஏற்றிக்கொண்டு இரட்டைக்காளைகள் பூட்டிய வண்டிகள் பயணிக்கும்போது மாடுகள் களைத்து ,ஒன்றுடனொன்று ஒத்துழைக்காமையால் வண்டி சிலவேளை நடுவீதியிலே நகராமல் நின்று விடும்.
வேறு ஆட்களின் உதவியுடன் இரு சில்லுகளையும் இருபக்கம் நின்றுகொண்டு முன்னோக்கி நகர்த்தும்போது வண்டிக்காரர் மாடுகளின் வாலினைத்திருகியோ அல்லது கேட்டிக்கம்பின்னால் பிட்டப்பகுதியில் குத்துவதன் மூலமோ காளைகளை உசாரடையச் செய்வார்.
சுமையுடன்கூடிய வண்டியை சில்லுகளில் பிடித்து உருட்டுதல் களைப்பை தரக்கக்கூடிய ஒரு வேலை,இதன்போது "இந்தா.....................ஒடீ................ஈ..." என்று உரத்துக்கூறுவார்கள்..
இவ்வாறு நகர மறுக்கும் வண்டிகளை பலப்பிரயோகம் செய்து நகர்த்துவதை எமது முன்னோர்கள் "சில்லுப்போடுதல்" என அழைத்தார்கள். சில்லுப்போடத் தெரியாதவர்கள் சில்லுபோடும்போது அச்சாணியில் பூசியிருக்கும் கருப்புநிற " மசை " ஆடைகளிலோ அன்றி கைகளிலோ அப்பிக்கொள்ளும்.
அவ்வாறு அப்பிய மசையை இலகுவில் அகற்றமுடியாது.
யாருக்காவது சில்லுப்போட்ட அனுபவம்மிருந்தால் பகிருங்களேன்
மு.இ.உமர் அலி
2015 July 16th

பிரிவுகள் ||
கட்டுரை
Saturday, July 11, 2015
குறும்பா-1
புள்ளத்தாச்சி வெள்ளாமையை
புளுவரிச்சி தின்னுதடா
எண்ணய அடிச்சடிச்சி ஆள்ள பாடு
அரைவாசி முடியுதடா!
புளுவரிச்சி தின்னுதடா
எண்ணய அடிச்சடிச்சி ஆள்ள பாடு
அரைவாசி முடியுதடா!
பிரிவுகள் ||
கவிதை
Sunday, March 29, 2015
குறும்பாக்கள்!
துளை விழுந்த ஓடம் படிப்படியாய் தாழும்
களை வளர்ந்த வயல் விளைச்சலில் வீழும்!
..................................................................................
நீதியறு நாடும்
ஓதலறு வீடும்
ஒருநாளும் வளராது!
..............................................
வாளியில்லாமல் வானம்
கடலில் தண்ணியள்ளுகிறது
பூவாளியால்
பூமிக்குத் தெளிப்பதற்கு!
...........................................................
பட்டியடிப்பிட்டியிலே
பொட்டியோட நிப்பவளே
பொட்டிக்க என்ன புள்ள
புட்டா இடியப்பமா?
..............................................................
பட்டைஎண்டா என்ன புள்ள
புட்டிய நான் தொட்டதில்ல
கட்டிக்கப்போறபுள்ள நீ
பெட்டியோட நிண்டதால
வெட்டியா கேட்டுப்புட்டன்
வேறேதும் இல்ல புள்ள!
..................................................................

