நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, January 23, 2014

நான் அவளைக் காதலித்தேன்!



நான் அவளைக்
காதலித்தேன்
இயற்கையான வரைகலைஞனானேன்!

நான் அவளைக்
காதலித்தேன்
வடிவான சிறு வீடு
அல்ல ஒரு கூடுகட்ட
திட்டமிட்டேன் !

நான் அவளைக்
காதலித்தேன்
கூடுகட்ட கிளை தேடி
அலைந்தேன்!

நான் அவளைக்
காதலித்தேன்
வெளியிலே
வெயில் மழைதாங்க
வல்லியதும் ,
உள்ளே அவள் பட்டுடம்பில்
பட்டிடா
மெல்லியதும் என்ற
புல்லினம் தேடிப்பறந்தேன்!

அந்தரத்தில் ,
மரக்கிளையில் அஸ்திவாரம்!

பறப்பின் கலைகளெல்லாம்
பயிற்சிசெய்தேன்

சிலதடவை தோற்று
பலதடவை வென்றேன்

ஏனெனில் நான் அவளைக்
காதலித்தேன் !

சிறுகச்சிறுக
வளர்ந்தது கூடுமட்டுமல்ல !
எங்கள் காதலுந்தான்!

களைப்பில் நான்
இளைப்பாறும் போது
பக்கத்தில் வந்து
அவள் தரும் முத்தம்
இழந்த சக்தியை
பலமடங்காய்
மீட்கச் செய்யும் யுத்தம் !

ஏனெனில் அவளுக்கு புரிந்தது
நான் அவளை காதலிப்பது!

முடிந்தது தவம்
நிறைந்தது கூடு!
அதனுடன் என்மனதும்தான் !

பொறுக்கியெடுத்த
பஞ்சுகளால் அவளுக்கு மெத்தை !

இருபடைப் புற்பின்னலால்
காற்றரிக்கும் அரிதட்டு!

இருவரும் நடமாட இடம்போக்கு!
குஞ்சுகள் வளர்ந்திட மேல்மாடி !

பிடித்துவைத்த மின்மினிகளே
இங்கு இரவு விளக்கு!

இயற்கையே எங்களுக்கு
பூந்தோட்டம்!

இது என் காதலிக்கு நான் கட்டிய
தொங்கும் தாஜ்மகால்!

தென்றல்
எங்ககளைத்தாலாட்டும் !

விடாமழை
சற்று பயமுறுத்தும் !

இடி மின்னலில்
சற்று இறுக்கமாவோம்!

எங்களுக்கு
நாளையைப்பற்றி பயமில்லை !

இன்றே நமது!
ஏனனில் நாங்கள்
இன்னும் காதலிக்கின்றோம்!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்

குறிப்பு:இது எனது முன்னைய பதிவுகளில் இருந்து
 — with Prajmohammed SalahudeenThava ParamesShibly Ahamed and 44 others.
Like ·  · Stop Notifications · Share · Edit

0 கருத்துக்கள்:

Post a Comment