நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, September 5, 2014

பொய்ச்சாட்சியும் மனச்சாட்சியும்!

 

பொய்ச்சாட்சியும் மனச்சாட்சியும்!
.................................................................
மன்றுக்கு வருமுன்னரே
மனச்சாட்சியை அவர் விலைபேசி
விற்று முடித்திடிந்திருந்தார்
மிகக்கஸ்டமான கேள்விகள்
இலகுவாகவே கேட்கப்பட்டன.!

குறுகுறுக்காத மனதுக்காரன்
விறுவிறுவென்று
சட்டென்று விட்டெறிந்தான்
அந்தப்பொய்யை!

புனையப்பட்ட பொய்ப்பெய்களின்
நிர்வாண தேகத்தை மறைக்க
ஆம் அல்லது இல்லை
என்றே மூடிய பதில்களே
வாய்திறந்து வந்தன!

தாடிவைத்த அந்தக்கேடியின்
ஒற்றைப்பொய்யில்
ஒருகோடி பெறுமதி தலைகீழாக
உருண்டது!

இருபக்க வக்கீல்களுக்கும்
அன்று நிம்மதியான தூக்கம் வந்திருக்கும்
ஏனெனில் அவர்கள்
சட்டைப்பைகளுக்குள் பச்சை நோட்டுக்கள்
குடியேறியிருக்குமல்லவா!

வாதியின் வீட்டில்
அடுப்பெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனால் அங்குள்ளவர்களின்
மனங்கள் நிச்சயமாய் எரிந்திருக்கும்!

அந்தத்தீ
உண்மையைத்தேடிய ஒரு
வேள்வியில் வளர்த்த
ஹோமமாய் இருந்திருக்கும்
தர்கித்துத் தோற்ற காகிதங்கள்
அங்கு தர்ப்பைகளாக எறியப்பட்டு
சாப மந்திரங்கள்
எதிர்த்தரப்பினரை சபித்து
உச்சரிக்கப்பட்டிருக்கும்!
அமரர்கள் ஆட்சியில்
இப்படியும் ஒரு நீதியா ?
இல்லாமல் இருந்ததை
இருந்ததென்று கூறியதை
மன்றாடியழுது மறுத்தாலும்
மன்று நிராகரித்ததே!

கூட்டும் சூட்டும் அணிந்தவனின்
கட்டுக்கதையை சட்டம் சரியென்றே எடுத்தது
ஆவணக்கோப்புகளில்
பத்திரமாக இருக்கவேண்டிய
காகிதங்கள்
பொய்யின் மானம் காக்கும்
கோவணத்துண்டுகளாக மாறின!

நீதவான் தீர்ப்பளித்த் திருப்தியில்
தேநீர் அருந்தச்செல்கிறார்
சூரியனின் நெற்றியில் கறுப்புப்புள்ளடியொன்றை
போட்டுவிட்டு சத்யம்
சத்தமாக சாபமிட்டுச்செல்கின்றது !

அடுத்த சூரிய கிரகணத்துக்கு அது
அஸ்திவாரமாகக்கூட இருக்கலாம்
இது தொடருமெனில்
ஒளியை இருள் ஒருநாள் முற்றாக மூடியே தீரும்.
அந்த நாள் உலகின் முடிவாகவே இருக்கும்.
அன்று யாராலும் உண்மையை பார்க்க முடியாது.
கடவுளை மனிதன் சபிக்கும்
சம்பவத்தில் இதுவும் ஒன்று
பொய்யை மெய்யாக்கியவரை
நான் எதற்கு கையெடுத்துக் கும்பிடுவேன்
என்று கேட்கிறான்.
அவனிலும் நியாயமுண்டு .
கடவுள் இதுகண்டு கோபப்படவில்லை
அனுதாபப்படுகின்றார்,கொடுப்புக்குள் சிரிக்கிறார்!

ஏனெனில் அவர் கணக்கு வேறல்லவா?
தெருமுனையில் ஒரு திடீர் விபத்து
மனமுடைந்திருந்தாலும்
இரங்கிய மனதுக்காரன் அந்த வாதி,
ஓடிப்போய் தூக்குகிறான்
அந்த தாடிக்காறச்சாட்சியை
அவனுக்கு இரத்தம் தெரியவில்லை
அவனழுத சத்தம் புரியவில்லை
ஆனால் சாட்சியின் மனச்சாட்சியின்
அசத்திய வன்கூடு
அடியோடு முறிந்து சரியும் சத்தம் மட்டும்
தெளிவாகக் கேட்டது.
மு.இ.உமர் அலி
2014 Sept 5th



Winston Fernando, இ.பியின் இதய இரைச்சல்கள், RikaZz Aßdullah and 51 others like this.
1 share

Abdul Hamed E Sahurudeen .
எங்கோ சுடுகிறதா!! இல்லை எங்கும்
சுடுகிறதா!! தெரியவில்லை,,ஆனால்
சுடுகிறது என்பதுமட்டும் உண்மை,,,
5 September at 18:15 · Edited · Unlike · 4

மா.சித்ரா தேவி சாட்சி,சாட்சி+ மனச்சாட்சி
5 September at 18:38 · Unlike · 2

வளர்மதி சிவா ஆனால் சாட்சியின் மனச்சாட்சியின்
அசத்திய வன்கூடு
அடியோடு முறிந்து சரியும் சத்தம் மட்டும்
தெளிவாகக் கேட்டது//அருமை
6 September at 08:03 · Unlike · 2

Fathima Sharmila Jeinulabdeen · 12 mutual friends
"Raja neethiya " and "Dewa neethiya".... In a nutshell!!!
Beautiful!!
6 September at 11:33 · Unlike · 1

தமிழ்ப் பித்தன் வார்த்தையில் சொல்லமுடியாது
அந்தளவுக்கு சொல்லாடல்
வியக்க வைத்தது நண்பா...See More
6 September at 22:54 · Unlike · 3

Mmed Amein some women utter wild lie to safeguard their own immodesty & sling mud at men.But, the bitter truth one day will surface to disprove their slandering- Allahu Akbar!!!
7 September at 05:52 · Unlike · 1

Mohamed Ismail Umar Ali பின்னூட்டங்களுக்கு நன்றிMmed Mmed Amein, Ganesh Gajine,Fathima Fathima Sharmila Jeinulabdeen,வளர்மதி சிவா,மா.சித்ரா தேவி,bdul Abdul Hamed E Sahurudeen
7 September at 15:38 · Like

றாபியின் கிறுக்கல்கள். அருமையான வரிகள் நண்பா.
7 September at 15:55 · Unlike · 1

இ.பியின் இதய இரைச்சல்கள் அருமையான..
பதிவு..!
8 September at 08:38 · Unlike · 1

Arumuga Nainar Arumai
10 September at 20:58 · Like

0 கருத்துக்கள்:

Post a Comment