நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, December 16, 2014

ஓமானில் எனது இறுதிநாள்




றுதிநாள்
.....................
கணமும் ஒரு கனவு
மின்னல்போல் பளீச் பளீச்சென
வெட்டிவிட்டுச்செல்கின்றது
நடக்குமா நடக்காதா?

மூன்றுமாதமாய்
அடைவைத்த முட்டை
அடைக்கோழி விட்டுச்செல்ல
ஓரிரு நாட்களே பாக்கி
குஞ்சு மதித்து
கூளாகிவிடுமோ என்ற அச்சம் எனக்குள்!

கண்ணில் நீர்
முட்டிக்கிட்டு நிற்கின்றது!
சரியான தேதிக்கு
போவேனா மாட்டேனா?

எனது கடிதங்களும்
கோவைகளும் ஆமைகளின்
முதுகில்
அமைதியாக பயணிக்கின்றன !

அவர்கள் அலுவலத்தில்
அவர்களுக்குள்
அளவளாவுகின்றார்கள்
குசலம் விசாரிக்கின்றார்கள்
அலைபேசியில்
அளவிற்கதிகமாக வழிகின்றார்கள்
கடைவாயினூடாக
இனிப்பு ஒழுகுகின்றது!

காலையில் குடித்த
தேநீர் இன்னும் செரிக்காமல் நான்
மூன்று நாலு
பால்தேநீர் அவர்களுக்குள்
என்னமா செரித்துவிட்டது?

நான் காத்துக்கொண்டே
இருக்கிறேன்
பராக்குப்பார்க்கிறார்கள்
என்னை நேரிலே பார்ப்பதை
வேண்டுமென்றே தவிர்க்கின்றார்கள்!

நீண்ட நேரமாக
காத்திருக்கும் நான்
அங்கு வருபவர்க்கும்
போபவர்க்கும் வினாக்குறிகளை
உருவாக்கியிருக்க வேண்டும்
புருவத்தினாலேயே வினவினார்கள்
அருவருத்தேனோ தெரியவில்லை!

இருக்கச்சொன்னார்கள்
இருக்கிறேன் அந்த
மெத்தென்ற இருக்கையில்
சாய்ந்து கொள்ள மனசுக்குப் பிடிக்கவில்லை
சுணங்கச்சுணங்க மனசு
மாய்ந்துகொண்டல்லவா இருக்கிறது?

கோடிக்கணக்கில் கனாக்குமிழிகள்
மனசுக்குள் தோன்றி
கணப்பொழுதிலேயே
குறைப்பிரசவமாகி விடுகின்றன
முடிவிலியாக எண்ணங்கள்!

கணணித்திரையைப்பார்க்கும்
அவர் கண்கள்
எலியைத்தொட்டுச்சொடுக்கும்
அவர்கரங்கள்
கரத்தையும் கணனியையும்
என் கண்கள் மொய்க்கும்
சில வினாடிகளில்
எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்க்கும்!

ஒரே ஒரு கடிதம்
பலரது கையெழுத்துக்காக
எனது தலைஎழுத்தோ
அந்த ஒப்பங்களில்தான்!

எனது பெயர் பொறிக்கப்பட்ட காகிதம்
ஊமையாகி கிடக்கின்றேன்
அதற்காக நானே வாதாடுகின்றேன்.

அவர்கள் பயிற்றப்பட்டவர்களாம்
அதிகாரிகள் சொன்னார்கள்
ஆம் ஆம் நல்ல பயிற்சி
ஆவணங்களை தொலைப்பதற்கும்
ஆட்களை அலைக்கழிப்பதற்கும்
பயின்றிருக்கின்றார்கள்
நன்றிகள் அரபு நண்பர்களே !

அவர்களை நான்
சோம்பேறி என்று சொல்ல மாட்டேன்
அதற்கான புதிய சொல்லொன்றை
தமிழில் புனைய வேண்டும்
முடிந்தவர் உதவுங்கள் !

அழகாக புன்னகைத்து
முகமன் கூறும் அவர்களுக்கு
"இன்சா அல்லாஹ் " என்ற சொல்லில்
அலாதி நம்பிக்கை
அதை நாட்கணக்கில் கேட்டு
அலுத்துப்போன எனக்கோ
அவநம்பிக்கை!

