நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, January 12, 2014

முயற்சி

















வீழ்ந்தால் விழுந்து
அங்கேயே உக்கி இறந்து
மக்கி மடிந்து 
மங்கிப்போகும் உலகிலே

தெருவோரம்
திருவோடு சகிதம்
போவோர்
வரூவோரின் முகம் பார்த்து !
அங்கவீனத்தை
முதலீடு செய்து
அனுதாபத்தால்
சில்லறைகளை
அறுவடை செய்வோர்கள்
மத்தியிலே,,,,,,,,,,,,,!

ஒதுங்கி நின்று
ஓரமாய் பெருமூச்சு
விடும் ஆட்களிலே
வீரமாய் வெளி வந்து
மூக்கிலே விரல் வைக்க
வைத்துவிட்டான்
முன்னுதாரணம்
ஆகிவிட்டான்!

வீழ்ந்த தடம்
மாறுமுன்னே
வீர வேர்விட்டு
நம்பிக்கைத்
தளிர்விட்டு
ஒற்றைகாலால்
உதைத்கின்றான்!
உலகத்து நீதியினை!

ஒருகாலில் குருதியோட
உருக்குக்காலில்
அவன் தெம்போட
வீதியிலே அவனோட
கண்திறந்து நீபாரு !

உதாரணந்தான்
ஆகிவிட்டான்
உவமானம் ஆகாதே
நீ
உவமேயம் ஆக்காதே
உடலுறுப்பு குறைந்ததனை!

தேனென்றால் இனிப்பதில்லை
தேன் தின்றால்தான்
இனித்துவிடும்!

ஓட்டுக்குள் முடங்காமல்
சோம்பல் முறித்து
மூக்கால்
ஓட்டை முட்டியதே
குஞ்சின் முதல் முயற்சி
முதல் வெற்றியும் கூட!

அடைபட்டு இரவலில்
சுவாசிப்பதை விட
விடுபட்டு சொந்தமாய்
நீ சுவாசி!

முயலாமை உன் இயலாமை
முயற்சி உன் மூலதனம்
வெற்றி உன் மகிழ்ச்சி!
வாழ்விலே நீ பெறு எழுச்சி!


   -உமர் அலி முகம்மதிஸ்மாயில்!


0 கருத்துக்கள்:

Post a Comment