நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, December 10, 2014

அழுகின கொச்சிக்கா ஆன வில!




அழுகின கொச்சிக்கா ஆன வில!
.............................................................

வானம் உடையல்லகா
அந்த நீலக்கொடச்சீல கிழிஞ்சதுகா
ஏனம் வழிஞ்சி
தண்ணி தானாக ஓடுதுகா!

மொளச்ச நாத்தெல்லாம்
மூச்சடக்கி நிக்குதுகா
பொழச்சா கண்டுக்ககா
புள்ள நமக்கு தொட்டதெல்லாம்
நட்டந்தாங்கா!

ஒழங்கையால தண்ணி
ஓட்டப்போட்டி ஓடுதுகா
ஓசியில மீனெல்லாம்
ஊரைச்சுத்தி பாக்குதுகா!

அழுகின கொச்சிக்கா
ஆன வெல போகுதுகா
செடியில வெண்டிக்கா
வெட்டாம முத்துதுகா!

மூச்சுக்காரி எல்லாம்
இருமிக்கிட்டு இருக்காங்க
மூத்தம்மா மூலையில
சுருட்டிக்கிட்டு படுக்காக !

பாலப்பம் திங்கச் சோட்டையில
அப்பக்காரி ஊட்ட போனேன்
அவவக் காணல்ல
அடுப்படியே எட்டிப்பாத்தேன்
அதையுந்தான் காணல்லகா!

உறிவரைக்கும் வெள்ளம்
ஏறிருக்கி ஏணியத்தான் காணல்ல
படிதாண்டி மழத்தண்ணி
உள்ளுக்குள் போயிருக்கி
செருப்புப் போடாம !

தாய்க்கோழி மாடியாகி
குஞ்சுகளை காப்பாத்த
சீய்ச்சுபொறக்க
சிறு தானியமும் இல்லபோல

அடுத்தவீடு மாடிவீடு,
மாடியில நிக்கிறவ
வெள்ளத்தைப் படம் புடிச்சி
வெளிநாட்டு மச்சானுக்கு
வீடியோவில் அனுப்புறாகா

அடுத்தவீட்டுக்காறி பற்றி
அவககிட்ட கேட்டதுக்கு
அரசாங்க பள்ளிக்குள்ள
நேத்து ராவே போயிட்டாவாம்
பாவம் என்டு சொன்னா
பளிச்செண்டு சிரிச்சிக்கிட்டு !

மு.இ.உமர் அலி
2014 Dec 10th — with Ashraff Puthunagaran, Mohamed Naleer, Nafeel Muhallam and 36 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி, Malini Mala, Naavuk Arasan and 83 others like this.
7 shares

Poongavanam Ravendran · 11 mutual friends
unga kavithaiyile semma yethartham , arummai sago
10 December 2014 at 09:12 · Unlike · 3

Syed Bhasha wow.........
10 December 2014 at 09:19 · Unlike · 3

Ganeshan Kanthawanam · 2 mutual friends
அழகு.
10 December 2014 at 09:43 · Unlike · 3

Govind Dhanda Arumai kavinjare! irasanai mikuthiyaaka makizhchi!
10 December 2014 at 10:01 · Unlike · 3

Farsan S Muhammad supperb sir
10 December 2014 at 10:08 · Unlike · 3

Maruthanila Niyas வெள்ளத்திரை அருமை
10 December 2014 at 10:15 · Unlike · 3

Bknagini Karuppasamy அழகு நடை (மொழித் திறனுக்கு சபாஷ்..)
10 December 2014 at 10:16 · Unlike · 3

ஈழத்தென்றல் கவிதைகள் ஓசியில மீனெல்லாம் ஊரைச்சுத்தி பாக்குதுகா!
10 December 2014 at 11:15 · Unlike · 3

நிந்த மணாளன் Allahin-millahai-aanea-vaanevil-nanru
10 December 2014 at 11:19 · Like · 1

Ashraff Abdulcareem ஒழங்கையால தண்ணி
ஓட்டப்போட்டி ஓடுதுகா
ஓசியில மீனெல்லாம்
ஊரைச்சுத்தி பாக்குதுகா! ++++
அடுத்தவீடு மாடிவீடு ,
மாடியில நிக்கிறவ
வெள்ளத்தைப் படம் புடிச்சி
வெளிநாட்டு மச்சானுக்கு
வீடியோவில் அனுப்புறாகா
அடுத்தவீட்டுக்காறி பற்றி
அவககிட்ட கேட்டதுக்கு
அரசாங்க பள்ளிக்குள்ள
நேத்து ராவே போயிட்டாவாம்
பாவம் என்டு சொன்னா
பளிச்செண்டு சிரிச்சிக்கிட்டு#####மாஷா அல்லாஹ் அருமையிலும் அருமை*** பாலப்பம் தேனூத்தித்திண்டது போல,,,பரந்தது வெள்ளம் .உங்கள் கவிதையால்,நிறைந்தது,உள்ளம்
10 December 2014 at 11:56 · Edited · Unlike · 3