Tuesday, March 24, 2015
Monday, March 23, 2015
நேரமில்லை

........................
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன் !
அதிகாலையைக்கொஞ்சம்
அதிகரிக்க வேண்டும்
அந்தியாவதையும்
பிந்திப்போட வேண்டும்
பகலிலே ஒரு பந்தி வைத்து
பகலவனைப் பசியாறச்செய்ய வேண்டும்
அதனால் அவனது பயணம்
கொஞ்சமாவது தாமதமாகுமல்லவா
பதற்றம் பற்றிக்கொள்ள
தொட்டதை விட்டு விட்டு
அடுத்ததைப் பார்க்கவேண்டும்
பயமும் சுயமாக வந்துவிடுகிறது !
செவ்வாய்க்குச்
செல்லும் நாட்கள் மட்டும்
நீண்டுகொண்டு செல்ல
பூமியிலுள்ளோரின் நேரம் மட்டும்
குறுகிக்கொண்டே வருகின்றது!
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன்
ஏனெனில்
தொடங்கியதெல்லாம்
முடியுமுன்னே
அடுத்தவேலை வந்து
பிடரியினைப்
விடாப்பிடியாக பிடித்துக்கொள்கின்றது
சில வேலைகள் தொடங்கப்படாமலேயே
இன்னும் கிடப்பில் கிடக்கிறன!
மு.இ.உமர் அலி
2015 March 23rd
அதிகரிக்க வேண்டும்
அந்தியாவதையும்
பிந்திப்போட வேண்டும்
பகலிலே ஒரு பந்தி வைத்து
பகலவனைப் பசியாறச்செய்ய வேண்டும்
அதனால் அவனது பயணம்
கொஞ்சமாவது தாமதமாகுமல்லவா
பதற்றம் பற்றிக்கொள்ள
தொட்டதை விட்டு விட்டு
அடுத்ததைப் பார்க்கவேண்டும்
பயமும் சுயமாக வந்துவிடுகிறது !
செவ்வாய்க்குச்
செல்லும் நாட்கள் மட்டும்
நீண்டுகொண்டு செல்ல
பூமியிலுள்ளோரின் நேரம் மட்டும்
குறுகிக்கொண்டே வருகின்றது!
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன்
ஏனெனில்
தொடங்கியதெல்லாம்
முடியுமுன்னே
அடுத்தவேலை வந்து
பிடரியினைப்
விடாப்பிடியாக பிடித்துக்கொள்கின்றது
சில வேலைகள் தொடங்கப்படாமலேயே
இன்னும் கிடப்பில் கிடக்கிறன!
மு.இ.உமர் அலி
2015 March 23rd
பிரிவுகள் ||
கவிதை
Sunday, March 22, 2015
Monday, January 12, 2015
துளிர்விடும் காலம்!

