நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, December 30, 2014

புற்று!




புற்று!
...........
வெள்ளைக்கார எறும்பின்
பண்டைக்கால ராஜ்யம்
அரசியே இங்கு அசையாமல்
கோலோச்சுகிறார்!

இங்கு அடிக்கடி
அழைக்காமல்
பாம்பு படமெடுத்து வந்து
குடிகளுக்கு
பீதியைக்கிளப்புகின்றது!

போராளிகள்
சேவகர்கள்
இன்னும் சோம்பேறிகளும்
சாவகாசமாக
உலவுகிறார்கள்
அனைவரும் ஒன்றாய்ப்
பழகுகிறார்கள்!!

இந்த
குழாய் ஜன்னல்கள் வைத்த
கோட்டைவீட்டைக்கட்ட
எந்திரிகள் எங்கிருந்தும்
இறக்குமதியாகவில்லை
எந்தக்கல்லும் இதற்குளில்லை!!

சுரங்கமறுப்பது முதல்
சுரப்புச்சுரந்து
சுவரில் சாந்துபூசுவது வரை
எல்லோரும் சேர்ந்து
சுறுசுறுப்பாக செய்கின்றன
சிறப்பாக வாழ்கின்றன .

கல்லில்லாத வீடு
பல்லே இங்கு முதலீடு
புற்றில் புள் முளைக்காது
முளைத்தால்
உள்ளே உயிர் இருக்காது!

நிலத்தின் மேலே
காகப்பறவைகள் சுத்தம்செய்ய
நிலத்திற்கு கீழே
கறையான் காகங்கள்
யுத்தம்செய்கின்றன!

பயிர்செய்து உணவுண்ணும்
கறையான் கூட்டம்
போர்செய்து எதிரியைக் கொல்லும்
இது ராணியின் நாட்டம்!

காற்றோட்டக்கதவுகளும்
காளான் வளர்ப்புகளும்
புற்றுக்குள்ளே
ஏராளமாய் உண்டு !

நீரோடும் வாய்க்கால்கள்
தேரோடும் வீதிகள்
போராடும் வீரர்கள்
என்னும் என்னென்னவோ
அங்கு தாராளம்!

குவித்துவைத்த மண்ணல்ல
இது யாரும் தின்ன
அவித்துக்குவித்த பிட்டுமல்ல
அது ஒரு சமுகத்தின் சரித்திரத்திட்டு !

உயரமாக இருந்தாலும்
கறையான் புற்றிலே
ஒருநாளும்
ஏணி வைத்து ஏறாது !

இது பலவருடயுத்தம்
அங்கு ராணி வைத்ததே சட்டம்
மழையிலே நனைந்தாலும்
குடை பிடிக்க யாருமில்லை
குடையின்றி நனைந்தாலும்
நனைந்தவரை காணவில்லை!

எதிரிகளிடம் வென்ற
ஈசல்கள்
நிலவறைக்குள் சென்று
அஞ்சாதவாசம் பெற்ற
அசையாக்குழந்தைகள் !

வேரில்லாத மரம்
இலையில்லாத செடி
நீரூற்றாமல் வளரும்
நீ இடித்தால் தகரும்!

ஆளரவம் இல்லாத
இடங்களிலே அரசாங்கம்
பேரரவம் இருந்தாலே
அவை இடம் மாறும்!

உயிர்வாழ கட்டியது
பாழடைந்தால்
ஒழிந்தோடி வாழ்பவர்க்கு
கொண்டாட்டம்
ஒளிந்தவரை
கண்டுபிடிப்பதிலும் திண்டாட்டம்!

இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்!

எனக்கு கறையானை
இரும்புக் கூட்டிலே வளர்க்க ஆசை
அதன் கலைகளை கற்றிட பேராசை!
பாசை பழகுவேண்டும்
அதனோடு பேச முனையவேண்டும்!

மு.இ.உமர் அலி
2013Dec 29 — with Shafath Ahmed, தமிழ்ப் பித்தன், Malikka Farook and 39 others.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Winston Fernando, Michael Collin, Lawrence Vasuthevan and 44 others like this.

Olympic Siraj · Friends with Rajakavi Rahil
கவிதை வயலில்,
முற்றும் மூழ்கியபோது ,
புற்று மீது தனியாத பற்று
ஏற்பட்டது.
29 December 2014 at 09:33 · Unlike · 2

Fasil Mohamed nice lines
29 December 2014 at 11:04 · Unlike · 2

Govind Dhanda Umathu kavikkarngkalukku emathu mariyaathaikkuriya vanakkangkal sakotharaa!
29 December 2014 at 12:08 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரரே Govind Dhanda
29 December 2014 at 15:26 · Like · 1

Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரர் Fasil Mohamed
29 December 2014 at 15:26 · Like

Mohamed Ismail Umar Ali நன்றி Olympic Siraj
29 December 2014 at 15:27 · Like

Mohamed Ismail Umar Ali நன்றி Olympic Siraj
29 December 2014 at 15:48 · Like

Steuart Osman Theresa Mary · 18 mutual friends
இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்! nice
29 December 2014 at 20:59 · Unlike · 2

Meera Mahroof !
'இத்ததை அரிக்கும் பூச்சிக்கறையான்
இதனால் பூமிக்கு லாபம் அதிகம்
புத்தம் புதியதை அரிக்கும் மனிதக்கறையான்
மொத்தத்தில் அவனுக்கே லாபம்!'

அறிவுக்களஞ்சியம்
உங்கள் கவிதை.
வாழ்த்துக்கள். உமர் அலி.
29 December 2014 at 21:19 · Unlike · 3

Kaleel Rahman வானளாவிய புற்றுக்கோபுரம்
அமைக்கும் வெள்ளைக்கார
எறும்பு எங்கு கட்டிடகலை
பயின்றதோ?

அது இறைவன் கொடுத்த
ஞானமன்றோ.
29 December 2014 at 21:49 · Unlike · 2

Kaleel Rahman கல்லில்லாத வீடு
பல்லே இங்கு முதலீடு...See More
29 December 2014 at 21:55 · Unlike · 2

Mohamed Ismail Umar Ali தாங்களது மேலான கருத்துக்களைப்பதிவிட்ட அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !Kaleel Rahman,Meera Mahroof,Steuart Osman Theresa Mary

0 கருத்துக்கள்:

Post a Comment