நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, January 8, 2014

பனிப்புயல்












உலகமெங்கும் பனிப்போர்
துருவத்திலே பனிப்புயல்
ஆங்காங்கே பனி மழை
உறைந்ததங்கே நீர் நிலை!!

துருவச்சுழற்சியோ
பருவப்பெயர்ச்சியோ
உருகுது பனி மலை எலாம்
பெருகுது துருவக் கடலெலாம்!

கதிரவனுக்கு சுகவீனம்
அவன் உடலிலே
சற்று பலவீனம் அவன்
சடுதியாய் ஓய்வெடுக்க

தூறுது பனி மழை
குறையுது வெப்பநிலை
கூடுது குளிரு
கொடுகுது உடம்பு!

பாவைகள் போல
பனித்தொப்பி போட்டுக்கொண்ட
கட்டிடக் கூரைகள்

பளிங்கு இலை காய்த்த
மரங்கள்
சருகுகளுக்குப் பதிலாக
விசிறப்பட்ட பனித்துகள்கள்!

அனைத்துமே உறைந்து கிடக்க
ஓடுது உதிரம் மட்டும்
தேடுது உடம்பு சூடு!
பாதையில் பனிப்படை
அதனால் வந்தது வழித்தடை

பனி ஊசி வீசி
தாக்கிடும் காற்று
நீ யோசி வெளியில்
வந்து சுற்று

பனியப்பிய மரங்களெல்லாம்
இனிஎப்பாடி தப்பிடுமோ?
பனிமலை வாழ் கரடி,
நாய்கள் இப்போ எங்கேதான்
மறைந்திடுமோ?

கம்பளி கொடுப்பார் யாரோ?
தணலடுப்பு மூட்டுவாரோ?
கொடும்பனி இதுவோ
தசாப்தங்கள்
தாண்டி வந்து கடும் வதை
கொடுக்கிறதோ !

கிழக்கிலே மழை வெள்ளம்
மேற்கிலே பனி துள்ளும்
படைத்தவன் அட்டவவனை
தடுத்தவன் யாருமிலை

இரட்டைக் கம்பளி
இனிமேல் நீ அணி
புரட்டிப்போடுகின்ற
இறைவனை நீ பணி


குறிப்பு :-துருவசுழற்ச்சி -polar vortex


 - உமர் அலி முகம்மதிஸ்மாயில்


0 கருத்துக்கள்:

Post a Comment