நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, June 12, 2014

கருகுகின்ற தளிர்கள்!


கருகுகின்ற தளிர்கள்!

புத்தகக் கட்டுக்கு பதில்
சமையல் கட்டில்
சாப்பாட்டுத்தட்டங்களை
தழுவுகிறான்
தினமும்
தேய்த்துக் கழுவுகிறான் !

எழுதிப்பழக வேண்டும்
இந்த வயதில் ஆனால்
இவன் அழுக்குத்துணியை
அழுத்திக் கழுகுகின்றான்
வளுதிளங்காய் வாங்க
சந்தைக்கு விரைகின்றான்.!

பால்ப்பற்களிலே பல குழிகள்
பார்க்க யாருமில்லை
ஆழமான கற்குழிகளிலே
அவன் இறங்கி
பயமறியா வயதில்
பலமான வேலை செய்கிறான்!

முட்டாசி தின்னும் வயது
பட்டாசுத் தொளில்செய்வான்
முண்டாசு தலை கொண்டு
கட்டாக தூக்குகின்றான் செங்கற்கள் !

உருப்படும் வயது
ஒருவரும் உதவவில்லை
கருவாட்டு வாடியிலே
கருகுகிறது அவன் இளமை!

ஓடி விளையாடும் வயது இது
வீதி வேலைக்கு
அனுப்பி வைத்து விட்டு
விதிஓடி விளையாடுதிங்கே

எழுத்துக்கள் அறியமுன்னே
அவன் முற்றிப்பழுத்து
பழுதாகி கொச்சை மொழியில்
பண்டிதனாகிறான்!

ஆசிரியர் வீட்டில்
பாடசாலை நேரத்தில்
பாத்திரம் தேய்ப்பதிலும்
அழுகின்ற குழந்தையை பார்த்து
சிரிக்கவைத்தும் இருக்கவைத்தும்
சீரழிந்தும் போகின்றாள்!

தரித்திரத்தை விரட்டமுடியாத
அப்பா கடற்கரைக்கு போகையிலே
பின்னால் வரும்
அவர்களின் நாயை
பலமுறை துரத்தினாலும்
அவனைத்துரத்தவே மாட்டார்!

எப்போதோ
கணவன் கைவிட்டுச் சென்றவள்தான்
அவள் அன்னை
தன்னையும் அவனின் தங்கையையும்
பசியிடம் இருந்து
பாதுகாக்க அவள் நடத்தும் யாகத்தில்
இவன்தான் தர்ப்பை!

சுமை மட்டும் சுமக்கவில்லை
நிறைவேறாத
நிறையக் கனவையும்தான்
சுமக்கின்றார் !

வழிநடாத்த தெரியாத
சில வாத்திகளின் வார்த்தைகளும்
நடத்தைகளும்
பள்ளிகளை வெறுக்க வைத்து
தூரத்தே துரத்தி விட்டுமிருக்கின்றன !

கற்காத பெற்றோரை
கற்றலின் மகிமை இன்னும்
கடுகளவும் மாற்றவில்லை
காதுகிழியக் கத்தினாலும்
அவர்களுக்க புரியுதில்லே
கல்நெஞ்சம் மாறுதில்லே !

இதுபோல இன்னும்
எத்தனையோ சம்பவங்கள்
தினமும் எத்தனையோ
குழந்தைகளை தொழிலுக்கு
அனுப்புகின்றனை
உற்பத்தி செய்கின்றன.

சுமை மட்டும் சுமக்கவில்லை
நிறைவேறாத
நிறையக் கனவையும்தான்
சுமக்கின்றார் !

ஆணிவேரை அறுத்தால்
நச்சுமரம் பட்டு விழும்
கிளைமட்டும் நீ தறிக்க
அதுவளரும் உடன் தளைத்து!

வேரோடு வீழ்த்தவெனின்
காரணங்கள் மாறவேண்டும்
யார்வருவார் மாற்றிவிடவே
கவிதையும் கட்டுரையும்
படங்களும் காட்சிகளும்
பலமுறை வந்தாலும்
இதுவரை பலனில்லை
இதுகேட்க யாருமில்லை!

மு.இ.உமர் அலி
12 june 2o14
 — with Mm.mohamed KamilKrish Mani,Thirugnanasampanthan Lalithakopan and 44 others.
LikeLike ·  · Stop Notifications · Share
  • Rameeza Mohideen Yaseenஇந்தக்கொடுமை தீர ஒரு மனதாய் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!அருமையான விடயம் கவியாய்!

    போரால் அநாதையான
    பால் மணம் மாறாத சிறுவர்கள் பரிதாபமாக
    பலியாகிறார்கள்!
  • Mohamed Ismail Umar Ali உங்கள் கருத்துக்கு நன்றி Rathy Srimohan,RameezaRameeza Mohideen Yaseen
  • Dawood Ahamed சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளை(ஜூன்-12)நினைவு படுத்தும் கவிதை.//கற்காத பெற்றோரை 
    கற்றலின் மகிமை இன்னும் 
    கடுகளவும் மாற்றவில்லை//மற்றும் //வழிநடாத்த தெரியாத 
    சில வாத்திகளின் வார்த்தைகளும்
    நடத்தைகளும் 
    பள்ளிகளை வெறுக்க வைத்து
    தூரத்தே துரத்தி விட்டுமிருக்கின்றன !/போன்ற வரிகள் ஆணித்தரமானவை.நன்றி.
  • மா.சித்ரா தேவி சிந்திக்க வைத்த கவிதை
  • Ibra Lebbai Yar yaro sheithidda seyalkalale sheyvathariya sikkal paddu seeraziyum siruvar kalai sheer tookki parkka veandi aakkapadda aakkam! Mega arumay
  • Abdul Majeeth .
    Kuzlanthai tozlil
    ozlipome
    ...See More
  • Nawas Ameer படத்தின் 
    கருவோ தனியழகு
    வாழ்த்துக்கள் 


    இன்று 
    நம்தேசத்தில் 
    சுற்றுலா ஊக்குவிப்பின் 
    அடிப்படை 
    கன்னிகழியா 
    சிறு(மி)வர்களின் 
    பலவந்த அர்ப்பணிப்பு 
    வெளிநாட்டவர்களுக்கு
  • Mohamed Ismail Umar Ali உங்கள் கருத்துக்கு நன்றி Nawas Ameer,Abdul Abdul Majeeth,கவிஞர் யோ புரட்சி,Ibra Ibra Lebbai, Srimohan
    Rameeza Mohideen Yaseen

0 கருத்துக்கள்:

Post a Comment