நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, January 4, 2014

கமுகஞ்சிரிப்பு!



"கமுகஞ்சிரிப்பு "

பொம்மிப்புடைத்த கமுகம் பாழை
விம்மிப்புடைத்து வெடித்தவேளை
பரதம் நிகழ்ந்ததே , கமுகம் குலை
பல்லின்றிச் வெண் பற்காட்டி சிரித்ததே!

ஆண்களெல்லாம் அடங்கிவிட
பெண்களெல்லாம் இடம்போதாதென
பிணங்கிவிட அகத்துக்குள் அறப்போர்
சலனமற்ற ஒரு கலகம்!

சிறுகச் சிறுக சேர்ந்த பெருமூச்சு
மறமறத்த ஓசையுடன்
சிறையுடைத்து வந்ததடா!
பூவிரிந்து சிரித்ததடா!

பெற்ற அன்னையின் பாதத்தில்
இளம் பாழை
அரிசிப்பூச்சொரிந்து மகிழ்ந்ததடா!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 Dec 4th
 — with Rameeza Mohideen Yaseen,Zanal AliKrish Mani and 38 others.
Like ·  · Stop Notifications · Share · Edit
  • தேவி பாலா மிக அருமை,,, எங்கிருந்து இப்படி வார்த்தைகள் அருவியாய் கொட்டுகிறது,,, தொடரட்டும் வாழ்த்துக்கள்
  • Rameeza Mohideen Yaseen நல்ல கவிஞனிற்கு வார்த்தைக்குப் பஞ்சமில்லை,மீன்பாடும் தேன்நாட்டில் மழலையும் கவி பேசும்,தென்னையும் பனையும்,கரும்பும் ,நெல்லும் நூலும் பரந்து கிடக்கும் பூமியது.
  • Ganesh Gajine "அருமை " நண்பரே மிகவும் அருமை தொடருங்கள்
  • Thirugnanasampanthan Lalithakopanவைரவர் பந்தல்களை அலங்கரித்த உன் குமரிச் சிரிப்புகள் எங்கே ...வாழ்த்துக்கள் அண்ணா..
  • Vaalarivan Kumar Ayya அன்புள்ள உமர்...!
    கமுகு என்றால் பாக்குமரம் என்பதாக ஞாபகம்.
    அன்புகூர்ந்து எதற்கும் ஒருமுறை தமிழ் அகர முதலியைப் பார்த்துவிடுங்கள்.
    ஐயம் தெளிவாகும்.
    ஆனால்...நீங்கள் குறிப்பிடுவது போல்...உண்மையில்...
    "அகப்போர் அகற்றும் அற்புத மருந்து 
    சுகமாய்ச் சிரிக்கும் தென்னம் பாளைதான்...!"
    தமிழ்ச்சித்த மருத்துவர்கள் இதனைக் கூறுவார்கள்!
  • Dawood Ahamed "கமுகஞ்சிரிப்பு "..ஒரு கிராமியக்கவிஞனின் அழகிய கற்பனைககண்ணோட்டத்துடனான அருமையான படைப்பு.
  • Mohamed Ismail Umar Ali Vaalarivan Kumar Ayya அவர்களுக்கு ! வல்ல அல்லாஹ் உங்கள் மீது சாந்தியை உண்டாக்குவானாக .ஆமாம் ஐயா தங்கள் கருத்து சரிதான்,அடியேனின் சிந்தனையும் முதல் நாள் விரிந்த கமுகம் பாழையின் வெண் தன்மையைநினைத்தே ஓடியது. வெய்யில் படப்பட ஒளித்தொகுப்பு நடந்து அப்பாளை படிப்படியாக மஞ்சளாகி பின் பச்சையாக நிறமாக மாறுகின்றது!
  • Mohamed Ismail Umar Ali நன்றி சகோதரர் ,இலக்கியவாதி Dawood Ahamed அவர்களே!
  • Mohamed Ismail Umar Ali இக்கவிதைக்கு கருத்துத்தெரிவித்த ,தேவி பாலா .RameezaRameeza Mohideen Mohamed Yaseen,Thirugnanasampanthan Lalithakopan ,Ganesh Gagine ,Veeramaruthu Veeramaruthu ,Suppiahமற்றும் விருப்பிட்ட,சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்
  • Thaiyeeb Vellaiyan அருமையான படைப்பு......வாழ்த்துக்கள்..........
    6 hours ago · Like

0 கருத்துக்கள்:

Post a Comment