நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, January 1, 2014

முதியோரில்லம்


இவர்கள் இல்லங்களில்
தடுக்கி விழுந்த மானிடம்
இடுப்பொடித்துக் கொண்டதா?

வந்து சேர்ந்த 
மகாலட்சுமி மனம்
நொந்து
இவர் மனம் ஒடிய வைத்தாளோ?

அள்ளிக்கொடுத்த
அட்சய பார்த்திரங்கள்
அன்புக்காய்
திருவோடு ஏந்தும்
தற்கால சித்திரங்கள்!

வற்றாத சுனைகள் விட்டு
என்றும் பிரிந்தோடிய
நதிகளின்
கருமூலங்கள்

துரத்தியவர் நினைவிலே
புரளுகின்ற
வெறுங்கூட்டுப் பறவைகள்!

சிலவேளையில்
பிள்ளைகள்
வீட்டு விழாக்களிலே
வேலைக்காரர்களாய்
தற்காலிக மாறுவேடம்
பூண்டவர்கள்!
பிள்ளையின் நடிப்பை
வெற்றி பெறச்செய்வார்கள்!!

அம்மா வேலைக்காரி
அப்பா தோட்டக்காரன்
சொந்த வீட்டிற்குள்
அரங்கேறியது சோக நாடகம்!

சனியன் என்ற
பூக்களால் அடிக்கடி
அர்ச்சிக்கபட்டு
அறுத்துவிடப்பட்ட
தொப்பூள் கொடிகள்!

பிள்ளை தூங்குவதற்காய்
அன்றுகளில் துயிலவில்லை
இன்று துரத்தப்பட்டதால்
இவர்க்கு தூக்கமில்லை!

எங்கிருந்தாலும்
என்னசெய்கிறானோ(ளோ)
தூங்கினானோ
உண்டானோ என்று

தூங்காமல்
உறங்காமல் நினைவுகளை
புறாவாகத்தூது அனுப்பிவிட்டு
காத்திருக்கும் கடவுள்கள்!

அப்பாடா தீர்ந்தது
தொல்லை என்று
மூச்சுமுட்ட சாப்பிட்டு
நிம்மதியாய் மூச்சுவிடும்
சாத்தானின் சகாக்களை
பிறப்பால் தத்தெடுத்து
தாய்ப்பால் ஊட்டியவர்கள்
அன்பால் அணைத்தவர்கள்!

பிரிவுக் குளிரிலே
கொடுகிக்கொண்டு
போர்த்துக்கொள்ள
உறவுப்போர்வை தேடுபவர்ககுள்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
 — withகவிதாயினி தாமரைBaithullah Sinnelebbe,Dawood Ahamed and 43 others.
Unlike ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment