நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, September 24, 2014

நீ வருவாயென...


 
 
 
 
நீ வருவாயென...
................................

அடிகாயம் வலிக்கலடா
என் ஆசை மச்சானே
இன்னும் உன் கடிகாயம்
இனிக்குதடா நெனக்க வச்சவனே! !

படியேறும் வேளையிலே
இடை நடுவில் தரிக்கின்றேன்
குடியேறிக் கொல்லுகின்ற
தடையில்லா உன்நினைப்பால்!

பிடிக்காத பழக்கங்கள்
எனக்காக நீ விட்டாய்
துடிக்கின்ற அதரங்கள்
தீண்டாமல் நீ சென்றாய்!

நந்தவன மரங்களெல்லாம்
உன் ஒசரம் இல்லையடா
இந்தமனம் நினைக்காமல்
உன் உசிரும் இல்லையடா!

அல்லித்தண்டு நீ என்று
சொல்லிக்கொண்டு திரிந்தவனே
துள்ளிக்கிட்டு குதிக்கிறேண்டா
நீ வரும் செய்தி கேட்டு!

மு.இ.உமர் அலி
2014 Sept 24th

0 கருத்துக்கள்:

Post a Comment