நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, December 17, 2014

ஊத்துபிடித்த வப்புழு!

ஊத்துபிடித்த வப்புழு!
........................................
போன கோடைக்கு
வச்ச கண்டு ஆடியில
என்ன அழகா  நிற்குது 
பூத்துக்கொண்டு!

பொம்பள வண்டென்று
தமிழில சொன்னாங்க
கண்படும் அதனழுகு
வழிப்போக்கர் சொல்வாக !

ஆவணியில் பிஞ்சு
அடுக்கடுக்கடுக்கா
வந்ததடா

போறவன் வருபவன்
எல்லோருக்கும்
பிஞ்சில இருந்தே
இதுமேலதான் கண்
எல்லாம் !

கண்ணூறு பட்டிடும்
என நினச்சி
களிமண்ணில் சுட்ட சட்டிவாங்கி
சுண்ணாம்புப் பொட்டுவைச்சி
வழியோரம் நட்டுவச்சேன்!

புத்தியறிஞ்ச புள்ள போல
நான் பொத்திப் பொத்தி வளர்தேங்கா
முத்திப்பழுத்தா தலக்காயை
சிறு நாற்று கொண்டுவந்து
தந்தவக்கு கொடுக்க நினச்சங்கா!

பழைய சாக்கெடுத்து
ஆரும் பார்க்காம கட்டி வச்சேன்
மூணு கம்பெடுத்து
மரம் முறியாம முட்டு வச்சேன்!

காய்ப்பாரம் தாங்காம
தலைசுற்றி விழுந்திடுமா
போய்ப்பார்ப்பேன் நித்திரையில்
ஏதும் முறிகிற சத்தம் கேட்டா!

பகலவன் பார்த்துச்செல்வான்
நிலவும்தான் வாழ்த்துச்சொல்லும்
வருணனுக்கு மட்டுமேன்
இந்த ஓர வஞ்சனை உள்ளம்?

அடை மழை வந்தது
விடாமல் இடியுடன் பெய்தது
பள்ளத்துக்காணி தேங்கும்
வெள்ளத்துக்கு இது கேணி

பழமாயக் கண்ட கனவு
காய்வாடக்கண்டதும் கலைந்தது
இலைபழுத்து மஞ்சளாகி
மரம் நிலை குலைந்து சரிந்தது !

மூச்சு முட்ட நீர் தேங்க
காற்றுக்காக மர வேர் ஏங்க
வேரின் பிடி தளர்ந்தததுகா
என் பப்பாசி மரமும்தான் சரிந்ததுகா !

முறிஞ்சிருந்தா கவலையில்ல
மனமாறிப்போயிருக்கும்
மழைத்தண்ணி தேங்கி
எந்தன் மரமவிந்து போனதுகா!

மாரி வந்தா மரமெல்லாம்
சிரிப்பதுண்டு ,
என் நெஞ்சம் கிடந்தது குமுறுதுகா
மாரியால மரணமான என் பப்பாசி
மரம் கண்டு!

மனம் தாங்க முடியலகா
மழையென்றும் பார்க்காம
குருத்த மணலெடுத்து
அடியில் குவித்தும் வைத்தேங்கா
ஆக்களின் சொல்லைக்கேட்டு வெள்ளத்தண்ணிக்குள்ள
நல்ல தண்ணி ஊற்றினேங்கா

வருடா வருடம் நடக்குது
இந்தச்சங்கதி
இது இயற்கை எங்களுக்குச் செய்யும்
திட்டமிடாத சதி!

மழையை வைகின்றேன்
நான் வருணனுக்கு
சொல்லம்பு எய்கின்றேன்
வருந்தி பலனில்லை
மரம் கெளிந்து விழுந்த பின்னால் !

ஒருக்காலும் வைக்க மாட்டேன்
பள்ளத்தில் பப்பாசி
மேடுசெய்தென்றாலும்
நாற்று கோடியில் நீ நடு
ஏனென்றால் அதுக்கு இப்போ
சரியான விலைவாசி!

