நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, September 15, 2014

நீயும் நானும்




நீயும் நானும்

மேகக்குடை
குளிர்க்கம்பளம்
எவ்வளவுதான்
இழுத்து போர்த்தினாலும்
நமது மூடப்படாத
மோக மூலை!

தீயைத்தொட்டும்
துள்ளிக்குதிக்காத அளவுக்கு
நம் தெறிவீனைக்கு
செய்வினை செய்திருக்கிறார்கள் !

உனக்கு நானும்
எனக்கு நீயும் தெவிட்டாத பானம்
யாரும் மீட்டாத கானம்!

விழிகளுக்கு
விழுங்கி விடுமளவு
அகலத்திறந்த
வாய் முளைப்பது
உன்னைக் கண்டால்
மாத்திரமே !

இமைகளும்
படபடப்பது
உன்னுடன் வானவெளியில்
சிறகடித்துப்பறக்கத்தானே!

நாம்
ஆஸ்ரமம் இல்லாமல்
உசரத்தில் ஓய்யாரத்தவமிருக்கும்
ஒற்றை ஆன்மாக்கள்!

என் கொதிநிலை
உனக்குமட்டுமே தெரியும்
நீ பனிக்கட்டியல்ல இருந்தாலும்
உன் உருகுநிலை
அறிந்த வெப்பமானி
நானல்லவா ?

திரிக்கப்பட்ட புரிகள்
பிரிந்தால் நமக்கு
கயிறென்று பேருமில்லை!

இருவரும் உருக உருக
நறுமணமே சாம்பலாகி
உள்ளக்குளத்தின் அருகே சந்தோஷ அலையடிக்குதே! சந்தத்தை இழந்த இதயம்
சந்தோஷ மிகு தியால்தான்
ஒற்றையிலே சடுகுடு ஆடுதே!

சிலந்தி வலையை விட
மெல்லிய புன்னகை
என்னை என்னமாய் கட்டி இழுக்குது
உன் காலடியே வீழ்த்துது!

மு.இ.உமர் அலி
2014 Sept 15th


Tag photoAdd locationEdit
LikeLike · · Stop Notifications · Share



Fasil Mohamed, Kavanur Srinivasan, Jaleel Mohd and 19 others like this.

மா.சித்ரா தேவி உன் உருகுநிலை அறிந்த வெப்பமானி நானல்லவா
மிகவும் அருமை உமர்,வாழ்துகள்
15 September at 18:34 · Unlike · 1

Abdul Hamed E Sahurudeen .
தொட்டுவிட பட்டுக்கொள்ள அதன் உருகுநிலை
அறிந்தவன் உன் உயிரோடு கலந்ததினால்,,,
கவியோடு உந்தன் தொழிலையும் சேர்த்து
உன் புன்னகை வலையில் சிக்குண்ட வண்டாய்
உன்னில் வீழ்ந்துகிடக்கிறேன் வெற்றிகள் பெறவே
அருமை தோழமையே அழகிய பதியம் ,,,,
15 September at 19:07 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali நன்றி உறவே Abdul Hamed E Sahurudeen,நன்றி அக்கா மா.சித்ரா தேவி
15 September at 19:08 · Like

Vetrichelvi Velu Nice poem.
15 September at 19:27 · Unlike · 1

Reema Hasni Nice
15 September at 19:51 · Unlike · 1

Farsan S Muhammad அருமை
15 September at 20:55 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் தொடுதல் எனும் வரிகள் மனதை தொட்டது வாழ்த்துக்கள் சகோதரா
15 September at 23:52 · Unlike · 1

Fasil Mohamed தொடுதல்
ஆன்மாக்களின்
சங்கமம்!...See More
16 September at 08:14 · Unlike · 1

0 கருத்துக்கள்:

Post a Comment