..........................
கால மரத்தின் காவோலை
நேற்றிரவு ஆரவாரத்துடன்
கழன்று விழுந்தது!
பாலைமரம் துளிர்த்ததுபோல்
குருத்தோலை
சிரித்துக்கொண்டே பிறந்தது!
ஓலை விழுந்த இடம்
தழும்பாக தெரிகிறது
காயம் மாற மனம் கழிம்புகள்
பூசித்தடவுகிறது!
வலிகளில்லாத வருடமாகட்டும்
நரிகளை நம்மிடம் தூரமாக்கட்டும்
குழிகளில்லாத பாதையாகட்டும்
ஓட்டையில்லாத கோட்டையாகட்டும்!
விதைகள் அனைத்தும் முளைக்கட்டும்
வயல்கள் எல்லாம் விளையட்டும்
இரவிலே மாரி அழவோடு பொழியட்டும்
கடலிலே மீன்வளம் பல்கிப்பெருகட்டும்!
விலைகள் நன்றாய் குறையட்டும்
கலைகள் பிழையின்றி மிளிரட்டும்
ஏழைகள் வாழ்வு சிறக்கட்டும்
இரப்போர் எண்ணிலே குறையட்டும்!
மக்களை மனிதன் ஒருவன் ஆழட்டும்
பூக்களை வண்டுகள் புணரட்டும்
ஆக்களை ஆட்கள் பெருக்கட்டும்
காக்கைகள் ஊரை கூட்டிப்பெருக்கட்டும் !
பாதைகள் நீண்டு வளரட்டும்
பாலங்கள் புதிதாய் தோன்றட்டும்
பேதைகள் வாழ்வு செழிக்கட்டும்
கோதைகளை காலம் காக்கட்டும்!
இனிய ஆங்கில புத்தாண்டிற்கான வாழ்த்துக்கள்!
மு.இ.உமர் அலி
2015 Jan 1st
Like · · Stop Notifications · Share
- வெண்ணிலா வெண்ணிலா, Ahan Sha, Ratha Mariyaratnam and 28 others like this.
- Fasil Mohamed உவகை நெஞ்சை
ஆளட்டும்
உணர்வுகள்
உண்மை பேசட்டும்!
ஏமாறும் இதயம்
அழியட்டும்
மனிதம் என்றும்்
நிலைக்கட்டும!
வசந்தம் எம் கதவுகளைத்
்தட்டட்டும்!
விண்ணிலே
வெண்ணிலா ஒளிரட்டும்
உம் கனவுகள்
நிஜமாகட்டும்!
வாழ்த்துக்கள்! - Vanitha Solomon Devasigamony துளிர்விடும் காலம் அழகு. விதைகள் அனைத்தும் முளைக்கட்டும்
வயல்கள் எல்லாம் விளையட்டும்
இரவிலே மாரி அழவோடு பொழியட்டும்
கடலிலே மீன்வளம் பல்கிப்பெருகட்டும்! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மு.இ.உமர் அலி ! - Mohamed Ajmal நண்பா கவிதை மழையில் திகதியினை மறந்து விட்டாய் பழக்கதோசம் என்னசெய்வது 'கலைகள் பிழையின்றி மிளிரட்டும்: பிடித்திருக்கு இதையும் சேர்த்திருக்கலாம் எம் கலாச்சார விழுமியங்கள் விரியட்டும் எனக்கு சில விடயங்க்கள் புரியலப்பா இந்த புது வருடம் கிருஸ்தவர்களுக்கு தானே இதை நாம் வரவேட்பதும் கொண்டாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்க படவில்லை அத்துடன் எமது இஸ்லாமிய புது வருடத்தை வரவேட்பதும் கொண்டாடுவதும் கூட மார்க்கத்தில் அனுமதிக்க படவில்லை ஏனெனில் எமக்கு இரு பெருநாட்கள் மட்டுமே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இந்த ஹதீஸை நினைவு படுத்துகிறேன் எவர் எம்மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் அம்மதத்தை சார்ந்தவர் ஆவர்
- Mohamed Fahim எல்லாம் கலைந்த கால மரம் சிலரின் இதயத்தில் உள்ள கருமையை கலைய மறந்தது ஏனே...? உன் வரிகளில்....!
பிரிவுகள் ||
கவிதை!
ஜலச்சண்டை!