மு.இ.உமர் அலி
17.12.2014

வப்புழு-பப்பாசி
— with Kalaimahel Hidaya Risvi, Krish Mani, Shafath Ahmed and 38 others.
Like · · Stop Notifications · Share

  • Mursith Mohamed அருமை Bro...
  • கவிஞர் நாகூர் காதர் ஒலி குலைத்தள்ளி சாய்ந்த ஆமணக்கு�
    குறி வைத்தது யார் கணக்கு ??
  • Ratha Mariyaratnam alakiya kavithai pappasi pola
  • Abdul Hamed E Sahurudeen .
    இடியோடு மின்னல் சேர்ந்து
    விடாது பெய்துவிட்ட மாரியால
    புள்ளதாச்சி மரமொன்னு பெக்காம
    செத்துப்போச்சு, பால் சிந்தும் சிறு
    காய்களெல்லாம் பழுக்காமலே
    பட்டுப்போச்சு, பப்பாளி மர(ண)ம்
    பார்த்து படபடக்கும் உன்பாட்டு
    எட்டுத்திசையிலும் எதிரொலிக்க
    முக்காலி போட்டே வேடிக்கை
    பார்க்கும் நிக்காத வானம்போல்
    கண்களும் கண்ணீரை வடிக்கிறது ,,,

    அருமை அழகாக சொல்லப்பட்ட
    ஒரு மர(ண)த்தின் கொப்பளிப்பு
    வாழ்த்துக்கள் தோழமையே ,,,,
  • Junaideen Athambawa தற்காலத்துக்கு ஏற்ற கவிதை வாழ்த்துக்கள்.
  • Ibra Lebbai Arumayana kavithay.
  • Steuart Osman Theresa Mary · 18 mutual friends
    முறிஞ்சிருந்தா கவலையில்ல
    மனமாறிப்போயிருக்கும்
    மழைத்தண்ணி தேங்கி
    எந்தன் மரமவிந்து போனதுகா!
    மாரி வந்தா மரமெல்லாம்
    சிரிப்பதுண்டு ,
    என் நெஞ்சம் கிடந்தது குமுறுதுகா
    மாரியால மரணமான என் பப்பாசி
    மரம் கண்டு!
    மனம் தாங்க முடியலகா
    மழையென்றும் பார்க்காம
    குருத்த மணலெடுத்து
    அடியில் குவித்தும் வைத்தேங்கா
    ஆக்களின் சொல்லைக்கேட்டு வெள்ளத்தண்ணிக்குள்ள
    நல்ல தண்ணி ஊற்றினேங்கா nice gd n8
  • Kaleel Rahman ஊத்துப்புடிக்காம நல்லா காச்சாலும்
    நானென்ன விக்கயா போறங்கா.

    ஆக்களத ஆசப்பட்டுக்கேட்டா
    குத்திக்கிட்டு போங்கெண்டு
    நான் செல்லுவங்கா.

    அதனால

    ஒருக்காலும் வெக்க மாட்டன்
    பள்ளத்தில பப்பாசி
    மேடெண்டாலும் வெச்சி
    நான் நாட்டுவன்
    நாற்று கோடியில் நீ நடு
    ஏனெண்டா இப்ப
    நல்ல வெலதாங்கா
    இல்லாட்டியும் பறுவால்ல
    ஆக்கள் குத்திக்கிட்டு
    போகட்டுங்கா

