நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, September 12, 2014

மறந்திடவா !

















மறந்திடவா !
.........................
மறதி மனித மனத்துக்கு பெrருங்கொடைதான்
துன்பம் தேய்ந்திட வழி அதுதான்
மறக்க மனிதனும் மறந்துவிட்டால்
இன்பம் துறந்துதான் வாழ்ந்திடுவான்!

உறங்கும் நினைவுகள் விழித்தெழுந்தால்
உறக்கம் உன்னை கழித்துவைக்கும் ,உள்ளம்
திறக்கும் கதவுதான் உன்நினைவு
அதை முழுக்க மூடவும் முடியாது!

நினைத்து நினைத்து உருளுகின்றார்
துன்பக்கடலினில் நிதம் புரளுகிறார்
எந்த வேலையும் முடிக்காமல்
தூக்கம் தொலைத்தவர் நீந்துகின்றார்!

கடந்த காலத்தை மறந்துவிடு அதில் நீ
நடந்த பாதையை நினைத்து இரு
கிடந்து வருந்திடின் யாது பயன் இனி
அடுத்த வேலையை பார்ப்பின் நலன்!

அணைந்த விறகிலும் நெருப்பிருக்கும்
அதை நெருங்கும் வேளையில் அனலடிக்கும்
துன்ப நினைவுகளை தூக்கி ஏறி நல்
இன்ப நிகழ்வுகளைத் தூக்கிப்பிடி!

காயம் ஆற்றுகின்ற மருந்து இது
என்றும் நீயும் பழசினை மறந்துவிடு
தேயும் நினைவுகள் படிப்படியாய்
அதில் காயும் மனப்புண்ணும் மிகக்கெதியாய்!

பூக்கள் சோலைகள் மனதில் வைப்பாய்
உன் ஆன்மாவினை நிதம் அழகுசெய்வாய்
முட்கள் ,கற்களும் வாழ்வில் ஏராளம்
அவை கடந்து வாழ்வதே தாராளம்!

மனிதனாய் எனைப் படைத்தவனே
மறதியும் சற்றுத்தந்தவனே
இனிய நினைவுகள் காத்து விடு
கொடிய நினைவெலாம்
அடியோடு அழித்துவிடு!

மு.இ.உமர் அலி
2014 Sept 12th — with Mohamed Janofar, Nazeema Naze, Uvais Nasly and 47 others.




Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Mus-ab Iqbal, Ashfa Ashraf Ali, Moh Jahaabarali and 18 others like this.
1 share

Rathy Srimohan அருமை
3 hrs · Unlike · 1

Kalam Shaick Abdul Kader மறதி என்னும் மாமருந்து; காலம் என்னும் மருத்துவர்
1 hr · Unlike · 1

Kalam Shaick Abdul Kader மறக்க இயலாத கவி மறக்கச் சொல்லும் கவிதையில்.....!
1 hr · Unlike

0 கருத்துக்கள்:

Post a Comment