நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 28, 2014

ராமழானே வருக !

ரமழானே நீ வருக !வருகவே !

             இல்லத்துக்கு மட்டும் அடிக்க வேண்டாம் ஒட்டறை
நம் உள்ளத்துக்கும் அடிக்கவேண்டும் ஒருமுறை
             நல்லத்துக்கு மட்டும் கொடுப்போம் முன்னுரை
செல்லத்துக்கும் பேசோம் நோன்பில் பொய்யுரை!

           வருடத்துற்கொருமுறை ஊறிடும் பெரும் நன்மை
இம்மாதத்தில் நாமும் தூர்வாருவோம் தீங்கினை
            வருவதற்கு முன்னால் சைத்தான் விலங்கிலே
வருவார்கள் வானவர்கள் அதிக கணக்கிலே!

          அருள்மிகு மாதம் இதில் உருகுவோம் நாமும்
பொருள் பணம் நல்கி நலம் பெறுவோம் நாழும்
          இருள் அகல் உளம் ஒளிபெறும் தினமும்
இறை அருள் பெருகும் ஞாலத்தில் புரளும்!

           உணவினை மட்டும் தவிர்க்காமல்
உள உணர்வினையும் கட்டிக்காப்போம்
         மன வினை எட்டி உதைத்து மன
உணர்வினை தட்டிப்பணிப்போம்!

          ஒளியுள்ள ஓரிரவு ஒளிந்திருக்கும்மாதத்தில்
நற்பரிசள்ளி சொரியிரவு எதுவென்றும் அறியோமே
           நபிசொன்ன அவ்விரவை நழுவாமல் நாமடைய
நள்ளிரவெல்லாம் நின்று வணங்கிடுவோமே
         அவனருளை அடைந்திடுவோமே!

முதல் பிறைகண்டு தலை நோன்பு வைப்போம்
           கடைப்பிறை நாட்களில் உயர் தவம் புரிவோம்
உடற்கூறு அனைத்துமே விடுமுறை கொள்ளும்
          இடைக்கிடை மட்டும் சிறுவேலை செய்யும்!

தொட்டழிக்கும் நெருப்பு விறகினை
அதுபோல் சுட்டெரிக்கும் நோன்பு உன்தீவினை

         இரப்பவர்க்கு இருப்பவர் ஈந்திடும் மாதம்
 பருத்தவர்கள் உருவினை குறைத்திடும் நாளும்
          ஒருத்தருக்கும் விதியில்லை நோன்பை விடுவதற்கு
ஒருசிலர்க்கு விதியில்லை நோன்பு பிடிப்பதற்கு

         விண்ணவர் கூடி மண்ணிலே வருவார்
 மண்ணவர் தேடி வாழ்த்துக்கள் சொரிவார்
         பொன்னான மாதம் போற்றிப்பேணுவோம்
கண்ணாக எம்மதத்தை பற்றி வாழ்வோம்!


அனைவருக்கும் ரமழான் மாத வாழ்த்துக்கள்

மு.இ.உமர் அலி
2014 june 28

0 கருத்துக்கள்:

Post a Comment