    அருமை நண்பர் உமர் அலி
    பழைய ஊர் பாசை பேசி
    ரொம்ப நாளாச்சி.
  • இ.பியின் இதய இரைச்சல்கள் பப்பாசி..
    கவிதையிலே..
    பாசி படராமே..
    பண்பாய் வடித்து..
    நப்பாசை...
    உண்டாக்கிவிட்டீரே...
    அருமை நண்பரே..!
  • Shafath Ahmed ஒமானிலிருந்து ஓடோடியும் வந்து
    மாரிக்குள் அகப்பட்டு மனசும் உடைஞ்சாச்சு..
    வைச்ச ப்ப்பாளி மரமும் ஊத்துப்பிடித்து
    உருக்குலைஞ்சு போச்சு..
    பள்ளத்தைப் பார்த்து பாத்திபிடித்து
    பதியம் போட்டது யார் தப்பு..
    இப்ப பதறி மாய்வதற்கு யார்பொறுப்பு..?
  • Thirugnanasampanthan Lalithakopan பப்பாசியின் இனிப்பாய் இந்த கவி
  • Fasil Mohamed பள்ளத்தில் பதியமிட்ட
    பப்பாசி பாரம்
    தாங்காம விழுந்ததுகா

    மனசொடிஞ்சு வடிச்ச கவி என்னையும்
    கொல்லுதுகா!

    மவுசு இருக்கையிலே
    மண்பாத்து நட்டிவிட்டால்
    பப்பாசியும் பலன் தரும்கா!

    உங்க கவிக்கரு அழகு
    நாம் நட்டிய மரம் சாயலாம் அது இயற்கையின் திருவிளையாடல்.
  • Mathy Rupan கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வேதனை
  • றாபியின் கிறுக்கல்கள். முறிஞ்சிருதா கவலையில்ல
    மனமாறிப் போயிருக்கும்
    மழைத்தண்ணி தேங்கி
    எந்தன் மரமவிஞ்சி போனதுகா...
  • றாபியின் கிறுக்கல்கள். கலைமகனுக்கு என் வாழ்த்துக்கள்.
  • Mohamed Ismail Umar Ali உண்மையாக இது எனது பப்பாழி மரமல்ல ,உம்மாவின் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு வீட்டில் இரு மரங்கள் ஊத்துப்பிடித்து இறந்திருக்கக் கண்டேன்,கரு ஒன்றையும் கண்டு கொண்டேன்.Shafath Ahmed
  • Mohamed Ismail Umar Ali கருத்திட்ட அனைத்து நட்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
  • இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி என்வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரக்கன்று
    நட்டு வைத்து மறந்தும்பல மாதமாச்சு
    எட்டிப் பார்த்தாள் என்மனைவி எனையழைத்து
    ...See More
  • Mohamed Ismail Umar Ali மிக்க நன்றி ஐயா இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி
  • Nafeel Muhallam விட்டின் முன்
    பக்கம் வாசல்
    ரோஜா கூட்டம்

    அது தரும் நல்
    வாசனை
    விட்டின் பின்
    பக்கம் கோடி
    பனை போல்
    உயர்ந்த மரம்
    அனாதையாய்
    வளருவான்
    மர நுனி முழுக்க
    காய்கள்
    காய்களின்னுள்
    பல்லாயிரம் மிளகுகள்
    பழுத்தா பலரும்
    வருவார் சுவைக்க.
  • Noormohamed Sams puthukka( vi ) thieya?
  • இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி நன்றி சுடரொளிக்கவிஞர்.முஇஉமர்அலியார் அவர்களே
  • இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி நன்றி ஆஷ்ஃபா அஷ்ரப் அலி அவர்களே


ஊத்துபிடித்த வப்புழு!
........................................
போன கோடைக்கு
வச்ச கண்டு ஆடியில
என்ன அழகா பூத்து
நின்றது!

பொம்பள வண்டென்று
தமிழில சொன்னாங்க
கண்படும் அதனழுகு
வழிப்போக்கர் சொல்வாக !

ஆவணியில் பிஞ்சு
அடுக்கடுக்கடுக்கா
வந்ததடா

போறவன் வருபவன்
எல்லோருக்கும்
பிஞ்சில இருந்தே
இதுமேலதான் கண்
எல்லாம் !