ஜலச்சண்டை!
'''''''''''''''''''''''''''''''''''
இடுப்புக்குமேல புடிச்ச தண்ணி
துடுப்புக்கு பதிலா
அவன் கையிலொரு வலைக் கண்ணி
சுழிபோட்டு ஓடும் வெள்ளம்
நுரைக்குள்ளாலே மீன்கள் துள்ளும்!
கலங்கித்தான் ஓடும்போது
தெளிதண்ணி ஆற்றிலேது
துலங்காத மீன்கள் கண்டு
துல்லியமா வீசவென்று
புறப்படுவான் உதுமாங்கண்டு
பன்பறியை உடுத்திக்கொண்டு !
எட்டுமுழ வலை எடுத்து
எட்டாத இடம் பார்த்து
வட்டமா எறிவதனை
கிட்ட நின்று பார்த்தா
கிறுகிறுக்கும் உங்களுக்கு
வேறு யாருக்கும் இந்த கலை வராது!
வட்டமா விரிஞ்சவலை
நிலத்தில பட்டவுடன்
மாட்டின மீனெல்லாம் தப்பியோட
வழிதேடி வட்டம்போடும்
வலைகுள்ளே கிழிஞ்ச கண்தேடும்!
வலக்கண்ணில் முட்டிவிட்டு
மோட்டுவலை ஏறி முறித்தோடப்பார்க்கும்
கண்பெருத்த கைமீனு
செதில் பளபளன்னு மின்னும் நீ பாரு !
பொட்டியான் குஞ்செல்லாம்
போட்டிபோட்டு தெறித்தோடும்
மாட்டிக்கொண்ட மேல்முள்ளை
களட்டப்போராடும் நீள்மீசைக் கெழுத்திமீனு !
கொழுவலில் வலை விழுந்தால்
கிழிகின்ற ஒலிகேட்கும்
குப்பையில் வலை மாட்ட
கூளனெல்லாம் அள்ளி வரும்!
சள்ளல் மாட்டிக்கிட்டா
சர்ரென்று வலைபேசும்
செல்வன் பட்டதென்றால்
துள்ளி அடங்கிவிடும்
வலை தூக்கும்போது துடிப்பெடுக்கும்!
நடுவலையை நறும்பிக்கிட்டு
வழி எடுத்து ஓடிவிடும்
கொம்புடைய கொடுவா மீன்
அழிக்குள்ள அகப்பட்டு
அசைவின்றிப்படுக்கும் சிலமீன்கள்!
விரால் கண்டு அகப்பட்டா
வலை சுண்டும்
வலைமுழுக்க தடதடக்கும்
விலாங்கு வீசப்பட்டா
அடிவலையில் நழுநழுக்கும்!
கனத்த மீன் கிடந்தா
கைக்கயிறை தொய்யவிட்டு
மீனையெல்லாம் கழைக்க வைப்பான்
கரையோரச் செம்படவன்!
ஒற்றைவீச்சில் ஒருகறிக்கு மீன்கிடைக்கும்
சில வேளை
பத்துமுறை வீசினாலும் மணத்திற்கும் மீன் கிடையா
வலையில் ஒரு மீன் பிணமும் அணையா !
அடிப்பறியில் மீனிருந்தால்
வீட்டிலன்று நல்ல கறி
முழுப்பறியும் நிறைந்ததென்றால்
இன்னும் பிடிப்போமென்று
மனதில் வரும் வெறி!
கைகடுக்க வலைவீசி
கால்கடுக்க தனக்குள்ளே கதைபேசி
கஷ்டப்பட்டு பிடித்தமீனை
கண்கெட்ட விலைக்கு
கேட்டிடுவான்
ஐஸ்ப்பெட்டி வியாவாரி
கொண்டுபோய் எங்கோ
அறா விலைக்கு விற்பதற்கு!
ஈயப்பாரத்தை வெல்லும்
ஈரமான செம்படவன் மனப்பாரம்
மீன்பிடி முடிந்ததென்றால்
வலை காயும் அவன் வாசலிலிலே
மனம் நொந்து வேகும்
வீட்டு வறுமையின் பூசலிலே!
மு.இ.உமர் அலி
2015 Jan 13th
குறிப்பு:
பறி-மீன்போடும் ஒரு பை
அழி- வலையின் அடிப்பாகம்,மடித்துக்கட்டபட்டது,
மிகமுக்கியம் இது நான் எடுத்த புகைப்படம் — with யோ புரட்சி, Lawrence Vasuthevan, வளர்மதி சிவா and 46 others.
Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share
Uvais Nasly, Issadeen Mohd, மு.யாகூப் அலி கவிஞன் and 50 others like this.
1 share

Olympic Siraj · Friends with Rajakavi Rahil

5 hrs · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரரே Olympic Siraj
5 hrs · Like

Meera Mahroof !
“ எட்டுமுழ வலை எடுத்து
எட்டாத இடம் பார்த்து
வட்டமா எறிவதனை
கிட்ட நின்று பார்த்தா
கிறுகிறுக்கும் உங்களுக்கு
வேறு யாருக்கும் இந்த கலை வராது! ”
யதார்த்தமான வரிகள் தவிர
வேறு கற்பனை வரிகள்
எதுவும் இல்லை.
வாழ்த்தாமல் விட எந்த
வரிகளும் இல்லை
வாழ்த்துக்கள் கஸ்ஸாலி.
5 hrs · Unlike · 4

Elilventhan Sinnathurai · 18 mutual friends
அருமை.
5 hrs · Unlike · 1

Mursith Mohamed அருமை சகோ
5 hrs · Unlike · 1

Ketheeswaran Thiyagarajah அருமை
5 hrs · Unlike · 1

Patgunam Vadivel · 2 mutual friends
இறால் வலையில் செல்வன் குஞ்சு பிடித்ததும்
வலை வீச தெரியாமல் வாய்க்காலில் கட்டி வைத்து விரால் மீன் பிடித்ததும்
ஞாபக படுத்தி விட்டீர்கள் .
4 hrs · Edited · Unlike · 3

