
கஞ்சிக் கிடாரம்!
..............................
இன்றைக்கு எங்கட கஞ்சி முறை
நேற்றே வாப்பா சந்தையில
சாமானெல்லாம் சரிபார்த்து
வாங்கி விட்டார்
சகர் முடிந்ததிலிருந்து
ஒரே தடபுடல் !
சின்னம்மா பெரியம்மா மாமிமாரும்
சீக்கிரமா வந்திட்டாங்க
செருகிக்கட்டிக்கிட்டு
உருப்படியா வேலை செய்ய
பச்சரிசி தண்ணியில ஊறுது
பழத்தேங்காய் மூலையில காயுது
மிச்சரிசி கோணியில
கொண்டுபோய் வைக்கிறாங்க
கொட்டுண்டு போகாம !
ஏலங்கறுவாய் ஏக அளவில்
ஏனத்தில் எடுத்து
தூசி இல்லாம
துப்பரவு செய்த
உப்பும் பக்கத்தில் இருக்கும்
அல்லையல் துருவிலைகள்
பிள்ளைகள் தலையிலே
கொல்லையில் இருந்த கொள்ளி
கொஞ்சம் தள்ளி அடுப்படியிலே !
அருவக்கத்திகளுக்கும்
உரித்த தேங்காய்களுக்கும்
இடையில் நடந்த மோதலில்
தோற்றுவிட்ட முழுத்தேங்காய்க்கு
ஆணாகவும் பெண்ணாகவும்
இருபிள்ளை பிறக்கும் !
தேங்காய்த்தண்ணி குடிக்க
நோம்பில்லாத சிறுவர்கள்
முண்டியடித்து
இருண்டு கையிலும் வாங்கி
மொண்டு குடிக்கிறாங்க
பள்ளிக்கிடாரம் நேற்றைய
கஞ்சி வீட்டில் இருந்து
அரைச்சி அரைச்சி வருகுது
சுமந்து வரும் சிறுவர்கள்
மூச்சிரைக்கிரார்கள்!
பச்சமிளகாய் முழுமின
பச்சத்தண்ணியில விழுந்து
கடசிக்குளியல் குளிக்குது
உரித்த வெள்ளைப்பூடு
விஷயம் தெரியாமல்
பல்லுக்காட்டி ஈயென்று சிரிக்குது !
கந்தோட முறிச்சிவந்த கறிவேப்பிலை
இடுங்கப்படாமல் இருக்கிறது
வெந்தயம் இளகுமட்டும்
அரிக்கிமிலாயில் நலைந்து நடுங்குது !
பெண்களெல்லாம் போட்டிபோட்டு
பாதித்தேங்காய்களை
துருவித்தீர்க்கிறார்கள்
பூவொருபக்கம் சுரட்டையொருபக்கம்
மலையாய் குவியுது !
இடைக்கிடை நாங்க சென்று
தேங்காய் பூவள்ளி
கொடுப்புக்க அடக்குவோம் முறைத்தால்
பழித்துவிட்டு விடுக்கெண்டு மறுக்குவோம்!
கருங்கல்லு அடுப்பில
பூக்கம் பாளைகளையும்
புறவெட்டுத்துண்டுகளையும்
நெருப்பு திங்கத்துவங்கும்!
மாமாவும் வாப்பாவும்
கிடாரத்தைவைத்து
கஞ்சி காய்ச்ச துவங்க
நெருப்புப்பட்ட கோபத்தில
கிடாரம் சூடாகத்துவங்கும் !
சுரட்டைகள் அடுப்பை அணையாமல்
தற்கொலை செய்து தடுக்கும்
அகப்பை கஞ்சி அடிப்பிடிக்காமல்
தொடர்ந்து சுழன்று கலக்கும்!
மிளகாய் வெந்தயம் அரிசி
கடைப்பால் கறிவேப்பிலை
வெளித்துள்ளி தலைப்பால் என்று
முறைப்படி சாமானெல்லாம் ஒவ்வொன்றாய்
கிடாரத்துள் இறங்கி ஆழம் பார்க்கும்
ஒன்றாய் கிடந்தது வேகும் !
எல்லாம் அவங்க முடித்துவிட்டு
உப்புப்பார்க்க மட்டும் எங்களைக்
கூப்பிடுவாங்க ஏனென்றால் நாங்க
அன்றைக்கு நோன்பில்லை !
காய்ச்சின கஞ்சியில
பிரச்சின இல்லையெண்டா
மூக்க துளைச்செடுக்கும்
முடுக்கெல்லாம் மணம் பரவும் !
பள்ளிக்கி அனுப்ப முன்னால்
பக்கத்து வீட்டுக்கும்
அங்கு வந்த ஆக்களுக்கும்
அள்ளி ஊத்தி அனுப்புவாங்க !
பாத்திரம் சுமந்ததில
நாங்க சோர்ந்தே போய்டுவோம்
ஆத்திரம் வந்திடாது
ஏனென்றால் அது ஒரு கொண்டாட்டம்!
ஆக்களெல்லாம் கலைஞ்சபின்பு
கஞ்சி பள்ளிக்கு போனபின்பு
ஓடித்திரிந்தகடைசிப்பிள்ளை
அடுப்புக்குள்ள கால் வைத்து
ஆவென்று அலறிடுவான் !
அவன்செஞ்ச தவறுக்கு
உம்மாக்கு அறைவிழும்
கொஞ்சம் முன்னாடி பெருநாளாய்
இருந்தது இல்லம் இங்கு
இப்ப கேட்குது பெரும் ஓலம்!
மு.இ. உமர் அலி
2014 june 30 — with Meeralabbai Samsunali, Rijan Muhammadh, Pesum Kavithaikal and 45 others.
..........................
இன்றைக்கு எங்கட கஞ்சி முறை
நேற்றே வாப்பா சந்தையில
சாமானெல்லாம் சரிபார்த்து
வாங்கி விட்டார்
சகர் முடிந்ததிலிருந்து
ஒரே தடபுடல் !
சின்னம்மா பெரியம்மா மாமிமாரும்
சீக்கிரமா வந்திட்டாங்க
செருகிக்கட்டிக்கிட்டு
உருப்படியா வேலை செய்ய
பச்சரிசி தண்ணியில ஊறுது
பழத்தேங்காய் மூலையில காயுது
மிச்சரிசி கோணியில
கொண்டுபோய் வைக்கிறாங்க
கொட்டுண்டு போகாம !
ஏலங்கறுவாய் ஏக அளவில்
ஏனத்தில் எடுத்து
தூசி இல்லாம
துப்பரவு செய்த
உப்பும் பக்கத்தில் இருக்கும்
அல்லையல் துருவிலைகள்
பிள்ளைகள் தலையிலே
கொல்லையில் இருந்த கொள்ளி
கொஞ்சம் தள்ளி அடுப்படியிலே !
அருவக்கத்திகளுக்கும்
உரித்த தேங்காய்களுக்கும்
இடையில் நடந்த மோதலில்
தோற்றுவிட்ட முழுத்தேங்காய்க்கு
ஆணாகவும் பெண்ணாகவும்
இருபிள்ளை பிறக்கும் !
தேங்காய்த்தண்ணி குடிக்க
நோம்பில்லாத சிறுவர்கள்
முண்டியடித்து
இருண்டு கையிலும் வாங்கி
மொண்டு குடிக்கிறாங்க
பள்ளிக்கிடாரம் நேற்றைய
கஞ்சி வீட்டில் இருந்து
அரைச்சி அரைச்சி வருகுது
சுமந்து வரும் சிறுவர்கள்
மூச்சிரைக்கிரார்கள்!
பச்சமிளகாய் முழுமின
பச்சத்தண்ணியில விழுந்து
கடசிக்குளியல் குளிக்குது
உரித்த வெள்ளைப்பூடு
விஷயம் தெரியாமல்
பல்லுக்காட்டி ஈயென்று சிரிக்குது !
கந்தோட முறிச்சிவந்த கறிவேப்பிலை
இடுங்கப்படாமல் இருக்கிறது
வெந்தயம் இளகுமட்டும்
அரிக்கிமிலாயில் நலைந்து நடுங்குது !
பெண்களெல்லாம் போட்டிபோட்டு
பாதித்தேங்காய்களை
துருவித்தீர்க்கிறார்கள்
பூவொருபக்கம் சுரட்டையொருபக்கம்
மலையாய் குவியுது !
இடைக்கிடை நாங்க சென்று
தேங்காய் பூவள்ளி
கொடுப்புக்க அடக்குவோம் முறைத்தால்
பழித்துவிட்டு விடுக்கெண்டு மறுக்குவோம்!
கருங்கல்லு அடுப்பில
பூக்கம் பாளைகளையும்
புறவெட்டுத்துண்டுகளையும்
நெருப்பு திங்கத்துவங்கும்!
மாமாவும் வாப்பாவும்
கிடாரத்தைவைத்து
கஞ்சி காய்ச்ச துவங்க
நெருப்புப்பட்ட கோபத்தில
கிடாரம் சூடாகத்துவங்கும் !
சுரட்டைகள் அடுப்பை அணையாமல்
தற்கொலை செய்து தடுக்கும்
அகப்பை கஞ்சி அடிப்பிடிக்காமல்
தொடர்ந்து சுழன்று கலக்கும்!
மிளகாய் வெந்தயம் அரிசி
கடைப்பால் கறிவேப்பிலை
வெளித்துள்ளி தலைப்பால் என்று
முறைப்படி சாமானெல்லாம் ஒவ்வொன்றாய்
கிடாரத்துள் இறங்கி ஆழம் பார்க்கும்
ஒன்றாய் கிடந்தது வேகும் !
எல்லாம் அவங்க முடித்துவிட்டு
உப்புப்பார்க்க மட்டும் எங்களைக்
கூப்பிடுவாங்க ஏனென்றால் நாங்க
அன்றைக்கு நோன்பில்லை !
காய்ச்சின கஞ்சியில
பிரச்சின இல்லையெண்டா
மூக்க துளைச்செடுக்கும்
முடுக்கெல்லாம் மணம் பரவும் !
பள்ளிக்கி அனுப்ப முன்னால்
பக்கத்து வீட்டுக்கும்
அங்கு வந்த ஆக்களுக்கும்
அள்ளி ஊத்தி அனுப்புவாங்க !
பாத்திரம் சுமந்ததில
நாங்க சோர்ந்தே போய்டுவோம்
ஆத்திரம் வந்திடாது
ஏனென்றால் அது ஒரு கொண்டாட்டம்!
ஆக்களெல்லாம் கலைஞ்சபின்பு
கஞ்சி பள்ளிக்கு போனபின்பு
ஓடித்திரிந்தகடைசிப்பிள்ளை
அடுப்புக்குள்ள கால் வைத்து
ஆவென்று அலறிடுவான் !
அவன்செஞ்ச தவறுக்கு
உம்மாக்கு அறைவிழும்
கொஞ்சம் முன்னாடி பெருநாளாய்
இருந்தது இல்லம் இங்கு
இப்ப கேட்குது பெரும் ஓலம்!
மு.இ. உமர் அலி
2014 june 30