நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, June 23, 2014

உளவலி!

status.அன்று அப்பாவின் மாரடைப்பு
இன்று
அம்மாவின் மூச்சடைப்பு
பிடித்துத்தள்ளியதே எங்களை
நடு வீதியிலே!

குடிசையும் நாங்களும்
கொடுகிக் காய்கிறோம்
எதிர்காலம் தெரியாமல்
நடுங்கித்தேய்கிறோம்

நாங்கள்
யுத்த களம் பெற்றெடுத்த
அகதிப்பிள்ளைகள்
அயல்நாட்டில் இன்று
யாருமில்லா
அனாதைப்பிள்ளைகளாக!

நேற்று முழுக்க வலி
இன்றும்வலி
நாளை எந்த வழி
யாரறிவார் எம் உளவலி?

0 கருத்துக்கள்:

Post a Comment