நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, January 4, 2014

கோப்பத்தைசோறு!




'கோப்பத்தை'

'கோப்பத்தை' என்ற சொல்லு
எங்கிருந்து வந்தததென்று
இப்பத்தை ஆட்களுக்கு 
தெரியுமோ தெரியாது!

முதிர்ந்த கமுகம் பூக்கூடு
உதிரும் பொன்னிறத்தோடு
பத்திரப்படுத்திடுவார்
எதிர்கால நினைப்போடு!

குழைந்த குறுனல் சோறு
தோலிக்கருவாடு சேர்த்தரைத்த
உப்புக்கொச்சிக்காய் அல்ல
கூநிச்சம்பலுடன் !

பொடிக்கருவாடு போட்டு
முருங்கையிலை
சுண்டலோடு
சுட்ட
சிறு துண்டுக்கருவாடும்
சேர்த்துக் கட்டிடுவார்
சுடுசோற்றோடு !

நோய் கொண்டு
நா நொந்து
சோட்டைப்பட்ட ஆட்களுக்கு
வீட்டிலேயே செய்து
சோட்டைக்கு கொடுப்பாங்க !

சொந்தத்தில் உள்ளவர்கள்
விரும்பிக் கேட்டதென்று
உப்புப் போட்டு
செப்பாக செய்வாக!

நினைக்கையில்
வாயூறும் கை
நனைக்கையில்
சுவையேறும் !

புதுவகை மணமிருக்கும்
அறு சுவை குடியிருக்கும்
இதுவகை இன்றில்லை
தேடியும் கிடைப்பதில்லை!

கமுகை காணவில்லை
பூப்பதையும் பார்ப்பதில்லை
"கோப்பத்தை "கிடைப்பதில்லை
அதனால்
கோப்பத்தைச் சோறுமில்லை!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 Jan 4th
 — with Nabrish Khan M TCamer Rila,தடாகம் கலை இலக்கிய வட்டம் and 41 others.
Like ·  · Stop Notifications · Share · Edit
  • Mm.mohamed Kamil நினைக்கவே வாயுருகின்றது...!! கமுகு மரம் எப்போதே அழிந்து விட்டது எமது பகுதியில் இன்னும் கொஞ்சம் காலம் போனால் எமது குழந்தைகளுக்கு தென்னை மரத்தை கூட புத்தகங்களிலும் இணையத்தளங்களிலும் தான் காட்ட வேண்டும் இழந்துவிட்ட பாரம்பரியத்தில் இதுவும் ஓன்று... சபாஸ்..உங்களது பணி தொடர அடியோனின் வாழ்த்துக்கள்.
  • Musthafa Abulkalam அபாரம். பசுமையான நினைவுகள். சிறுவர்களாய் கோப்பத்ையில்
    சவாரி செய்த சந்தர்ப்பங்கள்..
    தம்பியை வைத்து காக்கா இழுப்பார்.
  • Jaleel Mohd Umar.நீங்கள் கோப்பத்தை சோத்தை அழகாய் பிசைந்து அற்புதமாய் கவிவடிவில் ஊட்டிய அருமை ஆஹா ..ஆஹா ..சுவைக்கின்றேன் .வாழ்த்துக்கள் ..
  • Mohamed Ismail Umar Ali உங்கள் விளக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி Mm.mohamed Kamil ,Musthafa Abulkalam ·,Jaleel Mohd ,Nawas Ameer
  • Thirugnanasampanthan Lalithakopanஉண்மை ..பழைய காலம் கண் முன்னே ,,எங்கள் ஊரில் திட்டும் போதும் இந்த வார்த்தை பாவிப்பதுண்டு ..ஆனால் இந்த அழகிய சொல்லாடல்கள் அருகிவிட்டன ...இனி நான் யாரையும் திட்டும் பொது பாவிப்பேன் ..ஞாபகமூட்டளுக்கு நன்றிகள் ...
  • Ganesh Gajine உங்கள் பதிவுகளில் நிறைய விழிப்புணர்வுகள் கிடைக்கிறது 
    பாராட்டப்படவேண்டிய பதிவுகள்
  • Rameeza Mohideen Yaseen vanathij vanavil
    un varthail varna jalam
    vamsam thilaika karu vendrum
    vayakam thilika
    un kavi vendum
    sala salakum aruvi pola
    un kai vannathil 
    piranthathu kavi
    koppathayum 
    pillai emparuvathij 
    vahanam than
  • Vaalarivan Kumar Ayya அன்புள்ள உமர்...! 
    வணக்கம்...!
    உங்களின் (உங்கள்...இன் ) நினைவூட்டல்... அருமையானது...!
    உணவூட்டலைப் போன்ற உணர்வூட்டல் இது...!
    கோப்பத்தை என்றால்...பெரிய வில்லை (பெரிய மட்டை) என்று பொருள்படும்.
    எப்படியோ...எங்களுக்கெல்லாம் நாவில் சுவையூற வைத்துவிட்டீர்கள்...! 
    கோக்கவிஞர்தான் நீங்கள்...!
    வாழ்க...!
  • Hassan Mohideen Bawa On ur arrival during ur vacation I would try to quench ur thirst of kopathai culture far left behind
  • தேவி பாலா அருமையான,, பசுமையான நினைவுகள்,, அண்ணா,,,
  • Dawood Ahamed நினைக்கையில் 
    வாயூறும் கை 
    நனைக்கையில் 
    சுவையேறும் !//கோப்பத்தை கட்டுச்சோறு சாப்பிடும் ஆசை வந்தாலும் அந்தக்கலை தெரிந்தவர் இங்கு யாருள்ளார்?தேடித்தான் பார்க்க வேண்டும்.
  • Azhar Atham I have tasted few weeks ago
  • Mohamed Minbak · 4 mutual friends
    Aha aha vaaiuoore saituvideerkel THANKS
  • Zainab Mariyam Fathima Thanks for your peom its remember ur past life and it's beautiful days.
  • Abu Afrid முட்டையிட்ட சேவலைப்போல் சாதனைகள் நிகழ்த்தியதாக கொக்கரிப்பதும் இல்லை.
  • Abu Afrid நினைக்கையில் 
    வாயூறும் கை 
    நனைக்கையில் 
    ...See More

0 கருத்துக்கள்:

Post a Comment