நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, December 8, 2014

மழையே நீ விடாயோ?




மழையே நீ விடாயோ?
............................................

மண்ணின் தண்ணிவிடாய்
தீர்ந்ததாம்
மழையே நீ விடாயோ?

வேண்டாமென்று சொல்லாமல்
ஏந்திய பூமி
வாந்தியெடுக்குமளவுக்கு
தீத்திக்கொண்டிருக்கிராய்

வருணனின் கை வண்ணம்
வெள்ளக்காடாகி
ஊரெல்லாம்
வெள்ளை வர்ணம்!

அவர்களை துணிகளை
கொடிகளில் காயப்போடலாம்
பாவம் ஈரஅடுப்புகளை
எப்படியப்பா உலர்த்துவார்கள்?

ஒடுக்கமான கான்கள்
ஓய்ச்சல் ஒளிவின்றி
ஓடிக்கொண்டிருக்கின்றன
வட்டியலில்
கூப்பிடாமலே வெள்ளம்
தட்டி நிற்கிறது !

அடிக்கடி கழுவப்படாத
திண்ணைகள்
ஊறிக்குளிக்கின்றன
வாசலில் தடுப்பாயிருந்த
பழைய சாக்கு
புளிச்சி நாறிக்கிடக்கு !

நாக்கிளிப்புழுக்கள்
நகர்ந்து வந்து
நெளிநடனம் ஆடுகின்றன!

சீச்சிப் பிழைக்கும் கோழி
தாவாரத்தில்
ஒதுங்கி கொடுகுது
கரைந்து உழைக்கும் காகம்
சிலிர்த்து உடலை உலர்த்துது!

சுருட்ட இடமின்றி நாய்கள்
வாலை கவுட்டுக்குள் சுருட்டி
சுற்றித்திரியுது
வெள்ளத்திலையும் அது
தண்ணியை நக்கிக்குடிக்குது!

ஒரே பிசுபிசுப்பு
ஆக்கள் எல்லோருக்கும்
மனசிலே முணுமுணுப்பு!

வானம் எப்ப வெளிக்கிறது
நாம
ஈரச்சாமான் எப்ப உலர்த்துறது!

மு.இ.உமர் அலி
2014Dec 8th

கிழக்குமக்கள் வெள்ளத்தில் அவஸ்திப்படுகின்றார்கள்,கேள்வியுற்றதும் மனதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
இறைவா மிக விரைவில் இந்த துன்பத்தை அகற்றுவாயாக! — with Meeralabbai Samsunali, Mohamed Faize and Jaleel Mohd.


Tag photoAdd locationEdit
Like · · Stop Notifications · Share



Infaas Ahamed Buhary Yoosuff, Abdur Rahman, Maruthanila Niyas and 24 others like this.

Meera Mahroof !
கமராவினால் படம் பிடித்தார் பாலுமகேந்திரா
நீங்கள் காலநிலையினால் ஏற்பட்ட கோலத்தை கவிதையினால் படம் பிடித்துள்ளீர்கள். படப்பிடிப்பு பிரமாதம்.வாழ்த்துக்கள். உமர்அலி.
9 December 2014 at 20:15 · Unlike · 4

Jaleel Mohd எங்கவூரு வெள்ளம் பார்த்து உடன் கவிதந்து பிராத்தனை செய்த உங்களுக்கு நன்றி... உமர் அலி .
9 December 2014 at 20:45 · Unlike · 3

Mohamed Ishaque · 143 mutual friends
காலத்துக்கு ஏற்ற கவிதை, வரிகளுக்கு பாராட்டுக்கள்

0 கருத்துக்கள்:

Post a Comment