நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, December 26, 2014

கடற்கொள்ளை!




கடற்கொள்ளை!

தசாப்தமொன்றின் முன்னர்
கடல் சீறிக்கொண்டு வந்தது
எல்லாவற்றையும்
சுருட்டிக்கொண்டல்லவா போனது
அந்தப்பயணத்தினால்
நாடே நாறிப்போனது
முழு ஊரும் மாறிப்போனது ?

பறந்து விரிந்திரிந்த பாய்
சுருண்டு வந்தது
கடலடிச் சுருப்பும் கூட
கரைக்குக் கொண்டு வந்தது !

உப்பைக்கொண்டுவந்து
ஊரை
தப்பாய்க்கொள்ளையிட்டது
வீரன் கோழை
வேறுபாடின்றி
உயிரைக் குடித்துச் சுவைத்தது!

அவ்வளவு நீருள்ள கடலுக்கும்
இப்படி ஒரு தாகமா?
தப்பா இது பாவமா?

கடற் கொள்ளையர்களை
கேள்விப்பட்டோம்
கப்பலைப் பிடிப்பார்களாம்
ஆனால் இங்கு கடலே
உட்புகுந்து ஆட்களைக்
கொள்ளையிட்டு
கொலையும் செய்ததே !

கடல் கொள்ளையிட்டு எஞ்சியதை
சில கயவர்கள் கவர்ந்து சென்றனர்
உடல் தொட்டு வஞ்சிகளின்
தங்கமும் அபகரித்தனர்!

ஊருக்குள்ளே
ஒன்றுமே மிஞ்சல
கெஞ்சிக் கூத்தாடியும்
உயிரை மீண்டும் தரல
கொஞ்சங்கூட கருணையில்ல
கடல் அதுக்கு ரொம்ப
நெஞ்சழுத்தம் புள்ள!

வந்த அலை
போனது உடன
அது போன பாதைதான்
இன்னும் மறஞ்சிடவில்ல!

ஊத்தக் கரைய
களுவிச்சென்றதா
இல்ல ஊரக்கழுவி உடன்
அழைத்துச் சென்றதா?

பின்னால
ஒழுங்கைகளெல்லாம்
தார்வீதியாச்சு
குடிசைகளெல்லாம்
கல்வீடுமாச்சு!

கல்வீட்டுச்சுவரில்
மரித்தவர் படம்
மாலையோடு
சிரித்துக்கொண்டிருக்கிறது
மாலையில்
மணக்குச்சிப் புகையில்

ஏதோ எழுதின
கல்லொன்று நட்டாங்க
கடற்கரையோரம்
காகம் கக்கூசு போக
அது நல்ல இடம்!

பட்ட பனமரமெல்லாம்
வட்டுத்தெறிச்சி
விறச்சிப்போய்
இன்னும் விரக்தியோடு
நிக்குது புள்ள
புரிசன இழந்த
விதவை போல!

சுனாமிச்சாமான் வித்தவன்
இப்ப காரோடுறான்
உண்மையா பாதிக்கப்பட்டவன்
ஊரெல்லாம் உலாத்துறான்
சுனாமியாலடிபட்டவன்
என்ற பேரோடுதான்!

காட்டொன்று மிச்சம்
ஆனால் இன்னும்
அவன் வாழ்வில் பஞ்சம்!

மு.இ.உமர் அலி
2014 12 26 — with Meeralabbai Samsunali, Rahuma Ji, Zainab Mariyam and 38 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Faris Mahroof, Dushyanthi Dushy, வெண்ணிலா வெண்ணிலா and 48 others like this.
1 share

Haamithu Abdul Careem Nanrai irukkirathu kavinjere
26 December 2014 at 06:15 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி நியாஸ் சேர் Haamithu Abdul Careem
26 December 2014 at 06:28 · Like

Noormohamed Sams Unmieyie Uoot Ariya Cholly Ullheet
26 December 2014 at 06:39 · Unlike · 1

Ushadevi Jayapal Unmai
26 December 2014 at 08:49 · Unlike · 1

Zainab Mariyam Very nice gazzali clear picture reflected with your words we can't forget this day for ever
26 December 2014 at 09:03 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சேர் Noormohamed Sams,நன்றி சகோதரி Ushadevi Jayapal,நன்றி சகோதரரே Zainab Mariyam
26 December 2014 at 09:26 · Like

Thirugnanasampanthan Lalithakopan மறக்க கூடிய தினமா இது
26 December 2014 at 12:29 · Unlike · 1

Fasil Mohamed சுனாமி
மனசை சுக்கு நூறாக்கியது!
அருமை உமர்.
26 December 2014 at 13:11 · Unlike · 2

Kapilan Chandrakumar நினைவில் அழியாத தினம்
26 December 2014 at 13:11 · Unlike · 1

Ratha Mariyaratnam வேதனையைத் தந்த தினம், பலர் வாழ்வையே மாற்றிய தினம் , எது நடந்தாலும் சிலரை மாற்ற முடியாது எனபதற்குதாரணம் சுனாமி தகர்த்த வீட்டில் கொள்ளை அடித்தது ....அருமை சகோதரா

0 கருத்துக்கள்:

Post a Comment