நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, June 19, 2014

ஏனெனில் நான் கவிஞன் பகுதி -1



ஏனெனில் நான் கவிஞன்
பகுதி -1

எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
அருவிகள் கொண்டுவரும் அது
ஆறாகவும் பெருக்கெடுத்து
ஓடுகிறது !

அதற்கு 
காற்றும் இலைகளும்
நேற்றைப்பற்றி
கலகலப்பாக பேசுவது
தெளிவாகக் கேட்கிறது!

தென்றல் என்னைத்தடவி
அந்த நல்லசெய்தியை
மெல்லச் சொல்லிவிட்டுச்செல்வதும்
புரிகிறது!

மலரும் வண்டும் காதலித்து
கட்டிப்புரளும்போது
பேசும் இரகசியமும் எனக்கு
கேட்கிறது!

அல்லியும் ஆம்பலும்
அமாவாசையன்று
அழும் ஓசையும்
அப்படியே கேட்கிறது !

வில்லால் அடிபட்ட
தன் ஒற்றைக்கிளியின்
சிறகு ஊனமுற்றதைப்பார்த்து
சோடிக்கிளியில் ஒன்று
சோகமாய் பேசுவது
செவிவழியே விழுந்து
என் உள்ளத்தை கொல்கிறது!

தொடரும்......................

மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 19
LikeLike ·  · 

0 கருத்துக்கள்:

Post a Comment