நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, June 28, 2014

இப்படியும் நோன்பு..............!


இப்படியும் நோன்பு..............!
...............................................

நாலைந்து கறிகளுடன்
மாடிகளில் தலை நோன்பு
பழஞ்சோற்று கரையலோடு
குடிசைகளில் அதே நோன்பு!

ஒருவீட்டில்
ஆட்டிறைச்சி , அவித்தகோழி
இன்னும்பல இத்யாதி
வட்டிலப்பம் இறுதியிலே
குடில்வீட்டில்
முட்டையொன்றுடைச்சி
ஊத்திப்பொரிச்சி
முழுக்குடும்பமும்
உண்ணுதங்கே
இது இயற்கை செய்த விதி!

இருவர் வீட்டிலும் நோன்புதான்
பலவகை உண்டவர்க்கு
பலமடங்கு நன்மையில்லை
பழஞ்சோறு உண்டவர்க்கு
பலனிலே குறையில்லை
இது இறைவனின் மாண்புதான் !

மூக்குமுட்ட உண்டுவிட்டு
தூங்குவது நோன்பிலை
ஆக்கி மூட்ட சோறு திண்டு
பாங்கு சொல்ல முன் உறங்குவதிலும்
மாண்பிலை!

மு.இ.உமர் அலி
தலை நோன்பு-2014 june 2

0 கருத்துக்கள்:

Post a Comment