Fazahir Raisudeen வட்டமா விரிஞ்சவலை
நிலத்தில பட்டவுடன்
மாட்டின மீனெல்லாம் தப்பியோட
வழிதேடி வட்டம்போடும்
4 hrs · Unlike · 2

Malikka Farook பள்ளியில் படிக்கும்போது , பள்ளிக்கூடத்திற்கு பக்க்திலிருக்கும் ஆத்தங்கரையில் நானும் கைகளை வலையாக்கி குட்டி இரால் பிடிச்சி ஆத்துக்கு பக்கத்திலேயே சிறு பள்ளம்தோண்டி அதில் நீர்விட்டு வளர்த்து மகிழ்ந்துள்ளேன்.. அது ஒரு கனாக்காலம்..
4 hrs · Unlike · 2

Rahila Halam Maashaallah....... kavidai vasikumpodu kanmunne katchi varudu.......... oru meen valaiyil orayiram enna meengal..............
3 hrs · Unlike · 1

Najimudeen Aliyar S Mohammed
2 hrs · Like · 1

Abdul Hamed E Sahurudeen .
வலை உலர்த்தி அதை கையெடுத்து
அழகாக தோளிலிட்டு ஆற்றங்கரை
நோக்கி ஆவலோடு நடைநடந்து
கெண்டைமீனும் கெழுத்திமீனும்
விராளோடு அயிரைமீனும் கைவலிக்க
வலைவீசி காத்திருந்து பிடித்துவந்து,
வியாபாரியிடம் சொற்ப விலைக்கு
விற்றுவிட்டு வீடுவந்து சேர்ந்து
வலையை காயவைத்து மீண்டும்
முதலிருந்து வழமைபோல் தொடர்ந்து
ஒருவன் வாழ்க்கையோடு எம்மையும்
கூட்டிச்சென்று வட்டம் சுற்றி வந்தாயே
கவியா கதையா எதுவாய் இருந்தாலும்
அதில் நானும் கலந்தேவிட்டேன்,,,
வாழ்த்துக்கள் தோழமையே அலி
2 hrs · Like · 2

Mohamed Irsath KM Ungaludaye "Sunnathu kalyanam" & "Oathappalliyum osthathum" fantastic.
Ungaludaye thiramayai book vadivil veli idalame... Ungal unmayane (traditional) kirukkalkalukku nanum rasikan.
1 hr · Unlike · 1

Dushyanthi Dushy Fish biology. ...ஒருமுறை மீண்டும் பார்த்தாற்போல்
அமைந்துவிட்டது உங்களின்
இந்தப் பதிவு......!
வலையோடு விளையாடி
விழிவைத்து காத்திருந்து
கைக்கெட்டா தூரம் வீசி
காத்திருந்து காத்திருந்து
கரையும் நேரத்தை காசாய்
மாற்றும் மீனவன் வேதனை
வாங்கும் மனிதனுக்கு
எப்படிப் புரியும்.....!
1 hr · Edited · Unlike · 1

Uvais Nasly கடலில் கை மீன் வீசியது முதல் வெட்டாத்தில் வெள்ளியா பொட்டியான் வீசியது வரை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள்
25 mins · Unlike · 1

Mohamed Ismail Umar Ali உங்கள்பின்நூட்டங்களிற்கு நன்றி சகோதரர்களே,அழிந்துபோய்க்கொண்டிருக்கும் சில பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகலிளிதுவும் ஒன்று Uvais Nasly,Dushyanthi Dushy,Mohamed Irsath KM,Abdul Hamed E Sahurudeen,Najimudeen Aliyar S Mohammed ,Rahila Halam,Meera Mahroof,Elilventhan Sinnathurai,Mursith Mohamed,Ketheeswaran Thiyagarajah,Patgunam Vadivel,Fazahir Raisudeen,Malikka Farook,
பிரிவுகள் ||
கவிதை
Subscribe to:
Posts (Atom)