நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, January 5, 2014

அட்டப்பள்ளமும் பட்டுப்பூச்சியும்!



"பட்டுப்பூச்சி"

எட்டுக்கால் ஜீவனொன்று
இரத்தம் தோய்த்தால் போல்
வெல்வெட்டு போர்த்துக்கொண்டு 
ஊர்ந்து திரிந்ததை அறிவீரோ?

தொட்டுத்தொட்டு
பார்க்கத்தோணும்
சட்டையில ஊர விட்டு
ரசிக்க தோணும்!
மீட்டுப்பார்க்க இன்னும் தேடத் தோணும்!
அத்தனை அழகு அது
அமைதியின் உருவமது
சாதுவாய் ஊர்ந்திடுமே அது காணின்
இமை மூடத் தோணாதே!

புல் நுனியில் பனிபூக்க
மண் மேனியில் இது பூக்கும்
பனி கொள்ளை போகையிலே
மண்ணுள்ளே மறைந்திடுமே!

அட்டப்பள்ளத்து நண்பன்
பெட்டிக்குள்ளே கொண்டுவந்து
கூட்டாளி மார்களுக்கு
குறைந்த காசில் விற்றிடுவான்!

அரசடித் தோட்ட நண்பன்
ஐந்தாறு தந்திடுவான்
நெருப்பெட்டி வீட்டுக்குள்
ஏழெட்டு நாட்களுக்கு
அது எந்தன் செல்லப்பிள்ளை!

பட்டுப்போல் புல்லொன்று
மட்டும்தான் தின்றிடுமாம்
அது தேடி அலைந்து கண்டு
பட்டுப்போல் அரிந்து போட்டு
பெட்டியை
அடிக்கடி திறந்து பார்த்து
எத்தனை அனுபவங்கள் !

சோடாப்போத்தலுக்குள்
அரைவாசி மண் நிரப்பி
வாடாத புல்லுப்போட்டு
உள்ளுக்குள் பூச்சி போட்டு
பார்த்திருந்து மகிழ்ந்தது
மலராக மலருது மனதினிலே!

குட்டித்தாய்ச்சி என்று
கொளுத்த பூச்சியொன்ற
எட்டிப்பார்த்திருப்போம்
குட்டி போடும்வரை!

இதுவரை எதனையும்
அத்தனை மிருதுவாக
தொடவில்லை
அத்தனை மென்மையடா!

செத்துபோனதென்றால்
சொல்லாத நண்பரில்லை
சோகத்துக்கு அளவில்லை
சிலவேளை சோறும்
தின்பதில்லை!

நண்பெரல்லாம் சுத்தி நின்று
சின்னக் குழி தோண்டி
"மையித்து "அடக்கிடுவோம்
சோகமாய்ப் பிரிந்திடுவோம் !

கிழக்கிலே
கார்த்திகை பூக்கும் மாதம்
மழை பொழியத்துவங்கும் காலம்
பூமியில் பூக்கும் இந்த பூச்சிப்பூவு
ஏழை மண்ணிலின்று
மறைந்து போச்சு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்

2014 Jan 5th
 — with Riza Mohamed HassenAhamed Ifthykar AhamedPower Ful Brain and 40 others.
Like ·  · Stop Notifications · Share · Edit
  • Arsath Careem I had same experiences.......
  • Mohamed Ismail Umar Aliநினைத்துப்பார்த்து மகிழுங்கோ!ArsathArsath Careem
  • Ashraff Khan அரசடித் தோட்ட நண்பன் 
    ஐந்தாறு தந்நதிடுவான்
    நெருப்பெட்டி வீட்டுக்குள்
    ஏழெட்டு நாட்களுக்கு 
    அது எந்தன் செல்லப்பிள்ளை