மமதையா அன்றி மடமையா
எனக்கு எதுவுமே புரியவில்லை
மனிதனின் இக்கட்டும்
அவர்களுக்கு தெரியவில்லை!

இன்று வார இறுதிநாள்
அத்துடன் நீண்டதோர் வார இறுதி
விட்டால் பிடிப்பது கடினம்
நாலுமூலை விளையாட்டை
நடந்தே ஆடினேன்
பல இடங்களுக்கு தனியே ஓடினேன் !

சுவர் மணிக்கூட்டையும்
கைக்கடிகாரத்தையும்
விநாடிக்கொருமுறை
ஏக்கத்தோடு பார்க்கிறேன்
முட்கள் நகர்ந்துகொண்டுதான்
இருக்கின்றன
எனது வேலை நகரவில்லை !

பகலாயிருப்பினும்
எனக்கு விடியுமா என்ற கேள்வி
இன்னும் எனக்கு இருட்டுத்தான்

பயணம் தாமதமாக தாமதமாக
பஞ்சு மெத்தை
உறுத்தத்துவங்குகின்றது
பசியும் எங்கோ
பறந்து ஒதுங்குகின்றது!

நீண்டனாட்களின் பின்
நான் தொங்கோட்டம் ஓடுகிறேன்!

முடிவு
வெற்றியும் தோல்வியும் எனக்குத்தான்
ஆனால் அவர்கள் யாரும் தோற்கவில்லை
வெல்லவுமில்லை!
நான் வெல்ல விடவில்லை!

மு.இ.உமர் அலி
2014 12 16
2014


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Michael Collin, Rasmy Safras, Neeraja Bathini Arunachalam and 22 others like this.
1 share

Junaideen Athambawa எப்படியோ வந்து சேர்ந்து விட்டீர்கள் அல ஹம்துலில்லாஹ்.
16 December 2014 at 15:08 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali உண்மைதான் , எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே Junaideen Athambawa நன்றி
16 December 2014 at 15:09 · Edited · Like

Arumuga Nainar THADUMAATRAM
KULAPPAM
MANASORVU
16 December 2014 at 15:12 · Unlike · 1

இ.பியின் இதய இரைச்சல்கள் அவர்கள் தோற்கவுமில்லை..
நான் வெல்லவும்..
விடவில்லை...
வாழ்க்கையில்..
யதார்த்தம் இங்கே ..
விமர்சனையாகும் போது..நாம்...
தோற்க கூடாது...
வெற்றி நமதே...
வாழ்த்துக்கள் ...
நண்பரே..!
16 December 2014 at 16:43 · Like · 1

Ajmel Khan வருகைக்கு வாழ்த்துக்கள்
16 December 2014 at 18:15 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரர் Arumuga Nainar,இ.பியின் இதய இரைச்சல்கள்,Ajmel Khan
16 December 2014 at 19:23 · Like · 3

Meera Mahroof !
வந்த இடம் நல்ல இடம்
வரவேண்டும் காதல் மகா ராஜா....See More
16 December 2014 at 22:15 · Unlike · 1

Ibra Lebbai Nadakkum Yenbar Nadakkaathu...Nadakkaathenbar Nadanthuvidum...Kidaykkum yenbar Kidaikkathu... Kidaikkathenbar Kidaitthuvidum.
17 December 2014 at 01:41 · Unlike · 1

Fasil Mohamed பிடிமானமில்லாமல்
பிடித்துப்போன இடம்.
போராட்டம்தானே வாழ்க்கை உமர்.
எதற்காக சென்றீர்களோ
அந்த இலக்கை அடைந்தீர்களா??

கவிதாவில் உங்கள்
மனவழுத்தம் மீதமாகிக்கிடக்கிறது
அன்பான குடும்பத்தைக்கண்டு
உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே!
Be happy .
For get other things.
17 December 2014 at 09:29 · Unlike · 2

Amier Ali MI GREAT

0 கருத்துக்கள்:

Post a Comment