நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, December 23, 2014

சேற்றுப்புழு!




சேற்றுப்புழு!
........................
ஊத்துத் தண்ணியில்ல மகன்
அது ஊரெல்லாம் கழுவி வரும்
ஊத்தத் தண்ணி தங்கம்

வெற்றுக்காலோட
ஓடி விளையாட
நல்ல சுகமாத்தான் இருக்கும்
நாளை நடுச்சாமம் வரைக்கும்!

ரெண்டு நாள் கழிச்சி
கால் விரலிடுக்கில் கடிக்குமப்பா
சொறிஞ்சா நல்ல
சுகமாய் இருக்குமப்பா
ஊருவது போலிருக்கும்
ஆனால் உருவமொன்றும் தெரியாது
சூடுவைச்சுப் பார்த்தாலும்
சொறியது கொஞ்சம்கூட குறையாது!

புண்ணாகி நீர்வடியும்
வெண்மையாய் தோல்
பொங்கி புழு நெளியும்!

கத்திக்கதறிடுவாய்
நடு இரவில்
உன் வீட்டு அறைகளெல்லாம்
சுற்றித்திரிந்திடுவாய் !

சொல்லுக்கேளு தம்பி
செருப்பப் போட்டுக்கிட்டு
நீங்க தெருவோரம்
போங்க தம்பி!

தேங்கிய நீருக்குள்ள
நீங்க கால நனைக்க வேண்டாம்
தெரியாத கிருமிகளை உங்க
உடலுக்குள் அழைக்க வேண்டாம்!

மு.இ.உமர் அலி
2014 Dec 23 — with Vanitha Solomon Devasigamony, Kiliyanur Aziz Poet, Ashraff Puthunagaran and 37 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Faris Mahroof, Michael Collin, Thirugnanasampanthan Lalithakopan and 121 others like this.
4 shares

ந.பிரசன்னா புதுக்குடியிருப்பு மழைகாலம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்
23 December 2014 at 20:43 · Unlike · 1

Subajini Sriranjan · 29 mutual friends
நல்ல பகிர்வு...
23 December 2014 at 21:13 · Unlike · 1

Najimudeen Aliyar S Mohammed Superb
23 December 2014 at 21:30 · Like

R Saravana Kumar · 10 mutual friends
அருமை.இயற்கையான ஊர் வழக்கு வார்த்தை கோர்வை..அருமைங்கய்யா
23 December 2014 at 21:40 · Unlike · 1

Akbarali Ali அருமை
23 December 2014 at 21:53 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரர்களே Akbarali Ali,R Saravana Kumar,Najimudeen Aliyar S Mohammed,Subajini Sriranjan,ந.பிரசன்னா புதுக்குடியிருப்பு
23 December 2014 at 22:18 · Like

Yaseer Handsom Allah irukkan ellam sariyahum
23 December 2014 at 22:54 · Unlike · 1

Uvais Nasly அருமையான காலத்துக்கு ஏற்ற கவிதை
23 December 2014 at 23:00 · Unlike · 1

Fasil Mohamed வெள்ளத்தில் கால்
கழுவ ஆவலாயிருக்கும்
காலில் புழுகடிச்சா
ஆளாய் பறப்போம்!

அனுபவப்பாடம்
அமர்க்களம்.
எப்படியுள்ளது ஊர் நிலமை
உமரலி
23 December 2014 at 23:08 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali ஊரில் வெள்ளம் மழை தொடர்கின்றது
23 December 2014 at 23:10 · Like · 1

Fasil Mohamed நிவாரண உதவிகள் எப்படியுள்ளது?
நீங்கள் உங்கள் குடும்பத்தினர்
நிலையென்ன?
அல்லாஹ் போதுமானவன்
23 December 2014 at 23:12 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali யாவும் சுமூகம், பள்ளப்பகுதியில் உள்ளவ்பர்கள் கஷ்டப்படுகின்றனர்
23 December 2014 at 23:14 · Like · 1

Fasil Mohamed இன்னாலில்லாஹ்.
23 December 2014 at 23:15 · Unlike · 1

றாபியின் கிறுக்கல்கள். இந்த மழைப்போர் சீக்கிரம் முடிவுக்கு வர துஆ செய்வோம்.
23 December 2014 at 23:20 · Unlike · 3

Nafeel Muhallam வீடு எல்லாம் வெள்ளநீர்
அடுப்பல்லாம் ஈரம்
ஏழை வைருகள் பசி
பசி திர்க்க யார் வருவார்.....
23 December 2014 at 23:33 · Unlike · 1

Musthakeem Mohd Nice
24 December 2014 at 01:11 · Like

Asmin Ahamed Superb .....
24 December 2014 at 02:11 · Unlike · 1

Patgunam Vadivel · 2 mutual friends
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. விரலை நூலால் வரிந்த்து கட்டி விட்டு ஊசியால் நுனி விரலில் குத்தி இரத்தம் வரவழைத்து இருக்கிறேன்.
சேற்று புளு இரத்தம் வழியாய் போகும் என்ற நம்பிக்கையில்
24 December 2014 at 02:41 · Unlike · 3