கண்ணூறு பட்டிடும்
என நினச்சி
களிமண்ணில் சுட்ட சட்டிவாங்கி
சுண்ணாம்புப் பொட்டுவைச்சி
வழியோரம் நட்டுவச்சேன்!

புத்தியறிஞ்ச புள்ள போல
நான் பொத்திப் பொத்தி வளர்தேங்கா
முத்திப்பழுத்தா தலக்காயை
சிறு நாற்று கொண்டுவந்து
தந்தவக்கு கொடுக்க நினச்சங்கா!

பழைய சாக்கெடுத்து
ஆரும் பார்க்காம கட்டி வச்சேன்
மூணு கம்பெடுத்து
மரம் முறியாம முட்டு வச்சேன்!

காய்ப்பாரம் தாங்காம
தலைசுற்றி விழுந்திடுமா
போய்ப்பார்ப்பேன் நித்திரையில்
ஏதும் முறிகிற சத்தம் கேட்டா!

பகலவன் பார்த்துச்செல்வான்
நிலவும்தான் வாழ்த்துச்சொல்லும்
வருணனுக்கு மட்டுமேன்
இந்த ஓர வஞ்சனை உள்ளம்?

அடை மழை வந்தது
விடாமல் இடியுடன் பெய்தது
பள்ளத்துக்காணி தேங்கும்
வெள்ளத்துக்கு இது கேணி

பழமாயக் கண்ட கனவு
காய்வாடக்கண்டதும் கலைந்தது
இலைபழுத்து மஞ்சளாகி
மரம் நிலை குலைந்து சரிந்தது !

மூச்சு முட்ட நீர் தேங்க
காற்றுக்காக மர வேர் ஏங்க
வேரின் பிடி தளர்ந்தததுகா
என் பப்பாசி மரமும்தான் சரிந்ததுகா !

முறிஞ்சிருந்தா கவலையில்ல
மனமாறிப்போயிருக்கும்
மழைத்தண்ணி தேங்கி
எந்தன் மரமவிந்து போனதுகா!

மாரி வந்தா மரமெல்லாம்
சிரிப்பதுண்டு ,
என் நெஞ்சம் கிடந்தது குமுறுதுகா
மாரியால மரணமான என் பப்பாசி
மரம் கண்டு!

மனம் தாங்க முடியலகா
மழையென்றும் பார்க்காம
குருத்த மணலெடுத்து
அடியில் குவித்தும் வைத்தேங்கா
ஆக்களின் சொல்லைக்கேட்டு வெள்ளத்தண்ணிக்குள்ள
நல்ல தண்ணி ஊற்றினேங்கா

வருடா வருடம் நடக்குது
இந்தச்சங்கதி
இது இயற்கை எங்களுக்குச் செய்யும்
திட்டமிடாத சதி!

மழையை வைகின்றேன்
நான் வருணனுக்கு
சொல்லம்பு எய்கின்றேன்
வருந்தி பலனில்லை
மரம் கெளிந்து விழுந்த பின்னால் !

ஒருக்காலும் வைக்க மாட்டேன்
பள்ளத்தில் பப்பாசி
மேடுசெய்தென்றாலும்
நாற்று கோடியில் நீ நடு
ஏனென்றால் அதுக்கு இப்போ
சரியான விலைவாசி!

மு.இ.உமர் அலி
17.12.2014

வப்புழு-பப்பாசி — with Kalaimahel Hidaya Risvi, Krish Mani, Shafath Ahmed and 38 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Winston Fernando, Maruthanila Niyas, Mohamed Ismail and 96 others like this.
3 shares

Mursith Mohamed அருமை Bro...
17 December 2014 at 20:56 · Unlike · 2

கவிஞர் நாகூர் காதர் ஒலி குலைத்தள்ளி சாய்ந்த ஆமணக்கு�
குறி வைத்தது யார் கணக்கு ??
17 December 2014 at 20:59 · Unlike · 4

Ratha Mariyaratnam alakiya kavithai pappasi pola
17 December 2014 at 21:03 · Unlike · 1

RikaZz Aßdullah
17 December 2014 at 21:45 · Unlike · 1

Farsan S Muhammad Supperb sir
17 December 2014 at 21:57 · Unlike · 1

Abdul Hamed E Sahurudeen .
இடியோடு மின்னல் சேர்ந்து
விடாது பெய்துவிட்ட மாரியால
புள்ளதாச்சி மரமொன்னு பெக்காம
செத்துப்போச்சு, பால் சிந்தும் சிறு
காய்களெல்லாம் பழுக்காமலே
பட்டுப்போச்சு, பப்பாளி மர(ண)ம்
பார்த்து படபடக்கும் உன்பாட்டு
எட்டுத்திசையிலும் எதிரொலிக்க
முக்காலி போட்டே வேடிக்கை
பார்க்கும் நிக்காத வானம்போல்
கண்களும் கண்ணீரை வடிக்கிறது ,,,

அருமை அழகாக சொல்லப்பட்ட
ஒரு மர(ண)த்தின் கொப்பளிப்பு
வாழ்த்துக்கள் தோழமையே ,,,,
17 December 2014 at 22:13 · Like · 5

Junaideen Athambawa தற்காலத்துக்கு ஏற்ற கவிதை வாழ்த்துக்கள்.
17 December 2014 at 22:13 · Unlike · 1

Ibra Lebbai Arumayana kavithay.
18 December 2014 at 01:06 · Unlike · 1

Steuart Osman Theresa Mary · 18 mutual friends
முறிஞ்சிருந்தா கவலையில்ல
மனமாறிப்போயிருக்கும்
மழைத்தண்ணி தேங்கி
எந்தன் மரமவிந்து போனதுகா!
மாரி வந்தா மரமெல்லாம்
சிரிப்பதுண்டு ,
என் நெஞ்சம் கிடந்தது குமுறுதுகா
மாரியால மரணமான என் பப்பாசி
மரம் கண்டு!
மனம் தாங்க முடியலகா
மழையென்றும் பார்க்காம
குருத்த மணலெடுத்து
அடியில் குவித்தும் வைத்தேங்கா
ஆக்களின் சொல்லைக்கேட்டு வெள்ளத்தண்ணிக்குள்ள
நல்ல தண்ணி ஊற்றினேங்கா nice gd n8
18 December 2014 at 02:21 · Unlike · 5

Kaleel Rahman ஊத்துப்புடிக்காம நல்லா காச்சாலும்
நானென்ன விக்கயா போறங்கா.

ஆக்களத ஆசப்பட்டுக்கேட்டா
குத்திக்கிட்டு போங்கெண்டு
நான் செல்லுவங்கா.

அதனால

ஒருக்காலும் வெக்க மாட்டன்
பள்ளத்தில பப்பாசி
மேடெண்டாலும் வெச்சி
நான் நாட்டுவன்
நாற்று கோடியில் நீ நடு
ஏனெண்டா இப்ப
நல்ல வெலதாங்கா
இல்லாட்டியும் பறுவால்ல
ஆக்கள் குத்திக்கிட்டு
போகட்டுங்கா

அருமை நண்பர் உமர் அலி
பழைய ஊர் பாசை பேசி
ரொம்ப நாளாச்சி.
18 December 2014 at 02:41 · Unlike · 2

இ.பியின் இதய இரைச்சல்கள் பப்பாசி..
கவிதையிலே..
பாசி படராமே..
பண்பாய் வடித்து..
நப்பாசை...
உண்டாக்கிவிட்டீரே...
அருமை நண்பரே..!
18 December 2014 at 03:02 · Unlike · 4

