நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, January 3, 2014

லஞ்சம்





பிற மொழிச் சொல்லடா
இது பலரைக் கொல்லும் 
விசப்பல்லடா! 
உண்மையை மறைத்து
குழி தோண்டிப் புதைத்து!
கறுப்படிக்கும் காகிதம்
கறை படிந்த கைகளுக்கு
உரமூட்டும் அயோக்கியம்!

கொடுப்பவனுக்கும் ஆசை
எடுப்பவனுக்கும் ஆசை
அடுத்தவனின் அழுகையோசை
இவர்களுக்கு இன்னிசை!

வரி குறைப்பதற்கு
வாரி இறைப்பார்
வரி எழுத்தை மாற்றியெழுத
முறை தவறிக் கொடுப்பார்!

வரிசையில் வராமல்
வழி மாறி வந்து
இருக்கையில் இடம் பிடிப்பார்!

இருக்கின்ற இடத்திற்கு
இல்லாத உறுதிப்பத்திரம்
திருத்தி எழுதுகின்ற
போலிகளை பிறப்பிக்கும்
போக்கிரி
வேலிகளை நகர்த்துகின்ற
தந்திரி!
சிலருக்கு இது தானே
மதியூக மந்திரி!

அடுத்தவன் மனமெரித்து
அதில் தணல் எடுக்கும்
அகங்காரி!

கறையான்கள் கூடு
இதில் இரையாவோர்
இன்று அதிகம் பேரு!

வெள்ளை காகிதத்தில்
அலங்கோலமாய் கிறுக்கும்
கறுப்புப் பேனா!

பொன்னையும் ,பொருளையும்
லஞ்சமாக கொடுத்த காலம்
இந்நாளில் பெண்ணையும்
கேட்கிறதாம் பாருங்கள் இது
கொடூரத்தன் அலங்கோலம்!

பிரிந்தவரை இணைப்பதுக்கும்
கொடுக்குறாங்க
இருப்பவரை இதைக்கொடுத்து
பிரிக்கிறாங்க!

உரிமைகள் தடுத்துவிட்டு
நிறைவேற்ற
உரிமையாக கேட்கிறாங்க!

வெட்கம் இவர்களிடம்
விலகிப்போனது
ஆசை அதிகமாக
குடியேறியது!

வாக்குக் கேட்டு லஞ்சம்
வாக்கை நிறைவேற்றவும்
கேட்கிறார்கள் கிஞ்சம்!

பார்த்துக்கவனியுங்க
பலபேரு இருக்கிறாங்க
பங்கு பிரிக்கவேனும்
பட்டும் படாமலும் கேட்கிறாங்க!

ஆண்டவனுக்கு லஞ்சம் கொடுத்து
நரகத்தில் இருந்தும்
தப்ப எண்ணினாரோ
தெரியவில்லை!

யாருக்குக் கொடுத்தாலும்
நீதியாளன் அவனிருக்கான்
சரியான தீர்ப்பெழுதி
தண்டனையும் தந்திடுவான்
வல்ல இறைவன்தான்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
 — with Mithath Maruthur.
Like ·  · Stop Notifications · Share · Edit
  • Dawood Ahamed லஞ்சம் ...கறை படிந்த கைகளுக்கு
    உரமூட்டும் அயோக்கியம்!//அருமையான வரிகள்....
  • Mmed Amein WE must condemn this corruption & eradicate from society not only by poetry but also by public agitation. You know how many culprits bribed politicians to grab opportunity to snatch the job of innocent,poor persons employment,and now they all enjoy lion share?
  • Rameeza Mohideen Yaseen வெட்கம் இவர்களிடம் விலகிப் போனது,ஆசை அதிகம் குடியேறியது.பணம் பத்தும் செய்யும் ,என்பதனால் பாவக்கறையையும் பதவி மோகத்தையும் ஏழையின் கண்ணீரோடு கையேந்திப் பருகினரே!

0 கருத்துக்கள்:

Post a Comment