றாபியின் கிறுக்கல்கள். கவிஞரின் தமிழ் நடை கிராமத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது.
அருமை.
வாழ்த்துக்கள் தோழா!
10 December 2014 at 11:36 · Unlike · 2

Mageswari Periasamy ஒரு முறைக்கு இரு முறை வாசித்தேன். இது எந்த ஊர் பாஷை என்றே தெரியவில்லை. இருப்பினும் எந்த மொழியை தமிழில் எழுதினாலும் இனிமையாகத்தான் இருக்கின்றது. மு.இ.உமர் அலி
10 December 2014 at 13:49 · Edited · Unlike · 3

Najimudeen Aliyar S Mohammed Nice
10 December 2014 at 13:14 · Unlike · 1

Neeraja Bathini Arunachalam அழகான கிராமத்து நடை. சகோதர்ர் உமர் அலியின் அற்புத நயம் கவிதையில் சோகம் மட்டும் அல்லாமல் இது போன்ற தமிழ் நடை இனி வரும் காலத்திலும் தழைக்க வேண்டுமே என்பதான சிந்தனைக்கும் நம்மை ஆளாக்கிவிட்டார்.
அற்புதம்
இறைவனின் வாழ்த்துக்கள் .
10 December 2014 at 13:31 · Unlike · 2

Vanitha Solomon Devasigamony அருமை மு.இ.உமர் அலி.
மொளச்ச நாத்தெல்லாம்
மூச்சடக்கி நிக்குதுகா
ஒழங்கையால தண்ணி
ஓட்டப்போட்டி ஓடுதுகா
ஓசியில மீனெல்லாம்
ஊரைச்சுத்தி பாக்குதுகா!
உறிவரைக்கும் வெள்ளம்
ஏறிருக்கி ஏணியத்தான் காணல்ல
படிதாண்டி மழத்தண்ணி
உள்ளுக்குள் போயிருக்கி
செருப்புப் போடாம !
10 December 2014 at 13:44 · Unlike · 4

Abdul Kaiyoom "ஒழுங்கயில தண்ணி ஓட்டப்போட்டி ஓடுதுகா ஓசியிலமீனெல்லாம் ஊரசுத்தி பாக்குதுகா",....அற்புதம்.
10 December 2014 at 14:55 · Unlike · 4

Zanal Ali
10 December 2014 at 15:12 · Unlike · 1

Mohamed Kiyas Nice
10 December 2014 at 16:11 · Like

Abdul Hamed E Sahurudeen .
வார்த்தை சாலங்கள் அதன்
வாக்கிய அமைப்புக்கள்
வரிவரியாய் அணிவகுத்து
எறும்புகள் செல்வதுபோல்
ஊர்ந்தும் உணர்வை சற்று
உரசியும் உயிர்பெற்ற கவிதை
அடைமழையின் நடுக்கத்தின்
மூச்சுத்தினரளைவிடவும் உன்
கவிமழையில் தத்தளிக்கவிட்டு
சற்றே என்னை மறந்துவிட்ட
ஏதோவொரு மயக்கநிலை ,,,
வாழ்த்துக்கள் சகோதரா
10 December 2014 at 19:27 · Unlike · 3

Thirugnanasampanthan Lalithakopan மூச்சுக்காரி எல்லாம்
இருமிக்கிட்டு இருக்காங்க
மூத்தம்மா மூலையில...See More
10 December 2014 at 19:30 · Unlike · 4

Mymoon Meerasaibu like this
10 December 2014 at 23:56 · Unlike · 2

Ibra Lebbai Yindraya nilayai yemmavar navazkkil yithamaka varaintthuleerkal. Arumay ! Nanbare.
11 December 2014 at 01:10 · Unlike · 1

Mohamed Razhik அருமை . . .
11 December 2014 at 06:03 · Unlike · 1

Mohideenbawa Mohamed Kaleel This poem reflects the gone days and the village style .It is so nice.

0 கருத்துக்கள்:

Post a Comment