நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, January 12, 2014

பூட்டும் திறப்பும்!













உன்னையே நீ
பாதாளச்சிறையில்
பூட்டி வைத்து விட்டு
திறப்பத்தேடி
அலைகிறாய்
நீ தொலைத்த சாவி
துருப்பிடித்து
உன் காலடியில்தான்
கிடக்கிறது!

குனிந்து எடு
குரோதக் கறைகழுவு
அறியாமை இருள் அகற்று
அன்பு செய் ,
கனிந்துபார்
மற்றவரை மதி
இப்போது
பூட்டப்பட்ட
உன் மனக்கதவை திற
ராஜபூட்டும் திறபடும்!

மனத்துக்குப்போட்ட
பூட்டை சிந்தனையால் திற
புன்னைகை வெடி வைத்து
அந்த திறக்காத
மலைப்பூட்டை திற!

பூட்டும் திறப்புமே
உலகத்தின் சூட்சுமம்
பூட்டியது திறக்க வேண்டும்
திறந்தது மூட வேண்டும்
உன் வாயும் அப்படித்தான்
மனமும் கூடத்தான் !

வேளைக்கும்,ஏழைக்கும் திறக்காத வாயும்
கதவும்
உலகத்தின் சாபம்!

ஏழைக்கு அன்பு காட்டு
கோழைக்கு கருணை காட்டு
தோல்வி எனும் பூட்டினை
நீயாக திறந்திவிடு
தானாக வெற்றி வரும்!


       - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

0 கருத்துக்கள்:

Post a Comment