Shafath Ahmed ஒமானிலிருந்து ஓடோடியும் வந்து
மாரிக்குள் அகப்பட்டு மனசும் உடைஞ்சாச்சு..
வைச்ச ப்ப்பாளி மரமும் ஊத்துப்பிடித்து
உருக்குலைஞ்சு போச்சு..
பள்ளத்தைப் பார்த்து பாத்திபிடித்து
பதியம் போட்டது யார் தப்பு..
இப்ப பதறி மாய்வதற்கு யார்பொறுப்பு..?
18 December 2014 at 08:06 · Unlike · 2

Rajendran Ramadoss · Friends with இ.பியின் இதய இரைச்சல்கள்
அருமை
18 December 2014 at 09:18 · Unlike · 1

Thirugnanasampanthan Lalithakopan பப்பாசியின் இனிப்பாய் இந்த கவி
18 December 2014 at 10:16 · Unlike · 1

Fasil Mohamed பள்ளத்தில் பதியமிட்ட
பப்பாசி பாரம்
தாங்காம விழுந்ததுகா

மனசொடிஞ்சு வடிச்ச கவி என்னையும்
கொல்லுதுகா!

மவுசு இருக்கையிலே
மண்பாத்து நட்டிவிட்டால்
பப்பாசியும் பலன் தரும்கா!

உங்க கவிக்கரு அழகு
நாம் நட்டிய மரம் சாயலாம் அது இயற்கையின் திருவிளையாடல்.
18 December 2014 at 10:22 · Unlike · 1

Mathy Rupan கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வேதனை
18 December 2014 at 12:02 · Unlike · 1

Musthakeem Mohd

18 December 2014 at 12:56 · Unlike · 1

றாபியின் கிறுக்கல்கள். முறிஞ்சிருதா கவலையில்ல
மனமாறிப் போயிருக்கும்
மழைத்தண்ணி தேங்கி
எந்தன் மரமவிஞ்சி போனதுகா...
18 December 2014 at 13:19 · Unlike · 3

றாபியின் கிறுக்கல்கள். கலைமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

18 December 2014 at 13:21 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali உண்மையாக இது எனது பப்பாழி மரமல்ல ,உம்மாவின் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு வீட்டில் இரு மரங்கள் ஊத்துப்பிடித்து இறந்திருக்கக் கண்டேன்,கரு ஒன்றையும் கண்டு கொண்டேன்.Shafath Ahmed
18 December 2014 at 14:05 · Like · 5

Mohamed Ismail Umar Ali கருத்திட்ட அனைத்து நட்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
18 December 2014 at 21:42 · Like · 1

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி என்வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரக்கன்று
நட்டு வைத்து மறந்தும்பல மாதமாச்சு
எட்டிப் பார்த்தாள் என்மனைவி எனையழைத்து...See More
18 December 2014 at 22:16 · Edited · Unlike · 2

Mohamed Ismail Umar Ali மிக்க நன்றி ஐயா இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி
18 December 2014 at 23:07 · Like · 1

Nafeel Muhallam விட்டின் முன்
பக்கம் வாசல்
ரோஜா கூட்டம்
அது தரும் நல்
வாசனை
விட்டின் பின்
பக்கம் கோடி
பனை போல்
உயர்ந்த மரம்
அனாதையாய்
வளருவான்
மர நுனி முழுக்க
காய்கள்
காய்களின்னுள்
பல்லாயிரம் மிளகுகள்
பழுத்தா பலரும்
வருவார் சுவைக்க.
19 December 2014 at 01:05 · Unlike · 1

Noormohamed Sams puthukka( vi ) thieya?
19 December 2014 at 04:48 · Like

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி நன்றி சுடரொளிக்கவிஞர்.முஇஉமர்அலியார் அவர்களே
19 December 2014 at 08:22 · Like

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி நன்றி ஆஷ்ஃபா அஷ்ரப் அலி அவர்களே

0 கருத்துக்கள்:

Post a Comment