நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, September 14, 2014

சிரந்தாழ் நங்கை


 
 
சிரந்தாழ் நங்கை
இயல்பால் கன்னம் சிவந்தாள்!

மெல்ல வேகமாய் நடந்தாள்
மனம் கொல்ல வைத்தெனைக் கடந்தாள்!

நகைச்சொல்லைக் கேட்டாள்
உடன் செவி சிவந்தாள்

சினந்தாள் சிலிர்த்தெழுந்தாள்
தலை நிமிர்ந்தாள்

விழி திறந்தாள் தீ உமிழ்ந்தாள்
விடுக்கென விரைந்தாள்!

மு.இ.உமர் அலி
2014 sept 14th

0 கருத்துக்கள்:

Post a Comment