நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, December 27, 2014

மாரியில் எங்கள் ஊர்!




மாரியில் எங்கள் ஊர்!

வானத்தை வைதவர் யார்
விடாமல்
அடம்பிடித்து அழுகிறதே?

வீட்டுக்கூரை
ஓட்டினால் ஆனாலும்
எட்டிப்பார்த்து
வீட்டுக்குள் புகுந்து
எதிரியைத்திட்டுகிறது
எல்லோர் வாசலையும்
தட்டுகிறது
ஏழைகளை வீடு விட்டு
விரட்டுகிறது!

வீதியெல்லாம்
வெள்ளத்தாலே சட்டைபோட்டு
ஊர்வலம்போகுது
ஊத்தத்தண்ணி எல்லாம்
ஓடையிலே ஒன்று சேந்து
வட்டையிலே வடிகிறது
கொஞ்சம் அதில்
வெட்டாத்தை சேர்க்கிறது
பால்கோப்பி கலந்தால் போல்
நுரைததும்ப
கீழ்ப்பக்கம் வடிந்ததெல்லாம்
நாலஞ்சி இடத்திலே
கடலுக்குள் கலக்குது!
கடலலைகள்
ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துச்
சண்டை
அதனால் கிழிந்திடும்
கரையின் கரகரத்த தொண்டை !

தூவானம் தெறிக்குது
வானம் ஆலோலம் பாடுது

தோணி எல்லாம்
நகருது மேட்டு
காணி நோக்கி
ஏணி எல்லாம் ஊருது
ஒழுகும் வீட்டுக்
கூரை நோக்கி!

மு.இ.உமர் அலி
2014 dec 27


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Mm.mohamed Kamil, Ibra-lebbe Mohamed Naleem, Thirugnanasampanthan Lalithakopan and 44 others like this.
3 shares

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி இப்படித்தான் எங்கள் உறந்தையும் இருந்தது . அடியேன் தமக்கையுடன் வயல்காட்டுக்குச் சென்று பார்ப்பேன். வளர்ந்த பயிரே தெரியாது . மழையை திட்டி சாபமிட்டு அழுத கண்ணீரோடு இல்லம் வருவோம் . இன்று ஒரு சொட்டு மழைக்கு தவம் இருக்கிறோம் . எனவே இயற்கை இயற்கையாக இருக்கட்டும் .தவறு நம்மீது.நாம் சோம்பேறிகள். வருவதை நின்பபதில்லை வந்ததை சிந்திப்பதில்லை
27 December 2014 at 08:49 · Edited · Unlike · 7

Mohammad Uwais V nice pooym
27 December 2014 at 09:49 · Unlike · 1

Usanar Saleem அனுபவம் உமரலிக்குக் கவியானது!என் இனிய நல்வாழ்த்துக்கள்!

27 December 2014 at 10:47 · Unlike · 2

Fasil Mohamed தோணி எல்லாம்
நகருது மேட்டு
காணி நோக்கி
இனி எல்லாம் ஊருது
ஒழுக்கு வீட்டுக்
கூரை நோக்கி!

வெள்ளத்தால் அடைந்தோம்
துன்பம் இடம் மாறிப்போனோம்
உறவினர் வீட்டுக்கு தஞ்சம்!

சிறுகச் சிறுக சேர்த்த
பொருள் தண்ணியிலே
தாண்டு கிடக்குது!
நெஞ்சு கிடந்து தவிக்குது!

ஓட்டு வீட்டுக்குள்ளே
ஓட்டுக்குள் ஒடுங்கிய
நத்தைபோல சுருண்டு
கிடக்குது நம் தேகம்!
27 December 2014 at 12:42 · Like · 1

மா.சித்ரா தேவி எங்க மலேசியாவிலும் குறிப்பாக கிழக்குகரை மாநிலங்கள்(kelantan,terengganu pahang)வரலாறு கானாத வகையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது,மக்கள் பெறும் துன்பத்துள்ளாகியுள்ளனர்.அரசாங்கமும் ngoவும் மக்களுக்கு மிக விரையாக உதவி நல்கியுள்ளதால்,அசம்பாவிதங்கள் குறைவாகவே நடந்துள்ளது.வெள்ளத்துயரிலிருந்து மக்கள் விரைவில் மீள தங்களின் மத நம்பிக்கைப்படி இறையனிடம் வேண்டும்மாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுள்ளது
27 December 2014 at 13:54 · Like

வெண்ணிலா வெண்ணிலா பாவம்!
மக்கள்.
எத்தனை நாட்கள் தொடருமோ
இந்த அவலம்.
அவன் நாட்டம்
அவன் விரும்பியபடி
நடக்குது!
மனசு இயல்பு வாழ்க்கைக்காக
ஏங்குது!
27 December 2014 at 14:33 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி சகோதரர்களே Fasil Mohamed ,Usanar Saleem,Mohammad Uwais,அன்புள்ள ஐயா இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி அவர்களே
27 December 2014 at 14:36 · Like · 2

Mohamed Ismail Umar Ali அக்கா தாங்கள் நாட்டில் வெள்ளத்தால் மக்களுக்காக இரவைனிடம் பிரார்த்திக்கிறேன் @ மா.சித்ரா தேவி
27 December 2014 at 14:37 · Like · 1

Mohamed Ismail Umar Ali உண்மைதான் ,வெண்ணிலா வெண்ணிலா நூலில் ஆடும் போம்மைகல்தானே நாம்,நூலின் நுனி அவனிடமல்ல்வா இருக்கிறது
27 December 2014 at 14:38 · Edited · Like · 1

Mohamed Jafir Omar Ali enna kavitha
27 December 2014 at 14:43 · Unlike · 1

Uvais Nasly Super
27 December 2014 at 15:51 · Unlike · 1

Meera Mahroof !
'பால்கோப்பி கலந்தால் போல்
நுரைததும்ப
கீழ்ப்பக்கம் வடிந்ததெல்லாம்
நாலஞ்சி இடத்திலே
கடலுக்குள் கலக்குது!
கடலலைகள்
ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்துச்
சண்டை
அதனால் கிழிந்திடும்
கரையின் கரகரத்த தொண்டை !'

உவமைகள் ஒவ்வொன்றும் அருமை.
உமர் அலி.

இந்த பாடல் வரி நினைவுக்கு வந்தது.

“துவானம் இது, துவானம் இது, தூ...வானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது.”

படம்- தாழம்பு
27 December 2014 at 17:10 · Unlike · 2

இராஜேந்திரன் கிருஷ்ணசாமி இரா கி மக்களை ஆண்டவன் ஆள்பவன் செய்ய வேண்டியதை அருளாளன் என்ன மழையையே பெய்யாமல் வரண்டு போக வைக்க வேண்டுமா. எல்லாவற்றிற்கும் பிரார்த்தனையா., கை விட்ட நிலையில் தான் பிரார்த்தனை. நீரைத் தேக்குங்கள். உலகலாவிய நீர் பஞ்சம் வரப் போகின்றது. மழை இயற்கையின் வரப் பிரசாதம்.
27 December 2014 at 17:51 · Unlike · 2

Thirugnanasampanthan Lalithakopan காலம் மாறும்

0 கருத்துக்கள்:

Post a Comment