    இந்த வரிகள் எனது சிறு பராயத்தை நினைவூட்டுகிறது
  • Malini Vasanth · 25 mutual friends
    Pirantha mannukkum paalya vayathukkum senru vantha makilvum kadanthu vanthu viddom enra vethanaium thanthana kavithaiyum paddup poochchiyum. Eppady ithai maranthu ponen
  • Arsath Careem small kind request nana...please keep gap between your every priceless poems...because while we read one, new arrivals steal that sweat memory from us ....if u keep gap, at least we can stay with that some days....
  • Karthigai Nilavan அருமை!
  • Vetha ELangathilakam · 12 mutual friends
    என்னைக் கவர்ந்த எங்கள் பனை வளவிற்குள் சிறு வயதில் கண்டு ரசித்த பூச்சியிது.
    பதிவிற்கு மிக்க நன்றி. இன்றைய நினைவு பின்னைய கவிதையானது.
  • Azhar Atham Superb kaka !!!! U remembering my childhood ecperiance
  • றாபியின் கிறுக்கல்கள்.பட்டுப்பூச்சிக்கே எழுதத் தெரிந்திருந்தால்க் கூட தன்னைப்பற்றி இவ்வளவு அழகாக எழுதியிருக்காது. 
    அருமையான வரிகள் நண்பா...!
  • Sameem Moosa அரசடித் தோட்ட நண்பன் - Samsudeen.
  • Razeen Sikkanther Excellent, no comments,,
  • Mohamed Ismail Umar Ali அட்டப்பள்ளம் சம்சுதீன்,அரசடித்தொட்டம் யோகேவரன்Sameem Sameem Moosa
  • Ganesh Gajine முதல் முதல் பார்க்கிறேன் இப்படி ஒன்றை அநேகமாக அடுத்த கவிதை இரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சியை பற்றியும் வருமோ உங்கள் அனுபவம் எப்படி வரும் !வரும்! உங்கள் ஆற்றல் அப்படி
  • தேவி பாலா முன்பு மழை காலங்களிள் இதை அதிகமாய் பார்க்க முடியும்,, இப்போது இதை எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை,,, அருமையான மலரும் நினைவுகள்,,, நன்றி
  • Dawood Ahamed துள்ளித்திரிந்த எமது பள்ளிப்பருவத்தின் செல்லப்பிராணி பட்டுப்பூச்சி. ஏழை மண்ணிலின்று 
    மறைந்து போனதை தேடிப்பிடித்து ஞாபகப்படுத்திய அழகியல் கவிதை.அருமை.
  • Rameeza Mohideen Yaseenபட்டுப்பூச்சிக்குள் பவித்திரமான நினைவலைகள்,நீங்கா உம் நினைவுகளை பாங்காய்ச் சொன்னீரே!
  • Zyraz Yazeen u know , uncle almost after 2 1/2 decade last week ,fortunately @ SESUL புல் வெளிகளில் கண்டேன் இரண்டு பட்டுப்பூச்சிகள் and safely collected with lot of past memories and gave it Abbad.and still I memorize the places @ home where I safely kept.
  • Passarai Kaawathai Kanagarajah இதனை பார்த்தபோது அதே போன்றதொரு அழகான அந்தநாள் ஞாபகம் நினைவூட்டிச் செல்கிறது கறுப்பு நிற சில் வண்டினை ஒரு தீப்பெட்டியில் இட்டு அதன் ரீங்கார நாதத்தினை நணபர்களோடு சேர்ந்து ரசித்த காலம் வாழ்வில் வசந்தகாலமாய் தழுவிச் செல்கிறது....நன்றி ஐயா...
  • Lemogenee Ravishanker · 5 mutual friends
    Fantastic malarum nenaivukal
  • Fariz Ahamed overwhelmed... and recalled sensational school days... but worried that our kids missing these....
  • Jaleel Mohd அருமை பட்டு பூச்சை தொட்டு தொட்டு ரசிப்பது போன்று உங்கள் கவிதையை ரசிக்கின்றேன்..
  • Mohamed Ismail Umar Ali பட்டுப் பூச்சிய நினைவுகளால் தொட்டு வருடிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்!
  • Deepthika Miranda very nice
  • Krish Mani நிறைய பிடித்து விளையாடியதுண்டு! இதோடு வண்ணத்துப் பூச்சி,பொன் வண்டு! பூக்களின் தேன்(மது அல்லது nectar என்று சொல்லவேண்டும்) பூவிலிருந்து உறிஞ்சியதுண்டு!
  • Abu Afrid பட்டுப்பூச்சி அழகியதொரு படைப்பு அருமை அருமை

0 கருத்துக்கள்:

Post a Comment