நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Friday, June 27, 2014

கிப்லா !

கடந்த 07.06 2014 அன்று ஒளிபரப்பான இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லீம் சேவையின் இலக்கியமஞ்சரியில் முகப்புக்கவிதையாக "கிப்லா" என்ற தலைப்பிலான எனது கவிதை ஒலிபரப்பானது

கிப்லா

மக்கத்துப் பக்கமாய்
இருக்குது கிப்லா
மக்களை ஒரே திசையில்
திருப்புது கிப்லா!

சொர்க்கத்து வழியை
காட்டுது கிப்லா
இக்கட்டில் வலியவே முஹ்மினின்
முகம் நோக்குது கிப்லா !

அரசாழும் ராசாக்கும் ஒன்றுதான்
அடிமட்ட ஏழைக்கும் இது மன்றுதான்
ஏற்றம் இல்லை தாழ்வும் இல்லை
எல்லார்க்கும் என்றும் ஒன்றே கிப்லா!


ஐவேளை தொழுகையினை தொழுவார்கள்
அவனியில் வாழ்வோர்கள்
அவ்வேளை அதன்திசையே உடல்மடிந்து
அடிபணிந்தும் விழுவார்கள் !

கட்டற்று போகாமல்
எம்மை கடமையுடன் காக்குது கிப்லா
திக்கெட்டும் திரியாமல்
நிலையாய் என்றென்றும் இருக்குது கிப்லா !

பூகோள இணைப்பாளி
நாம் நோக்கும் முதலாளி கிப்லா
நா கூற இறை மொழியை
நீ நோக்கு இதன் திசையை மனிதா !

ஒருவரது சொத்தல்ல
யாருடைய பங்குமல்ல
உலகத்தின் சொத்து இது
அல்லாஹ்வின் பங்கு இது!

அல்லாஹ்வை அடிபணிந்து
ஐவேளை நீ தொழுது
கிப்லாவை முன்னிறுத்தி
நாளாந்தம் நீ ஒழுகு

மு.இ.உமர் அலி

0 கருத்துக்கள்:

Post a Comment