Junaideen Athambawa எங்கள் வீட்டிலும் கனபேருக்கு இந்தத் தொல்லை.
24 December 2014 at 06:48 · Unlike · 2

Meera Mahroof !
சந்தப்பத்துக்குப் பொருத்தமான உங்கள் கவிதைமூலமான அறிவுரை அருமை உமர்அலி. நன்றிகள்.
24 December 2014 at 07:43 · Edited · Unlike · 3

Baskaran Masilamani · 3 mutual friends
Arumai
24 December 2014 at 08:39 · Unlike · 1

Shafath Ahmed என் சிறிய வயதில் இந்த சேற்றுப் புண் எனது விரலிடுக்குகளில் ஏற்பட்டபோது எனது தந்தை என்னைப் பிடித்து அந்த சேற்றுப் புண்களை உரசி..உரசி..நான் கதறி அழுதபோதும் துப்பரவுசெய்து..மருந்துபோட்டது இன்னும் ஞாபகமிருக்கிறது. உங்கள் அந்த அருமையான கவிதை எனது சிறிய பருவகாலத்தை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டது.
24 December 2014 at 08:41 · Unlike · 2

AK Irfan · 39 mutual friends
Very nice bro
24 December 2014 at 09:03 · Unlike · 1

Nasrullah Abdul Majeed தேங்கிய நீருக்குள்ள
நீங்க கால நனைக்க வேண்டாம்
தெரியாத கிருமிகளை உங்க
உடலுக்குள் அழைக்க வேண்டாம்! அருமை
24 December 2014 at 10:05 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரர்களே,நண்பர்களே Junaideen Athambawa,Meera Mahroof,Baskaran Masilamani,Shafath Ahmed,றாபியின் கிறுக்கல்கள்.,Nafeel Muhallam,Musthakeem Mohd,Asmin Ahamed ,Patgunam Vadivel
24 December 2014 at 10:17 · Like

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி வெள்ளத்தில் உள்ளம் கொதிக்கும் கவிஞர்
பள்ளத்தில் மக்கள் படும்வேத னையை
கால்புண்ணாக் மனம் புண்ணாகி பாடுகிறார்
வடிகாலில்லையா கடலருகில் குடி யிருந்தும்
24 December 2014 at 10:51 · Unlike · 2

Yoga Ram · 27 mutual friends
nice !
24 December 2014 at 12:02 · Unlike · 1

Steuart Osman Theresa Mary · 18 mutual friends
சொல்லுக்கேளு தம்பி
செருப்பப் போட்டுக்கிட்டு
நீங்க தெருவோரம்
போங்க தம்பி!
தேங்கிய நீருக்குள்ள
நீங்க கால நனைக்க வேண்டாம்
தெரியாத கிருமிகளை உங்க
உடலுக்குள் அழைக்க வேண்டாம்! nice
24 December 2014 at 12:41 · Unlike · 1

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி நன்றி சுடரொளிகவிஞர் முஇஉமர்அலியார் அவர்களே . ஆழ்ந்த வருத்தம் என்னுள்ளேயும். நீங்கள் மிகவும் சுகாதரமாக வாழ்கிறீர்களோ. உங்கள் தோல் மிகவும் சுத்தமாக வைத்துள்ளீர்கள் தொற்று இல்லாமல் . சென்னை வாழ் மக்கள் Immune ஆகிவிட்டார்கள்.
24 December 2014 at 13:03 · Edited · Unlike · 2

Ratha Mariyaratnam Anupavam undu...arumai sakothara
24 December 2014 at 13:56 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி கவிஞரே இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி இங்கு வடிகான்கள் உள்ளன இருந்தாலும் கொட்டும் மழையின் வேகத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் வெள்ளம் தேங்குகின்றது, ஓரிரு நாட்களில் வடிந்து விடும் ,
24 December 2014 at 14:09 · Like · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரி Ratha Mariyaratnam,நன்றி Steuart Osman Theresa Mary,Yoga Ram
24 December 2014 at 14:11 · Like

றாபியின் கிறுக்கல்கள். என்ர.மகனையும் படுக்கையில போட்டுட்டு
இந்த சேத்துப்புழு.
24 December 2014 at 14:28 · Unlike · 1

Mohideenbawa Mohamed Kaleel Good advice for all irrespective of age
25 December 2014 at 09:05 · Unlike · 1

Mohamed Jafir Masallah what a kavitha
25 December 2014 at 15:50 · Unlike · 1

Thirugnanasampanthan Lalithakopan பசுமைக்காயங்கள்

0 கருத்துக்கள்:

Post a Comment