நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, January 24, 2014

எருக்கம் பூ !



வண்டுகளுக்கு
இயற்கை வைத்த
வண்ணப்பொறி !

வண்ணத்துப்பூச்சிகளின்
அன்னசாலை !

ஒளிபார்த்து ஒற்றைக்காலில்
நடனமாடும்
நந்தவனத்து நாட்டியக்காரி!

இரவின் காதலில்
சில மலர்
பகலின் காதலில்
பல மலர்!

பனிப்பூசி
முகம்கழுவி
இதழ்விரித்து
சிரிக்குது

ஆண்மையையும்
பெண்மையையும்
சிலவேளை
அகத்தே கொண்ட
அர்த்த நாரீ

ஒளிக்காலம்
தூண்டிய
ஒளிக்கோலம்!

ஒற்றைக்கதிருக்குள்
ஒளித்திருக்கும்
எத்தனையோ நிறங்களை
பிரித்துக் காட்டி
புரியவைத்தாய்!

உந்தன் வியர்வையே
இங்கனம் இனிப்பென்றால்
உன் சருமத்தின் மென்மையை
எங்கனம் சொல்வது?

அமுதிற்கே
அடைக்கலம் கொடுத்திடும்
உன்னை
எதற்கு ஒப்பிடுவேன்!

காற்றுடன் கலவியுற்று
நீ பெற்ற
புத்திரரோ உந்தன்
வாசனை?

அலைபாயும் மனத்தோடு
அசைந்தாடும் மலர்காணின்
அகமெல்லாம் அமைதியாகும்
முகமெல்லாம் பூவாகும்!

மங்கலத்தில் கைகோர்த்து
சிங்காரத்தில்
உட்கார்ந்து சங்கேத
சேதிசொல்லும்
மலர்களை
அமங்கலப்படுத்தலாமோ?

எருக்கம் பூவுக்குள்
எத்தனை அழகு
யாருக்கும் புரியவில்லை
அது
எத்தனை வியப்பு!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 01 24
 — with Neelamegam NeelaParthibaraja NeelamegamVittukkatti Mastan and 43 others.
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment