நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, January 8, 2014

அரை நிலா












அடைபட்டுக்கிடந்து
அலுத்துப்போக
அறையின்
திரையை  விலக்கினேன்

அங்கே ஒரு
அடியும் இல்லா
கைப்பிடியும்  இல்லா
கிண்ணம் கண்டேன்

ஆடவில்லை
அசையவில்லை
நிரம்பி வழிந்த ஒளி
ஒழுகுகிறது வானத்தில்!

அலுத்த மனதிற்கு
ஆறுதல் சொல்கிறது
உள்ளக்குலந்தைக்கு
ஆரிரரோ  பாடுகிறது!

ஆம் அரை நிலா
இருளில் குளிக்கிறது
நட்சத்திரங்கள்
ஒளித்திருந்து  காண்கின்றன!


                   -உமர் அலி  முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment