நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, January 14, 2014

தீண்டா மெழுகுகள் தூண்டா விளக்குகள்!

அல்ஹம்துலில்லாஹ் !கவிதைச்சங்கமம் நடாத்திய "தீண்டா மெழுகுகள்-தூண்டா விளக்குகள்"
என்ற தலைப்பில் எனது வரிகள்,முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது!

படிப்பதற்கு ஆசையுண்டு
பசியென்னை விடுகுதில்லை 
பள்ளி செல்ல ஆசையுண்டு
படிதாண்ட முடியுதில்லை

எழுத்தாணி ஏந்தவேண்டும்
திருவோடு ஏந்துகின்றேன்
பசி என்னை தீண்டுவதால்
படிப்பென்னை தீண்டவில்லை!

எரியாத திரியுண்டு
ஏற்றிவைக்க யாருமில்லை
எதிர்காலம் புரியாமல்
தெருவோடு அலைகின்றேன்!

பாடசாலை செல்வேனோ
நல்ல செல்வம் பெறுவேனோ
தீண்டாத மெழுகு நான்
தூண்டா விளக்கானேன்!

பெருமூச்சு குறையா நான்
தெருவோரச் சிறுவனானேன்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
 — with Ganesh Gajineதேவி பாலாZanal AliDawood Ahamed,Yacoob AliZarook A Samad and றாபியின் கிறுக்கல்கள்..
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment